என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் காது கேளாதோர் நலச்சங்கத்தினர் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
    • சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஒரு செவித்திறன் குறைபாடு உடையோர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    சிவகங்கை:

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் காது கேளாதோர் நலச்சங்கத்தினர் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஒரு செவித்திறன் குறைபாடு உடையோர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு இப்பள்ளியின் ஆசிரியர்கள் சிலர், தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில மாணவிகளை சிறப்பு வகுப்புக்கு வர வேண்டும் என்று கூறி வரவழைத்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாகவும், இந்த சம்பவங்களை வெளியில் சொன்னால் தேர்வில் பெயிலாக்கி விடுவோம் என்றும், உங்களுக்கு அரசு வேலை, அரசாங்க சலுகைகள் கிடைக்காமல் செய்து விடுவோம் என்று மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் இந்த பள்ளியில் பணிபுரியும் சில ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக இங்கு பணியில் இருப்பதால், பள்ளியின் நிர்வாகத்தை தங்களின் குற்ற செயல்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாக தெரிகிறது.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி தாளாளரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நான் இந்த பணிக்கு வந்து சில ஆண்டுகள் தான் ஆகிறது. இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக தொடர் புகார்கள் வருகிறது. ஒரு ஆசிரியர் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி அந்த கேக்கை மாணவிகளுக்கு ஊட்டி விட்டதாக ஒரு புகாரும் உள்ளது. மற்றொரு ஆசிரியர் சிறப்பு வகுப்பு நடத்துவதாக கூறி சில மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார்கள் வந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவகங்கையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி வருகிற 28-ந் தேதி நடக்கிறது.
    • 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான பேச்சு போட்டி வருகின்ற 28-ந்தேதி நடைபெற உள்ளது. அதன்படி காலை 9.30 மணியளவில் சிவகங்கை, மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கத்தில் போட்டி நடைபெறுகிறது.

    மாவட்ட அளவில் நடத்தப்படும் இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ-மாணவி களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. அத்துடன் இந்த பேச்சு போட்டியில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்களில் இருவரை மட்டுமே தேர்வு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சிறப்பு பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டுமே (பள்ளிக்கு ஒருவர் வீதம்) இப்போட்டியில் பங்கேற்க முடியும்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் வட்டார அளவில் இப்போட்டி நடத்தப்பட்டு மாவட்ட அளவிலான பேச்சு போட்டிக்கு 25 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். முதன்மை கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்படும் பட்டியலில் இடம் பெறும் மாணவர்கள் மட்டுமே மாவட்ட அளவிலான இப்போட்டியில் பங்கேற்க முடியும்.

    போட்டிகளில் பங்கேற்க பரிந்துரைக்கப்பெறும் மாணவர்கள் உரிய படிவத்தை நிறைவு செய்து அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்பம் பெற்று போட்டி நடக்கும் நாளன்று மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் நேரில் அளித்து போட்டியில் பங்கேற்கலாம்.

    போட்டிக்கான தலைப்பு போட்டி நிகழ்விடத்தில் நடுவர்கள் முன்பாக அறிவிக்கப்படும். வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், விவரங்களுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஸ்ரீராஜராஜன் பொறியியல் கல்லூரியில் வளாக நேர்முகத் தேர்வு நாளை நடக்கிறது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, அமராவதிபுதூர் ஸ்ரீராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் நாளை (15-ந் தேதி) மற்றும் 16-ந் தேதி ஆகிய 2 நாட்கள் இறுதியாண்டு மாணவர்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூ நேர்முகத்தேர்வு நடைபெற இருக்கிறது.

    இதில் சென்னையில் இருந்து முன்னனி நிறவனங்கள் பல கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் ரூ. 35000 சம்பளத்தில் பணி நியமனம் செய்ய இருக்கிறார்கள். மேலும் தற்போது இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையும் சிறப்பாக நடைபெறுகிறது.

    இதைப்போன்று வளாகத்தேர்வில் கல்லூரியில் பயின்ற பல மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • சிவகங்கை அருகே நடந்த கோவில் திருவிழாவில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
    • மாட்டின் உரிமையாளர்களுக்கு துண்டுகளும், விருந்து உபசாரமும் நடைபெற்றது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள விராமதி கிராமத்தில் மந்தை அம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. வெள்ளைச்சாமி அம்பலம் தலைமை தாங்கினார்.

    முன்னதாக மேளதாள ங்கள் முழங்க கிராம பெரியோர்களால் மந்தை கோவிலில் இருந்து புத்தாடைகள் எடுத்து வரப்பட்டது. பின்னர் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதனைத்தொடர்ந்து மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் மற்றும் இளைஞர்கள் பிடித்தனர்.

    இந்த மஞ்சுவிரட்டுக்கு மாடுகளை கொண்டு வந்த மாட்டின் உரிமையாளர்களுக்கு துண்டுகளும், விருந்து உபசாரமும் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விராமதி கிராமத்தா ர்கள், நகரத்தார்கள், இளைஞர்கள், சிங்கப்பூர் வாழ் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் விராமதி மாணிக்கம், குமார் அம்பலம், கண்ணன் அம்பலம், பழனியப்பன் அம்பலம், ராமகிருஷ்ணன், பழனியப்பன், சுப்பிரமணியன், பெரிய கருப்பன், ராமநாராயணன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.

    • மானாமதுரை அருகே புரவி எடுப்பு விழா நடந்தது.
    • கடந்த 12 வருடங்களாக பல்வேறு காரணங்களால் இந்த திருவிழா கொண்டாடப்படாமல் இருந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தஞ்சாக்கூர் காவேரி அய்யனார், சமயகருப்பண சுவாமிகோவில் புரவி எடுப்பு திருவிழா 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். தஞ்சாக்கூர், ஆலடிநத்தம், முகவூர், புலவர்சேரி ஆகிய கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இந்த விழாவை கொண்டாடுவார்கள்.

    இந்த கோவில் ஆலடிநத்தம், தஞ்சாக்கூர் மற்றும் முகவூர் கிராமத்திற்கு பாத்தியப்பட்டது ஆகும். இங்கு கடந்த 12 வருடங்களாக பல்வேறு காரணங்களால் இந்த திருவிழா கொண்டாடப்படாமல் இருந்தது.

    12 வருடத்திற்கு பிறகு இன்று கொண்டாடப்பட்டது. இதில் ஆலடிநத்தம் கிராமத்தைச்‌ சேர்ந்த தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.

    ஊரை காவல் காக்கும் அய்யனாருக்கு குதிரை எடுப்பு திருவிழா நடத்தினால் அவர் மனம் குளிர்ந்து மழை பெய்யும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த வகையில் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடந்தது. வேளார் தெருவில் இருந்து 24 குதிரைகளை திருமணம் ஆகாத இளைஞர்கள் திருமணம் நடைபெற நேர்த்திகடனாக சுமந்து ஊரை வலம் வந்து அய்யனாருக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடனாக கொடுத்தனர்.

    இதேேபால் பெண்களும் பொம்மைகளை சுமந்து வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.

    • எடப்பாடி பழனிசாமிக்கு சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
    • எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    சிவகங்கை

    சென்னையில் நடந்த பொதுக்குழுவில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    இதற்கு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 58 பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், 30ஒன்றிய செயலாளர்கள், 4 நகரசெயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் ஆகியோர் மாவட்ட செயலாளரும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமையில் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • கயிற்றில் நின்றபடி சாகசம் செய்த சிறுமி தவறி விழுந்து பலியானார்.
    • 2 கம்புகளுக்கு நடுவே கட்டப்பட்டு இருந்த கயிற்றின் மீது ஏறி நின்றபடி சாகசம் செய்து கொண்டிருந்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கங்கையம்மன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாப்பிள்ளை. இவர் குடும்பத்துடன் துரையா ஊரணி பகுதியில் கலைக்கூத்து தொழிலில் ஈடுபட்டார்.

    அவரது மகள் கண்ணகி (வயது 15), 2 கம்புகளுக்கு நடுவே கட்டப்பட்டு இருந்த கயிற்றின் மீது ஏறி நின்றபடி சாகசம் செய்து கொண்டிருந்தார். அப்போது கண்ணகி எதிர்பாராத விதமாக கால் இடறி தவறி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயமடைந்த சிறுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கண்ணகி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கல்லல் போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வயிற்றுப்பிழைப்புக்காக கயிற்றில் நின்றபடி சாகசம் செய்த சிறுமி தவறி விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நெசவாளர்களுக்கான குறை தீர்க்கும் மையம் அமைக்கப்படவுள்ளது.
    • பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்படுத்தவும், குறைகளை தெரிவிக்க ஏதுவாகவும், கைத்தறி துணை ஆணையரகத்தில் நெசவாளர் குறை தீரக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கைத்தறி நெசவாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காகவும், நெசவாளர்களின் குறைகளான வேலைவாய்ப்பு, கூலி உயர்வு, கைத்தறி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்படுத்தவும், குறைகளை தெரிவிக்க ஏதுவாகவும், கைத்தறி துணை ஆணையரகத்தில் நெசவாளர் குறை தீரக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நெசவாளர் குறை தீர்க்கும் மையத்தில் நெசவாளர்கள் குறைகளை கீழ்காணும் வழிமுறைகளில் தெரிவித்து தீர்வு பெறலாம்.

    https://gdp.tn.gov.in/dhl, என்ற இணையதளத்தின் வாயிலாகவோ wgrcchennai;gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது குறை தீர்க்கும் அலுவலர், கைத்தறி ஆணையரகம், குறளகம் 2-ம் தளம், சென்னை - 104 என்ற முகவரிக்கு குறை தீர்க்கும் அலுவலரை நேரில் அணுகியும் தெரிவிக்கலாம்.

    மேலும், தொலைபேசி எண்:044 - 25340518 (நேரம் அரசு அலுவலக வேலை நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளி மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • “எனது குப்பை எனது பொறுப்பு” என்ற திட்டத்தின் மூலம் நகரத் தூய்மைக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை புனித ஜெஸ்டின் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் 'குப்பைகளை தரம் பிரித்திடுவோம், சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திடுவோம்', "எனது குப்பை எனது பொறுப்பு" என்ற திட்டத்தின் மூலம் நகரத் தூய்மைக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    முகாமை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாணவ-மாணவிகள்உறுதிமொழி எடுத்து கொண்டனர். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாண்டிஸ்வரி, கவுன்சிலர்கள் அயூப்கான், ராமதாஸ்,கார்த்திகேயன், விஜயக்குமார், நகரமைப்பு ஆய்வாளர், துப்புரவு அலுவலர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • 2 கம்புகளுக்கு நடுவே கட்டப்பட்டு இருந்த கயிற்றின் மீது ஏறி நின்றபடி சிறுமி சாகசம் செய்து கொண்டிருந்தார்.
    • அப்போது கண்ணகி எதிர்பாராத விதமாக கால் இடறி தவறி கீழே விழுந்தார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கங்கையம்மன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாப்பிள்ளை. இவர் குடும்பத்துடன் துரையா ஊரணி பகுதியில் கலைக்கூத்து தொழிலில் ஈடுபட்டார்.

    அவரது மகள் கண்ணகி (வயது 15), 2 கம்புகளுக்கு நடுவே கட்டப்பட்டு இருந்த கயிற்றின் மீது ஏறி நின்றபடி சாகசம் செய்து கொண்டிருந்தார். அப்போது கண்ணகி எதிர்பாராத விதமாக கால் இடறி தவறி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயமடைந்த சிறுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கண்ணகி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கல்லல் போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உழவர் சந்தையில் ரூ.200க்கு காய்கறிகள் வாங்கினால் தேங்காய், தக்காளி இலவசம் என அதிகாரிகள் அறிவித்தனர்.
    • விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையி்ல் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து தெரிவித்தார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இயங்கிவரும் உழவர்சந்தையை பலப்படுத்த பேரூராட்சி சேர்மன் மற்றும் துணைச்சேர்மன், வேளாண் விற்பனை அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகின்றனர்.

    அதன் அடிப்படையில் இன்று காய்கறி வாங்க வரும் பொதுமக்கள், ரூ.200-க்கு காய்கறிகள் வாங்கினால் வேளாண் அதிகாரி சார்பில் 1 கிலோ தக்காளி மற்றும் காயர் கிளஸ்டர் நிர்வாகி லாரி செல்வம் சார்பில் ஒரு தேங்காய் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தனர்.

    மேலும் பொதுமக்களுக்கு தரமான காய்கறிகளை வழங்குவதற்கு ஏதுவாக இந்த சந்தையில் வியாபாரம் செய்ய வரும் மேலவண்ணாயிருப்பு, எஸ்.புதூர் பகுதி விவசாயிகளை அதிகாலை 5 மணிக்கு அரசு வாகனத்தில் சென்று அதிகாரிகள் அழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

    உழவர் சந்தையில் வியாபாரம் செய்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையி்ல் இந்த திட்டம் அ றிவிக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து தெரிவித்தார்.

    • மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
    • தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கம் ஆகும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்குடி உள்வட்டம், கண்டியூர் கிராமத்தில் நாளை (13-ந் தேதி) நடைபெற இருந்த மக்கள் தொடர்பு முகாம் தற்போது மாற்றம் செய்யப்பட்டு வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

    இதில் அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களை கொண்டு, பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கம் ஆகும்.

    எனவே கண்டியூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    ×