என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெசவாளர்களுக்கான குறை தீர்க்கும் மையம் அமைப்பு
    X

    நெசவாளர்களுக்கான குறை தீர்க்கும் மையம் அமைப்பு

    • சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நெசவாளர்களுக்கான குறை தீர்க்கும் மையம் அமைக்கப்படவுள்ளது.
    • பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்படுத்தவும், குறைகளை தெரிவிக்க ஏதுவாகவும், கைத்தறி துணை ஆணையரகத்தில் நெசவாளர் குறை தீரக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கைத்தறி நெசவாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காகவும், நெசவாளர்களின் குறைகளான வேலைவாய்ப்பு, கூலி உயர்வு, கைத்தறி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்படுத்தவும், குறைகளை தெரிவிக்க ஏதுவாகவும், கைத்தறி துணை ஆணையரகத்தில் நெசவாளர் குறை தீரக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நெசவாளர் குறை தீர்க்கும் மையத்தில் நெசவாளர்கள் குறைகளை கீழ்காணும் வழிமுறைகளில் தெரிவித்து தீர்வு பெறலாம்.

    https://gdp.tn.gov.in/dhl, என்ற இணையதளத்தின் வாயிலாகவோ wgrcchennai;gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது குறை தீர்க்கும் அலுவலர், கைத்தறி ஆணையரகம், குறளகம் 2-ம் தளம், சென்னை - 104 என்ற முகவரிக்கு குறை தீர்க்கும் அலுவலரை நேரில் அணுகியும் தெரிவிக்கலாம்.

    மேலும், தொலைபேசி எண்:044 - 25340518 (நேரம் அரசு அலுவலக வேலை நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×