என் மலர்
சிவகங்கை
- பா.ஜ.க. விவசாய அணி துணை தலைவர் எஸ்.ஆர்.தேவர் இல்ல திருமணம் நாளை நடக்கிறது.
- காரைக்குடி-செக்காலை ரோடு சுபலட்சுமி மகாலில் திருமணம் நடக்கிறது.
காரைக்குடி
பா.ஜ.க. மாநில விவசாய அணி துணை தலைவர் எஸ்.ஆர்.தேவரின் மகள் வழிப்பேரனும் சி.விஜய செந்தில்-வி.எஸ்.மேகலா தம்பதியரின் மகனுமான வி.எஸ்.ராஜா சேதுபதிக்கும், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் முருகபூபதி தேவர்-ராமுத்தாய் தம்பதியரின் மகள் எம்.ஆர்.ஐஸ்வர்யாவிற்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.
இந்த திருமணம் நாளை (புதன்கிழமை) காரைக்குடி-செக்காலை ரோடு சுபலட்சுமி மகாலில் நடக்கிறது. பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமை தாங்குகிறார். மாநில தலைவர் அண்ணாமலை திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
இதில் சிவகங்கை மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கதிரவன், மாவட்ட பொது செயலாளர் மார்த்தாண்டன், மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் செந்தூர் பாண்டியன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம், பொது செயலாளர் கருப்பு முருகானந்தம்,மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி, திரைப்பட இயக்குனர் பேரரசு உள்பட மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள், தொழில் அதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.
திருமணத்திற்கான ஏற்பாடுகளை எஸ்.ஆர்.தேவர் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
- தந்தையாக இருக்க வேண்டிய கார்த்திக், சிறுமி என்றும் பாராமல் மாணவிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
- கட்டிட தொழிலாளி முருகானந்தம் என்பவரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை கடந்த 2016ம் ஆண்டு இறந்து விட்டார். இதன் காரணமாக இவரது தாயார் மகளுடன் சகோதரரின் பராமரிப்பில் இருந்தார்.
இந்த நிலையில் மாணவியின் தாயாருக்கும், தனியார் பள்ளி வேன் டிரைவர் சுந்தர்ராஜ் என்ற கார்த்திக் (வயது 31) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவியின் தாயார் வேன் டிரைவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
தந்தையாக இருக்க வேண்டிய கார்த்திக், சிறுமி என்றும் பாராமல் மாணவிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதே போல் அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி முருகானந்தம் (31) என்பவரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இந்த கொடூரம் 5 வருடங்களுக்கு மேலாக நடந்து வந்துள்ளது. மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் சொல்லாமல் தவித்து வந்துள்ளார். இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்கள் மீது மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்துக்கு தொலைபேசி மூலம் புகார் தெரிவித்துள்ளர்.
இதையடுத்து குழந்தைகள் நல அதிகாரிகள் கார்த்திகா, மனோகரி ஆகியோர் விரைந்து செயல்பட்டு பாதிக்கப்பட்ட அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தாயின் 2-வது கணவர், கட்டிட தொழிலாளி முருகானந்தம் ஆகியோர் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக மாணவியின் தாய் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் கார்த்திக், கட்டிட தொழிலாளி முருகானந்தம் ஆகியோரை கைது செய்தார்.
மாணவி பல ஆண்டுகளாக பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கானாடுகாத்தானில் உதான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய மந்திரி சிந்தியாவிற்கு கடிதம் எழுதி உள்ளேன்.
- செட்டிநாட்டில் வேளாண் கல்லூரி இடம் தேர்வு செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.
காரைக்குடி:
காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
கானாடுகாத்தானில் உதான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய மந்திரி சிந்தியாவிற்கு கடிதம் எழுதி உள்ளேன். அதை மீண்டும் வலியுறுத்துவேன். விமான நிலையம் அமைவது என்பது நிறைய தொழில் நுட்பம் சார்ந்தது. நான் சொல்வதால் மட்டும் நடந்து விடாது.
செட்டிநாட்டில் வேளாண் கல்லூரி இடம் தேர்வு செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. குலாம் நபி ஆசாத் கட்சியை விட்டு சென்றது காங்கிரசுக்கு பின்னடைவுதான். மூத்தவர்களை வைத்து தான் கட்சியை நடத்த வேண்டும். ஜி-23 தலைவர்கள் சொன்ன கருத்துக்களை காங்கிரஸ் கட்சி உள்வாங்கியிருக்க வேண்டும்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல்காந்தி போட்டியிடுவேன் என்று கூறினால் தலைவர் தேர்தலில் போட்டி இருக்காது. அவர் போட்டியிடாவிட்டால் போட்டி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அண்ணாமலை போலீசில் இருக்கும்போது ரவுடி லிஸ்ட் வைத்திருப்பது போல், தற்போது ஒரு ரவுடி லிஸ்ட் பா.ஜ.க.வில் சேருகிறது. அது வாக்காக மாறாது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சி இந்திய அளவில் 20 சதவீத வாக்கு வங்கி வைத்துள்ளது. அ.தி.மு.க.வை பொருத்தவரை நீதிமன்றத்தை நாடி கட்சியின் தலைவரை தீர்மானிக்க முடியாது. கட்சியின் தொண்டர்கள்தான் அதை தீர்மானிக்க வேண்டும்.
அ.தி.மு.க. நிலைகுலைந்து இருப்பதில் ஒரு சிலர் சந்தோஷம் அடைகின்றனர். அந்த கட்சி நிலை குலைய வேண்டும், அதன் சின்னம் முடக்கப்பட வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் அ.தி.மு.க. பலமான கட்சிதான்.
நிர்மலா சீதாராமன் மோடியின் படத்தை ரேசன் கடைகளில் வைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் வாதம் செய்வது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. கொரோனா சான்றிதழில் மோடியின் படம் உள்ளது. ஊசி போட்டவரின் படம் கிடையாது. எல்லாவற்றிலும் விளம்பரப்படுத்த வேண்டும் என்ற ஆசை பா.ஜ.க. அரசுக்கு இருக்கிறது.
புதிய கல்விக் கொள்கை விபரீதமானது. சரித்திரத்தை மாற்ற பார்க்கின்றனர். இது பா.ஜ.க.வின் விஷமத்தனமான பிரசாரம் ஆகும். இந்துத்துவா சமூகத்தை மேல்தட்டு, கீழ்தட்டு என்று கொண்டு செல்லப் பார்க்கின்றனர். இந்தியாவை மத குருவை வைத்து நடத்தப் பார்க்கின்றனர். சமுதாயத்தை வேறுபடுத்தி, ஏற்ற தாழ்வுகளை கொண்டு வரப்பார்க்கின்றனர்.
கூட்டுறவு வங்கியை மத்திய அரசு நேரடி கட்டுப்பாட்டில் எடுப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மானாமதுரையில் பழமையான சிவலிங்கம் கோவில் புதையுண்டு உள்ளதாக கூறப்படுகிறது.
- சிவவழிபாடு செய்யபட்டதற்கான சுவாமி சிலைகள் இருக்குமா? என ஆய்வாளர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்வை விடுத்துள்ளனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மேலபசலை அரசுபள்ளி அருகே மதுரை- ராமேசுவரம் 4 வழிசாலை அருகில் பழமையான சிவலிங்கம் பக்தர்களால் கண்டுபிடிக்கபட்டு பூஜை செய்து வழிபாடு நடைபெற்று வருகிறது.
கிழக்கு திசைநோக்கி சிவலிங்கம் பெரிய வடிவில் உள்ளது. அதன் அருகில் கருங்கல் பீடமும், அதில் சிவபெருமானின் வாகனமான காளை உருவமும் சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து காடுபோல இருந்தது. தற்போது கருவேல மரங்கள் அகற்றப்பட்டதால் சிவலிங்க சிலை திருமேனி சாலையில் நின்று பார்த்தாலே தெரிகிறது. இந்த வழியே செல்லும் சிவனடியார்கள் சிவலிங்க சிலைக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து, விளக்கு ஏற்றி வழிபாடு செய்து செல்கின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்கள் காசி-ராமேசுவரம் பாதயாத்திரையாக செல்லும் போது சிவவழிபாடு செய்வதற்கு மதுரையில் இருந்து ராமேசுவரம் செல்லும் வரை வழிநெடுகிலும் சிறிய அளவில் சிவாலயங்கள், மடங்கள், சத்திரங்களை அப்போதைய மன்னர்கள் கட்டியுள்ளனர். இப்போது மதுரை-ராமேசுவரம் சாலையில் பீசர்பட்டினம் என்ற இடத்தில் சிவலிங்கத்துடன் மடம் உள்ளது. அதேபோல் மேல பசலை பகுதியில் சிவாலயம் இருந்தது. காலமாற்றத்தால் அது இடிந்து தற்போது சிவலிங்கம் திருமேனி மற்றும் காளைஉருவத்துடன் கருங்கல் பீடம் மட்டுமே தென்படுகிறது. இதே போல் மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சின்னகண்ணூர் பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விநாயகர் சிலை, அம்மன் சிலைகள், தமிழ் கல்வெட்டுகளை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இதேபோல் இந்த பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தால் பழமையான கோவில் புதைந்து உள்ளதா? மேலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிவவழிபாடு செய்யபட்டதற்கான சுவாமி சிலைகள் இருக்குமா? என ஆய்வாளர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
இதுகுறித்து மானாமதுரையை சேர்ந்த சிவபக்தர் ஆனந்த பாண்டியன் கூறுகையில், பழமையான சிவலிங்கத்திற்கு பூஜை பொருட்களை கொண்டு வந்து அபிஷேகம், அலங்காரம் செய்து சங்குநாதம் மற்றும் சிவவாத்தியங்களை வாசித்து வழிபாடு செய்து செல்கிறேன். என்னை போன்று ஏராளமான பக்தர்கள் இதுபோன்று வழிபாடு செய்து செல்கின்றனர்.
இந்த பகுதி கிராம மக்கள், ராமேசுவரம் யாத்திரை செல்லும் பக்தர்கள் வழிபாடு செய்யும் வகையில் இந்துசமய அறநிலையதுறை நிர்வாகம் கோவில் அமைக்க வேண்டும்.
தற்காலிகமாக சிவலிங்க சிலைக்கு நிழற்குடை அமைக்க வேண்டும் என்றார்.
- திருப்பத்தூரில் மீலாது நபி மாநாடு நடந்தது.
- திருப்பத்தூர் லிம்ரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஆண்டுதோறும் மீலாது நபி மாநாடு நடைபெறுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு மாநாடு திருப்பத்தூர் லிம்ரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
3 அமர்வுகளாக நடந்த இந்த மாநாட்டில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, சமூக ஆசிரியை சபரிமாலா என்ற பாத்திமா உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். விழா ஏற்பாடுகளை மீலாது நபி மாநாடு கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- பட்டாசு கடைகள் அமைக்க 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைக்க வெடிபொருள் சட்டத்தின் கீழ், கீழ்க்கண்ட உரிய ஆவணங்களுடன் வருகிற 30-ந் தேதிக்குள் மாவட்டத்தில் இயங்கி வரும் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் பெற வருகிற 30-ந் தேதிக்குள் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் மனு அளிக்க வேண்டும். அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் வருமாறு:-
திட்ட வரைபடம், பத்திர ஆவணங்கள், ரூ.500-ஐ வங்கியில் செலுத்தப்பட்ட அசல் சலான், முகவரி (பான்கார்டு, ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஸ்மார்ட் அட்டை), நகராட்சி , பேரூராட்சி, ஊராட்சி வரி ரசீது, பாஸ்போர்ட் புகைப்படம்.
மேலும் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பங்கள் அளிக்க கடைசி நாள் வருகிற 30-ந் தேதி ஆகும். இந்த தேதிக்குள் கிடைக்கும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். 30-ந் தேதிக்கு பிறகு விண்ணப்பிக்க இயலாது.விண்ணப்பங்கள் மீது 15ந் தேதிக்குள் உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காரைக்குடியில் திராவிட மாடல் பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.
- இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் காரைக்குடியில் திராவிட மாடல் குறித்த பயிற்சி கருத்தரங்கு கூட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் வரவேற்றார். அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கினார். திராவிட இயக்க வரலாற்றை எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில் நடந்த இந்த கருத்தரங்கில், ''திராவிட இயக்க வரலாறு'' என்ற தலைப்பில் பேராசிரியர் சுப.வீரபாண்டியனும், ''மாநில சுயாட்சி'' என்ற தலைப்பில் மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் கருணாவும் பேசினர்.
மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கை மாறன், மணிமுத்து, ஜோன்ஸ்ரூசோ, மாவட்ட பொருளாளர் துரைராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சேதுபதி ராஜா, சிக்கந்தர் பாதுஷா, பொற்கோ, ரவி, காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்து துரை, துணை தலைவர் குணசேகரன், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த், பள்ளத்தூர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். துணை அமைப்பாளர் துஷாந்த் பிரதீப்குமார் நன்றி கூறினார்.
- காரைக்குடி ரோட்டரி சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு இலவச இருதய மருத்துவ முகாம் நடந்தது.
- 120-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிசோதிக்க பதிவு செய்திருந்தனர்.
காரைக்குடி
காரைக்குடி ரோட்டரி சங்கம், அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை மற்றும் சிவகங்கை மாவட்ட பொது சுகாதார துறை இணைந்து குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாமை முத்துப்பட்டினம் வித்யா கிரி மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. ரோட்டரி மாவட்ட ஆளுநர் முத்து முன்னிலை வகித்தார். கலெக்டர் மதுசூதன ரெட்டி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
காரைக்குடி ரோட்டரி சங்கத் தலைவர் சத்குரு தேவன் வரவேற்றார். 120-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிசோதிக்க பதிவு செய்திருந்தனர்.
இதில் வட்டாட்சியர் மாணிக்கவாசகம், நகராட்சி ஆணையாளர் லட்சுமணன், ஒருங்கிணைப்பாளர் லியாகத் அலி, அப்பல்லோ மருத்துவமனை இருதய சிகிச்சை மருத்துவர் முத்துக்குமரன், வித்யாகிரி பள்ளி தாளாளர் சுவாமிநாதன், பொருளாளர் முகம்மது மீரா, முதல்வர் ஹேமமாலினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சி.எஸ்.ஐ. பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் நிகழ்ச்சி நடந்தது.
- வைரம் அரிமா சங்கம் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சி.எஸ்.ஐ. உயர்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. போட்டியில் மானாமதுரை வட்டாரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் சி.எஸ்.ஐ. உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்க வசதியாக மானாமதுரை வைரம் அரிமா சங்கம் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
பள்ளியில் நடந்த இதற்கான நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர்-ஓய்வுபெற்ற பேரூராட்சி செயல் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி விளையாட்டு உபகரணங்களை வழங்கி பேசினார். தலைமை ஆசிரியர் செல்வின் ஆசிர்வாதம் வரவேற்றார். பள்ளியின் தாளாளர் பிச்சை, அரிமா சங்க நிர்வாகிகள் பூமிநாதன், முத்துக்குமார், அனுப்துபே ,பொறியாளர் காவேரி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
- தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கால்நடை பராமரிப்பு கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- தவணை தவறி செலுத்தும் பட்சத்தில் இந்த கடனுக்கான 7 சதவீதம் வட்டியுடன் அபராத வட்டியும் சோ்த்து செலுத்த வேண்டும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், விவசாயிகளுக்கு விவசாயத்துடன் இணைந்த கால்நடை வளர்ப்பு காரியங்களுக்கு நடைமுறை மூலதன செலவினங்களுக்காக (வளர்ப்பு செலவினங்கள்) ஓராண்டு தவணையில் வட்டியில்லா கடன்கள் வழங்கி வருகின்றது.
பால்மாடு வளர்ப்பிற்கு தலா ஒரு மாட்டிற்கு ரூ.14 ஆயிரம் வீதமும், ஆடு வளர்ப்பிற்கு 10+1 ஆடுகளுக்கு ரூ.18ஆயிரம் வீதமும், ரூ.1.60 லட்சம் வரை அடமானம் ஏதுமின்றி வட்டியில்லா கடன்கள் வழங்கப்படுகிறது.
கடன் பெற விரும்பும் விவசாயிகள், விவசாயி மற்றும் மாடு, ஆடு வளர்ப்பதற்கான சான்றுகளுடன் தங்கள் விவகார எல்லைக்குட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இந்த கடன்களை ஓர் ஆண்டுக்குள் திருப்பி செலுத்தினால் அந்த கடனுக்கான வட்டியை தமிழக அரசு வழங்கும். தவணை தவறி செலுத்தும் பட்சத்தில் இந்த கடனுக்கான 7 சதவீதம் வட்டியுடன் அபராத வட்டியும் சோ்த்து செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவகங்கையில் கோவிலில் நெய் விளக்கு ஏற்றி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வழிபாடு செய்தனர்.
- எம்.ஜி.ஆர் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.
சிவகங்கை
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து சிவகங்கை பஸ்நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து கொடியேற்றி இனிப்பு வழங்கினர். மாவட்ட செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர். செந்தில்நாதன் தலைமை தாங்கினார். இந்த தீர்ப்பையொட்டி கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில் துர்க்கை அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டனர்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் தசரதன், செல்லமணி, ஸ்டிபன், சிவாஜி, பாரதிராஜன், கோபி, சேவியர், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, எம்.ஜி.ஆர்மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை நகர் மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.
- இந்த பணிகளை காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
காரைக்குடி
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் ஆலோசனையின் படி மழைக்காலம் வருவதை யொட்டி காரைக்குடியில் போர்க்கால அடிப்படையில் அனைத்து வாடுகளிலும் உள்ள மழை நீர் வடியும் வாய்க்கால்களை சுத்தம் செய்யும் பணி ேஜ.சி.பி. மூலம் நடந்த வருகிறது.
இந்த பணிகளை காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜன்,துணைப் பொறியாளர் சீமா,சுகாதார ஆய்வாளர் சுந்தர், நகர்மன்ற உறுப்பினர்கள் சோனா.கண்ணன், ரத்தினம், மலர்விழி, துரைநாகராஜ், அன்னை மைக்கேல், லில்லி தெரசா, தனம் சிங்கமுத்து, திவ்யா, கார்த்தி, விஷ்ணு பெருமாள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.






