என் மலர்
நீங்கள் தேடியது "Truck accident investigation"
- திருப்பத்தூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்துள்ளானது.
- பின் பக்க சக்கர அச்சு உடைந்து சாலையிலேயே தலைகுப்புற கவிழ்ந்தது.
திருப்பத்தூர்
மதுரையில் இருந்து தினசரி திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதி களுக்கு மளிகை பொருட்கள். கட்டுமானப் பொருட்கள், பாத்திரம், பர்னிச்சர் கடைகளுக்கு தேவையான பொருட்களை மினி லாரி, கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது.
அதன்படி மதுரையில் இருந்து மேலூர் வழியாக காரைக்குடி நேற்று இரவு கனரக லாரி ஒன்று புறப்பட்டு சென்றது.திருப்புத்தூர் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட கிருஷ்ணம்பட்டி விலக்கு அருகில் சென்றபோது பின் பக்க சக்கர அச்சு உடைந்து சாலையிலேயே தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நல் வாய்ப்பாக எதிரே எந்த ஒரு வாகனமும் வராததால் பெரும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.
விபத்தில் ஓட்டுனர் எந்தவித காயமின்றி உயிர் தப்பித்தார். இந்த விபத்து குறித்து திருப்புத்தூர் நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு சில மாதங்களில் அந்த பகுதிகளில் அடிக்கடி மினி சரக்கு வாகனம், லாரிகள் பேருந்துகள் என தொடர்படியாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






