என் மலர்
சிவகங்கை
- சிவகங்கை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடக்கிறது.
- 14-ந் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கி நடத்தப்பட உள்ளன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் 2021- 22-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க, சிவகங்கை மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளில் (அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் (பதின்மப் பள்ளிகள் உள்பட) படித்து வரும் மாணவர்களுக்கும் (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடிய), அனைத்துக் கல்லூரிகளில் (அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலைக்கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் முதலியன) படித்து வரும் மாணவர்களுக்கும் வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமையன்று) சிவகங்கை மருது பாண்டியர் நகர், அரசு மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கில், மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த போட்டிகளில்் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும்் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
அத்துடன் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுள் சிறப்புடன் திறமையை வெளிப்படுத்தும் அரசுப்பள்ளி மாணாவர்கள் இருவரை தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்் வழங்கப்பட உள்ளன.
பள்ளி மாணவர்களு க்கான பேச்சுப் போட்டிகள் 14-ந் தேதி காலை 8.30 மணிக்கு தொடங்கியும்், கல்லூரி மாணவர்களுக்்்கான பேச்சு போட்டிகள் 14-ந் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கியும் நடத்தப்பட உள்ளன.
இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் உரிய பங்கேற்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து தலைமையாசிரியா், கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் ஒப்பமும்் பெற்று சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (04575-241487, 99522 80198) தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவகங்கை மாவட்ட பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறன், பொது அறிவை மேம்படுத்த நடவடிக்கை
- இந்த தகவலை சிவகங்ககை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளவகையில், மாவட்ட நூலகத்தில் தொடங்கி வைக்கப்ப ட்டுள்ள, வாசிப்புத்திறன் மற்றும் பொதுஅறிவு மேம்பாடு ஆகியவை தொடர்பான நிகழ்வு நடந்தது.
கலெக்டர் மதுசூதன் ரெட்டி இதை நேரடியாக பார்வையிட்டு, பள்ளி மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
அப்போது கலெக்டர் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வி கற்பது மட்டுமன்றி, எதிர்காலத்திற்கு பயனுள்ள வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் உண்டு உறைவிட மாதிரிப்பள்ளிகள் போன்றவைகள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களை ஊக்குவிக்குப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், பள்ளி மாணவர்கள் கலை, இலக்கியம், அரசியல் உள்ளிட்ட தாங்கள் விரும்பும் பல்வேறு வகையான அறிவு சார்ந்த புத்தகங்கள் மற்றும் தமிழ், ஆங்கில தினசரி நாளிதழ்கள் ஆகியவைகளை ஒரே இடத்தில் படிப்பதற்கு ஏதுவாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களை, ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 50 மாணவர்கள் வீதம், விடுமுறை நாட்களை தவிர்த்து, தினந்தோறும் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் துணை யோடு அழைத்து வந்து, காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரை தனியார் பள்ளி மாணவர்களுக்கும் தேவையான புத்தகங்களை படிப்பதற்கான நடவடி க்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக சிவகங்கை மற்றும் மானாமதுரை ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட 28 பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச்சென்று, ஓய்வு நேரங்களில் படிப்பதற்கு ஏதுவாகவும், அவர்களை நூலக உறுப்பினர்களாக இணைப்பதற்கும், அதற்கான சந்தாத்தொகையினை மாவட்ட நிர்வாகம் மற்றும் வாசகர் வட்டத்தின் சார்பில் செலுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
இங்கு வரும் மாணவர்கள் முதலில் நூலகத்தில் எந்தெந்த வகையான புத்தகங்கள் உள்ளது என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும். சிவகங்கை மாவட்ட நூலகத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
இதில் குடிமைப்பயிற்சி மையம் அமைக்கப்பட்டு, அதற்கான புத்தகங்களும், பயனுள்ள வகையில் இடம் பெற்றுள்ளது.
மாணவர்களுக்கு பயனுள்ள வகையில். மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளை, பள்ளி மாணவர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு, பொதுஅறிவுத்திறன் மற்றும் புத்தக வாசிப்புத்திறன் ஆகியவற்றை வளர்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தேவகோட்டை அருகே உள்ள அடசிவயல் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள அடசிவயல் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கோவில் கிராமத்தில் மைய பகுதியில் உள்ளது. இந்த அம்மனை காவல் தெய்வமாக வணங்குகின்றனர். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி இரவு கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 4அடி உயரம் கொண்ட உண்டியலை தூக்கி சென்று அதிலிருந்த பணத்தை திருடி சென்றுவிட்டனர்.
நேற்று காலை கோவிலை திறக்க சென்றபோது கோவில் கதவு திறந்து கிடப்பதை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் பரவியதும், கிராம மக்கள் அனைவரும் கோவில் முன்பு திரண்டனர். இது தொடர்பாக வேலாயுதபட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை திருடி சென்றகொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இந்த கிராமத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ள கற்படை அய்யனார்வயல் கிராமத்தில் உள்ள கருப்பர் கோவில் உண்டியல் திருட்டு முயற்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த காட்சிகள் கோவில் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை இன்னும் பிடிக்கவில்லை. இந்த நிலையில் இக்கோவிலில் 5-க்கும் மேற்பட்ட முறை திருட்டு முயற்சி நடந்ததுள்ளது.
தேவகோட்டை அருகே கொத்தங்குடி இடையன்காளி கோவிலில் தங்க நகைகள், உண்டியல் திருட்டு, தாழையூர் கிராமத்தில் உள்ள கூத்தாடி முத்துபெரியநாயகி அம்மன் கோவில் உண்டியல் திருட்டு, இரவுசேரி காளியம்மன் கோவில் உண்டியல் திருட்டு ஆகிய சம்பவங்கள் நடந்துள்ளன.
எனவே தொடர் திருட்டு சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வர போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருட்டில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குருபூஜை விழாவில் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.
- அஞ்சலி செலுத்த வருவோருக்கு ஏதுவாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
காளையார்கோவில்
மாமன்னர் மருது பாண்டியர்களின் 221-வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. நினைவிடத்தில் ஏராளமா னோர் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்த வருவோர் முளைப்பாரி எடுத்தும், பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும் அஞ்சலி செலுத்தினர். சிவகங்கை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் கண்காணி க்கப்படுகின்றனர்.
மருதுபாண்டியர் குருபூஜையையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அஞ்சலி செலுத்த வருவோர் டூவீலரில் செல்ல அனுமதி இல்லை. வாடகை வாகனத்தில் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, மானா மதுரை, திருப்புவனம், இளையான்குடி, காளையார் கோவில், தேவகோட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
அஞ்சலி செலுத்த வருவோருக்கு ஏதுவாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- மருதுபாண்டியர் நினைவிடத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க. வினர் மரியாதை செலுத்தினர்.
- கிராம மக்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து மருது சகோதரர்களின் சிலைக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த மருது சகோதரர்களின் 221-வது நினைவு தினமான அக்டோபர் 24-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அக்டோபர் 27-ந் தேதி (இன்று) காளையார் கோவில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் பொதுமக்களால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ., நாகராஜ், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் தமிழ் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, சிவாஜி, ஸ்டீபன், கோபி, கருணாகரன், சேவியர், தசரதன், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு மருது சகோதரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
கிராம மக்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து மருது சகோதரர்களின் சிலைக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- சைக்கிள் மீது பைக் மோதி 2 பேர் பலியானார்கள்.
- இந்த விபத்து குறித்து புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி குமார் (வயது 45). இவரது மைத்துனரான புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கோபால்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் (40) இருவரும் மோட்டார் சைக்கிளில் பொன்னமராவதியில் இருந்து கோட்டையூர் நோக்கி சென்றனர்.
கே.புதுப்பட்டிக்குள் வரும்போது அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி அழகன் என்பவர் சைக்கிளை ஓட்டி வந்தார். எதிர்பாராத விதமாக பைக்கும், சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகராஜ், அழகன் ஆகியோர் படுகாய மடைந்தனர். இருவரும் ஆம்புலன்சு மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அழகனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த நாகராஜ் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவகங்கையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 28-ந் தேதி நடக்கிறது.
- வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் வௌ்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்்துறை வேலை வாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
வருகிற 28-ந் தேதி (வௌ்ளிக்கிழமை) காலை 10 மணிஅளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வேலை நாடுநர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்்தி தனியார்் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெறலாம்.
இதில் இலவச திறன்பயிற்சிக்கான விண்ணப்பபடிவம், போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவா் சோ்க்கை, வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவி த்தொகை பெறுவதற்கான விண்ணப்பபடிவம் ஆகியவையும்் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த இளைஞா்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு அடையாள அட்டை, ஆதார்்அட்டையுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவுமூப்பு ரத்துசெய்யப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருப்புவனம் அருகே தொடர் மழையால் பாலம் அடித்துச்செல்லப்பட்டது.
- போக்குவரத்து பாதிக்கப்பட்டு 5 கிராமங்கள் துண்டிக்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், பிரமனூர் ஊராட்சியைச் சோ்ந்த வயல்சோி-காிசல்குளம் சாலையில் பாலம் அமைந்துள்ளது. தொடா் மழையின் காரணமாக இந்த பாலம் அடித்து செல்லப்பட்டது.
இந்த பாலம் 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, காிசல்குளம் உள்பட 5 கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. இந்த சாலை ஊராட்சி ஒன்றிய சாலையாகும்.
பாலம் சேதமடைந்து உள்ளது தொடா்பாக, கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், புளியங்குளம் முதல்வாடி தரைப்பாலம் நீரில் மூழ்கி பாலத்திற்கு 2 அடி தண்ணீர் செல்வதைத் தொடா்ந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குழந்தைகள். பொதுமக்கள் பாலத்தை கடக்க இயலாத நிலை உள்ளதால், உடனடியாக இந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டு, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வருவாய்த்துறை, ஊராட்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலா்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, சிவகங்கை கோட்டாட்சியா் சுகிதா, ஊரக வளா்ச்சித்துறை செயற்பொறியாளா் வெண்ணிலா, நீர்வளத்துறை செயற்பொறியாளா் (சருகனியாறு வடிநிலைக் கோட்டம்) பாரதிதாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
- 221-வது நினைவு தினத்தையொட்டி மருதுபாண்டியா்கள் சிலைகளுக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
- சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள நினைவு மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செய்தி- மக்கள் தொடா்புத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள மருது பாண்டியா்கள் நினைவு மண்டபத்தில் மருதுபாண்டியா்களின் 221-வது நினைவு தின விழா நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் அமைச்சர்கள் பெரியசாமி, சாத்தூர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், பி.மூர்த்தி, பழனிவேல்தியாகராஜன் ஆகியோர் மருது பாண்டி யா்களின் திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினர்.
முன்னதாக, கலெக்டர் மதுசூதன் ரெட்டி மருதுபாண்டியா்களின் நினைவு மண்டப வளா கத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மாியாதை செலுத்தினார்.
மானாமதுரை சட்டமன்ற உறுப்பினா் தமிழரசிரவிக்குமார், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினா் மாங்குடி, சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணி ப்பாளா் செந்தில்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினர்.அதனைத்தொடா்ந்து, திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மருதுபாண்டியா்களின் நினைவுத்தூணுக்கு அமைச்சா்கள், கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும்் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் மணிவண்ணன், தேவகோட்டை கோட்டா ட்சியா் பிரபா கரன், திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி, செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா் சண்முகசுந்தரம், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி) ராஜசெல்வன், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) ராஜா, திருப்பத்தூர் வட்டாட்சியா வெங்கடேசன், பேரூராட்சி செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன் மற்றும் மருதுபாண்டியா்களின் வாரிசுதாரா்கள் கலந்து கொண்டனா்.
- மாலை 5.30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.
- சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என எச்சரிக்கை.
தீபாவளிக்கு மறுநாளான இன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவின் சூரிய கிரகணம் இன்று மாலை 4.29 மணிக்கு தென்படும். மாலை 5.42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும். மாலை 5.30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.
வடகிழக்கு மாநிலங்களை தவிர்த்து பெரும்பாலான பகுதிகளில் சூரிய கிரகணம் தென்படும். சென்னை, கோவை, ஊட்டி மற்றும் ஐதராபாத், விசாகப்பட்டினம், பாட்னா, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூரு, கான்பூர், லக்னோ, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்ககூடாது என்று அறிவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாடு முழுவதும் கோளரங்குகளில் சூரிய கிரணகத்தை பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சூரிய கிரணகத்தையொட்டி தமிழகத்தின் முக்கிய கோயில்களில் நடைசாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் இன்று காலை 11:00 மணிக்கு நடை சாத்தப்படும். கிரகணம் முடிந்த பின்னர் இரவு 7:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் ஊத்துக்கோட்டை, ஆரணியை அடுத்த, சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் செவ்வாய்க்கிழமையான இன்று அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று மதியம் 2 மணி முதல், இரவு 7:00 மணி வரை கோவில் அடைக்கப்பட்டு இருக்கும் என்றும், 26ம் தேதி வழக்கம் போல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- அரசு சார்பில் மருதுபாண்டியர்களின் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது
- மருது பாண்டியர்களின் நினைவு தினம் அரசு நிகழ்ச்சியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை:
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து சுதந்திர போரிட்டதால் ஆங்கிலேயர்களால் 1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். இதனையடுத்து அரசு சார்பில் மருதுபாண்டியர்களின் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டு இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24-ந் தேதி மருது பாண்டியர்களின் நினைவு தினம் அரசு நிகழ்ச்சியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மருதுபாண்டியர்களின் 221வது நினைவு நாளை முன்னிட்டு ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டு திருப்பத்தூரில் உள்ள மணிமண்டபத்தில், மருதுபாண்டியர்களின் சிலைகளுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள நினைவுத்தூணுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரசு சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
- தீபாவளி பண்டிகையையொட்டி தரமற்ற, சுகாதாரமற்ற ஆட்டு இறைச்சி விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
- சுகாதாரமற்ற ஆட்டு இறைச்சி விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் அளிக்கலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்களின் அன்றாட தேவைகளில் அவசியமானதாக விளங்கும் உணவு மற்றும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்ய, தீபாவளி பண்டிகையையொட்டி ஆட்டு இறைச்சி வியாபாரம் செய்யும் அனைத்து வணிகா்களும் உரிய உரிமம், பதிவு சான்று பெற்றிருக்க வேண்டும்.
ஆடு வதை செய்யும் இடங்களுக்கு போதிய அளவு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். நோயுற்ற ஆடுகளை வதை செய்து விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். சுகாதாரமான முறையில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்யும் இடத்தை பராமரிக்க வேண்டும்.
பணிபுரியும் பணியா ளா்கள் மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பணியாளா்கள் முகக்கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். ஆட்டு இறைச்சியை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
பதிவு பெற்ற ஆட்டு இறைச்சி கடைகளில் மட்டுமே பொதுமக்கள் ஆட்டு இறைச்சியை வாங்க வேண்டும். ஆட்டு இறைச்சி வாங்கும்போது சில்வா் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற ஆட்டு இறைச்சி விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






