இருளில் மூழ்கிய வைகை ஆற்றுப்பாலம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் வைகை ஆற்றுப்பாலம் இருளில் மூழ்கியது. மின்தடையை சரிசெய்து உடனடியாக மின் விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இருளில் மூழ்கிய வைகை ஆற்றுப்பாலம்
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் கீழ்கரை- மேல்கரை பகுதிகளை இணைக்கும் வைகை ஆற்றுபாலத்தில் எப்போதும் போக்குவரத்து இருக்கும். பாலத்தில் உள்ள மின்விளக்குகள் எரியாததால் நடைமேடைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் முதியோர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதிகாலையில் நடைபயிற்சி செல்பவர்களும் செல்போன் டார்ச் லைட் மூலம் நடந்து செல்கின்றனர். ஒருவாரமாக மானாமதுரை நகர் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு பின்னர் சரிசெய்யப்படுகிறது. தற்போது வைகைஆற்றில் தண்ணீர் செல்வதால் அதிக அளவில் இரு சக்கர வாகனங்களும், பொதுமக்களும் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரிசெய்து உடனடியாக மானாமதுரை வைகைஆற்றில் மின் விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com