search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Papers"

    • சிவகங்கை மாவட்ட பொதுமக்கள் வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை ஆராய்ச்சி பணிக்கு வழங்கலாம்.
    • இந்த தகவலை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கல்வித்துறையின் அரசாணையின் படி சரித்திர, முக்கியமான செய்திகள், ஏடுகள், ஆவணங்கள், ஆகியவற்றை தனியார் அமைப்புகளிடம் இருந்து பெற்று ஆராய்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த தமிழக அரசால் உத்திரவிடப்பட்டு உள்ளது.

    இந்த மாதிரியான தொன்மையான ஆவண ங்கள் நமது கலாச்சாரத்தை மிகவும் பிரதிபலிப்பதாக இருக்கும். இவற்றினை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ், ஆவணக் காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வுகள் துறையின் பாதுகாப்பில் வைக்க வேண்டியது அவசியமாகிறது.

    மேலும், காலமாற்றத்தினாலும், மனிதனின் அஜாக்கிரதையாலும் இதன் முக்கியத்துவம் கெடாமல், குறையாமல் மின்னணு முறையில் பாதுகாப்பதும் முக்கியமானதாகும்.

    இது தொடர்பாக பொது மக்கள், நிறுவனங்களில் வரலாற்று சிறப்பு மிகுந்த ஆவணங்கள் தங்கள் வசம் இருந்தால், சிவகங்கை மாவட்ட கலெக்டருகக்கு தகவல் தெரிவித்து மேற்கண்ட வரலாற்று சிறப்பு மிக்க ஆவணங்களை பாது காக்கவும், ஆராய்ச்சிக்கு பயன்படுத்த உதவிடுமாறும் கேட்டு கொள்கிறோம்.

    இதுகுறித்த விவர ங்களுக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கலெக்டர் அலுவலகம், சிவகங்கை என்ற முகவாிக்கும், 94450 08149 என்ற கைப்பேசி எண்ணிற்கும், 04575 - 240392 என்ற அலுவலக எண்ணிற்கும் தொடா்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×