என் மலர்
சிவகங்கை
- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஊரக வளர்ச்சித்துறை ஊராட்சித்துறையின் சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.
- இதில் 400-க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஊரக வளர்ச்சித்துறை ஊராட்சி துறையின் சார்பில் அரசு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவமுகாம் நடந்தது. வட்டார அளவிலான அரசு அலுவலர்கள், ஊராட்சி அளவிலான பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த முகாமில் பங்கேற்றனர். சிங்கம்புணரி யூனயின் துணைத்தலைவர் சரண்யா ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். துணை இயக்குநர்கள் ராஜசேகரன், விஜயசந்திரன், ஒன்றிய கவுன்சிலர் உதயசூரியன் பெரிய கருப்பி முத்தன், சிவபுரிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி திரவியம், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், லட்சுமணராஜ், முதன்மை மருத்துவ அலுவலர் அயன்ராஜ், வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு முன்னிலை வகித்தனர். சிவகங்கை மாவட்ட விரிவாக்க கல்வியாளர் மதியரசு, துணை இயக்குநர் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சாகுல் அமீது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் 400-க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. டாக்டர்கள் செந்தில்குமார், முத்தமிழ் செல்வி, செந்தில், சித்தா மருத்துவர் சரவணன், எஸ்.புதூர் மருத்துவ அலுவலர் சினேகா, நெற்குப்பை மருத்துவர் இளவதனா ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.
- பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு போலீஸ் அதிகாரி அறிவுரை வழங்கினார்.
- தேவகோட்டை பஸ் நிலையத்தில் போலீஸ் டி.எஸ்.பி. இன்று திடீர் ஆய்வு செய்தார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் 10-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தேவகோட்டையை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிப்பதற்காக பஸ்கள் மூலம் வந்து செல்கின்றனர்.
சமீப காலமாக கூட்டநெரிசல் காரணமாக பஸ் படிகட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இதையடுத்து போலீஸ் டி.எஸ்.பி. கணேஷ்குமார் தேவகோட்டை பஸ் நிலையத்தில் இன்று திடீர் ஆய்வு செய்தார்.
தனியார் மற்றும் அரசு பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை இறக்கி விடப்பட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மீண்டும் இதே போல் நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்களை எச்சரித்துடன் அவர்களை மாற்று பஸ்களில் அனுப்பி வைத்தார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தினமும் காலை, மாலை நேரங்களில் ஆய்வு செய்வேன் என்றும் டி.எஸ்.பி. தெரிவித்தார். அப்போது காவலர் சிலம்பரசன் உடன் இருந்தார்.
- மானாமதுரையில் தி.மு.க. பூத் ஏஜெண்டுகளுக்கு செல்போன்களை தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார்.
- உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட்டது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் தேர்தல் நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய 323 பாகமுகவர்களுக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாளைமுன்னிட்டு மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி தனது பரிசாக செல்போன் வழங்கினார். மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் பகுதியில் உள்ள ஒன்றியசெயலாளர்கள், நகரசெயலாளர்கள் ஆகியோருக்கும் செல்போன் வழங்கினார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் சேகரிக்கும், பாகமுகவர்கள் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ரொக்கபரிசு வழங்கபடும் என்று தமிழரசி எம்.எல்.ஏ. தெரிவித்தார். இந்த விழாவில் மாவட்ட துணை செயலாளர்-திருப்புவனம் பேரூராட்சி தலைவர்சேங்கைமாறன், முன்னாள் எம்.எல்.ஏ.-இளையான்குடி ஒன்றிய செயலாளர் சுபமதியரசன், மானாமதுரை ஒன்றியசெயலாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை, நகர் செயலாளர் பொன்னுசாமி, இளையான்குடி நகர செயலாளர்-பேரூராட்சி தலைவர் நஜீமுதின், மானாமதுரை ஒன்றியகுழு துணைத்தலைவர் முத்துசாமி, ராஜகம்பீரம், மாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர்கள் முஜிப்ரகுமான், முருக வள்ளி தேசிங்கு ராஜா, ஒன்றிய கவுன்சிலர் ராதாசிவசந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வாக்காளர் சிறப்பு முகாமை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
- வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி கடந்த கடந்த 9-ந் தேதி தொடங்கி வருகிற டிசம்பர் 8-ந் தேதி வரை நடக்கிறது.
சிவகங்கை
சிவகங்கையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த கடந்த 9-ந் தேதி தொடங்கியது. வருகிற டிசம்பர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த காலகட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், இவற்றுடன் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கான படிவங்களையும் பூர்த்தி செய்து ஆவணங்களுடன் வழங்கலாம். சிவகங்கை மாவட்டம் முழுவதும் நேற்று வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது. மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் மேற்கு ஒன்றியம் மணலூர் ஊராட்சியில் நடந்த புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், மற்றும் வாக்காளர் சேர்ப்புக்கான முகவர்களிடம் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், சிவகங்கை எம்.எல்.ஏ.வுமான பி.ஆர்.செந்தில்நாதன் ஆய்வு செய்தார். இதில் திருப்புவனம் மேற்கு ஒன்றிய செயலாளர் சோனைரவி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மணலூர் மணிமாறன், வக்கீல் திருப்புவனம் மதிவாணன், கிளைச் செயலாளர்கள் பீசர்பட்டினம் ராமச்சந்திரன், கீழடி சதாசிவம், மணலூர் பிரபு, தயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- விருதுகள் வழங்குவதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் 2022-2023-ம் நிதியாண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் மற்றும் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு தொண்டு செய்யும் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோருக்கு, 2023-ம் ஆண்டில் திருவள்ளுவர் திருநாளன்று விருதுகள் வழங்குவதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெற விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் உரிய விண்ணப்பப் படிவத்தினை சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று வருகிற 30-ந்தேதிக்குள் மேற்படி அலுவலகத்திற்கு உரிய ஆவணங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
- வட்டார மருத்துவ அலுவலர் கலந்துகொண்டார்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.புதூர் சமுதாய கூடத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், பாரிவள்ளல், ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று 100 கர்ப்பிணிகளுக்கு சீதனப்பொருட்களை வழங்கினர்.
அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் 7 வகையான உணவுகளை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பரிமாறினார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் அர்ச்சனா, வட்டார மருத்துவர் கோபி கிருஷ்ணராஜா. குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் (கூடுதல் பொறுப்பு) சூர்யா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
- சிங்கம்புணரியில் வேளாண்மை விற்பனை இயக்குநர் ஆய்வு செய்தார்.
- நெல் மற்றும் வேளாண் விளை பொருட்களை பார்வையிட்டார்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி உழவர் சந்தையை மாநில வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குநர் நடராஜன் ஆய்வு செய்தார். விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் செயல்பாடுகள் மற்றும் விவசாயிகளால் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கடலை, நெல் மற்றும் வேளாண் விளை பொருட்களை பார்வையிட்டார். நேரடி கொப்பரை கொள்முதல் செய்யும் திட்டத்தின் பயனாளிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் செயல்படும் விதம், மக்களின் ஆதரவு உள்ளிட்ட விஷயங்களை நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
சிவகங்கை மாவட்டத்தின் முதல் தென்னை உற்பத்தியாளர் கம்பெனியின் எண்ணெய் உற்பத்தி வெளிநாடுகளுக்கு ஏற்படும் ஏற்றுமதி செய்வது சம்பந்தமாக செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வேளாண்மை துணை இயக்குநர் (மேலாண் வணிகம்) சுரேஷ், வேளாண்மை விற்பனைக்குழு செயலாளர் சாந்தி, வேளாண்மை அலுவலர் காளிமுத்து, கனிமொழி, புவனேசுவரி, விற்பனை கூட கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாயாண்டி, வேளாண் உதவி அலுவலர்கள் ராதா, நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் செந்தில், தி.மு.க. நகர தலைவர் கதிர்வேல் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி இயக்குநர் ரத்னகாந்தி செய்திருந்தார்.
- பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
- ஆய்வில் வட்டார மருத்துவ அலுவலர் நபீசாபானு மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடு கள் மற்றும் அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார அலகு மருத்துவ கட்டிட கட்டுமான பணிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயா ளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, மருந்துகள் இருப்பு விபரம் மற்றும் இருப்பு மருத்துவ உபகரணங்கள், தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மேம்படுத்த வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், மருத்து வமனைக்கு வருகை புரி யும் நோயாளிகளின் சராசரியான எண்ணிக்கை, முதல்-அமைச்சரின் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் பெற்று பயன்பெறுபவர்களின் எண்ணிக்கை குறித்து வட்டார மருத்துவ அலுவலரிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார அலகு கட்டிட பணிகள் குறித்தும், அதன் நிலை குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமான முறையில் விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் வட்டார மருத்துவ அலுவலர் நபீசாபானு மற்றும் செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இருசக்கர வாகன பயன்பாடு குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு
- இதனால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
சிவகங்கை
சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் இருசக்கர வாகன பயன்பாடு, அதன் அபரிமிதமான விளைவுகளை வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் விளக்கினார்.
அவர் பேசுகையில், போக்குவரத்து விதிமுறைகள் தெரியாமல் சிறுவர்கள் வாகனத்தை வேகமாக ஓட்டுகின்றனர். வாகன நெரிசல் அதிகமாக உள்ள சாலையில் கூட வேகமாக செல்கின்றனர். இதனால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
இதை தடுக்க தமிழக போக்குவரத்துத்துறை 2019ல் திருத்தப்பட்ட மோட்டார் வாகன ஓட்டுநர் மற்றும் பழகுநர் உரிமம் சட்டப்பிரிவின்படி 18 வயதுக்கு கீழ் வாகனங்களை ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று எடுத்துரைத்தார்.
இதில் தலைமை ஆசிரியர் சிவமணி, மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், உதவி காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கற்றல் பணிகளை விட மற்ற பணிகளை அதிகமாக செய்கிறோம் என சிவகங்கை முதன்மை கல்வி அதிகாரியிடம் ஆசிரியர் கூட்டமைப்பினர் புகார் அளித்தனர்.
- இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக முதன்மை கல்வி அலுவலர் உறுதி அளித்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதனை சந்தித்து பேசினர்.
அப்போது நிர்வாகிகள், முதன்மை கல்வி அலுவலரிடம், மாநில உயர் அலுவலர்கள் அடங்கிய மண்டல ஆய்வு கள் சமீபத்தில்தான் முடிவ டைந்துள்ளதால் அந்த குழு அளித்துள்ள மீளாய்வு கருத்துகள் பள்ளிகளில் ஆசிரியர்களால் நடைமுறை ப்படுத்தப்பட்டு வரும் சூழலில், மாவட்ட அளவிலான குழு அமைத்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்படுவதால் பதிவேடுகள் தயார் செய்வ திலேயே ஆசிரியர்களின் நேரம் வீணடிக்கப்படுகிறது.
இதனால் கற்றல், கற்பித்தலில் உள்ள சமநிலை பாதிக்கப்படுகிறது என்று எடுத்துரைத்தனர். தேவையற்ற பதிவேடுகளை ஆய்வுக்கு வரும் அலுவலர்களால் வலியுறுத்தப்படுவது ஆசிரியர்கள் மத்தியில் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இது மாவட்ட கல்வி வளர்ச்சியை பாதிக்கும். பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளும்போது அறியப்படும் குறைகளை சரி செய்வதற்கு உரிய அறிவுரைகளை ஆசிரிய ர்களுக்கு வழங்க வேண்டும்.கற்றல் இடைவெளியால் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள நடத்தை மாற்றங்களை சரி செய்ய வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக முதன்மை கல்வி அலுவலர் உறுதி அளித்தார். இந்த சந்திப்பில் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சண்முக நாதன், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) முத்துச்சாமி, தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மாரி முத்து, உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலை) அருளானந்து உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமை தாங்கி ரேசன் கடையை திறந்து வைத்தார்.
- ஊராட்சி மன்ற உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலுப்பக்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொன்நகரில் ரேசன் கடை தொடங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நீண்டநாளாக கோரிக்கை விடுத்தனர்.
சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசன் ஆகியோரின் முயற்சியால் பொன்நகரில் பகுதிநேர ரேசன் கடை திறக்கப்பட்டது. காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமை தாங்கி ரேசன் கடையை திறந்து வைத்தார்.
சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசன் முன்னிலை வகித்தனர்.
சாக்கோட்டை ஒன்றிய முன்னாள் தலைவர் முத்துராமலிங்கம், சாக்கோட்டை அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி முன்னாள் தலைவர் அன்பரசன், ஊராட்சி துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, குடிமைப்பொருள் தாசில்தார் ஜெயநிர்மலா, பொன்.துரைசிங்கம், செல்வகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஊராட்சி மன்ற உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார்.
- மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாப இறந்தார்.
- மின்மோட்டாரை இயக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா மகிபாலன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ரமேஷ்(15). இவர் மகிபாலன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் இன்று அதிகாலை வீட்டில் இருந்த மின்மோட்டாரை இயக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கண்டவராயன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவனின் உடலை பார்த்து பெற்றோர், குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.






