என் மலர்
சிவகங்கை
- அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உள்ள விசாலை யன்கோட்டை, கீழக்கோட்டை, சொக்கநாதபுரம், பாகனேரி, நகரம்பட்டி, பனங்காடி, மல்லல் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் 13 பள்ளிகளுக்கு ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறையும், பல்வேறு பள்ளிகளுக்கு ரூ.90ஆயிரம் மதிப்பில் உபகரணங்களை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.
இதை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் வருகிற அரையாண்டு தேர்வில் 1 முதல் 12 வகுப்பு வரை முதலிடம் பிடிக்கும் மாணவர்களை தனது சொந்த செலவில் ஆசிரியர்களுடன் கல்வி சுற்றுலாவாக சட்டமன்றத்திற்கு அழைத்து செல்வதாக தெரிவித்தார்.
இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஸ்டீபன்அருள்ராஜ், பழனிசாமி, சிவாஜி, கோபி, காளையார் கோவில் ஒன்றிய தலைவர் ராஜேசுவரி கோவிந்தராஜன், கல்லல் தெற்கு ஒன்றிய செயலாளர் சேவியர் தாஸ், தேவதாஸ், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சதீஸ்பாலு, மாவட்ட பேரவை துணை செயலாளர் மாரி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அரசு மாதிரி பள்ளி செயல்பாடுகள் குறித்து கலெக்டர் நேரடி ஆய்வு செய்தார்.
- ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனியில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில் அரசின் மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்டகலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களின் கல்விகற்றல் குறித்து ஆசிரியர்களிடம் கேட்ட றிந்தார்.
பள்ளியில் மாணவர்க ளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், அடிப்படை வசதிகள் தொடர்பாக கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வகுப்பறைகளுக்கு சென்று அவர், அங்கு மாணவர்களிடம் கலந்துரையாடினார். ஆய்வின்போதுமாவட்ட கலெக்டர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள் இந்திய அளவிலான நுழைவு தேர்வு தயார் செய்யும் விதமாக கடந்த செப்டம்பர் 5-ந்தேதி ஆசிரியர் தினத்தன்று மாநிலம் முழுவதும் 15 மாவட்டங்களில் அரசு மாதிரி பள்ளிகளை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
அதில் சிவகங்கை கீழக்கண்டனி அரசு மாதிரி பள்ளியும் ஒன்று. இதில் 77 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு உணவு விடுதி, கட்ட மைப்பு வசதிகள் செய்யப்ப ட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு எவ்வித போட்டி தேர்வுகளையும், நுழைவு தேர்வுகளையும் எதிர்கொள்ள இந்த பள்ளிகள் தொடங்கப்ப ட்டுள்ளது. திறன்மிக்க ஆசிரியர்களை வைத்து இங்கு பாடங்கள் கற்பிக்க ப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆய்வின்போது முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன், ஒருங்கி ணைப்பாளர் காளிதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- திருப்பத்தூரில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள சாரைப்பாம்பு பிடிபட்டது.
- வீட்டின் பின் பகுதியில் பாம்பு புகுந்தது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அகிழ்மனைத்தெரு முத்தையா பிள்ளை காம்பவுண்ட் பகுதியில் வசித்து வருகிறார் காத்த பெருமாள் மனைவி சொர்ணத்தம்மாள். இவரின் வீட்டின் பின் பகுதியில் பாம்பு புகுந்தது.
உடனடியாக திருப்புத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் விரைந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்பு துறை சிறப்பு நிலைய அலுவலர் ஆனந்த சுப்பிரமணியம் தலைமையிலான பேரிடர் மீட்பு குழுவினர் பாம்பு பிடிக்கும் உபகரண கருவிகள் கொண்டு சுமார் 6 அடி நீளம் உள்ள சாரை பாம்பை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
பின்னர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
- கண்மாயில் கழிவு நீரை திறந்துவிடும் தனியார் மது ஆலையை கண்டித்து பொதுமக்கள் மறியல் செய்தனர்.
- நடவடிக்கை எடுப்பதாக சிவகங்கை தாசில்தார் உறுதியளித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை அருகே உள்ள உடைகுளம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மது மூலப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு பின்புறம் உடைகுளம் கிராமத்திற்கு சொந்தமான 160 ஏக்கர் விவசாய நிலமும், அதற்கு நீர்வள ஆதாரமாக திகழும் கண்மாயும் உள்ளது.
மது ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை அந்த கண்மாய்க்குள் திறந்து விடுகின்றனர். இதனால் கண்மாய் நீரின் தன்மை மாறுவதுடன் நிலத்தடி நீரும் மாசு பட்டு உபயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பல ஆண்டுகளாக விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் இந்த நீரை அருந்தினால் இறந்துவிடுவதால் மேய்ச்சலுக்காக அழைத்து செல்ல முடியாத நிலை யும் ஏற்பட்டுள்ளது. இந்த மது ஆலைக்கு வரும் கனரக வாகனங்களால் இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் பழுதாகி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கிராம மக்கள் ஆலை நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் நேற்று கனரக வாகனங்களை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காளையார்கோவில் தாசில்தார் கிராம மக்களை சமாதானம் செய்ததுடன், ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மது ஆலை அதிகாரி களிடம் விசாரணை நடத்திய தாசில்தார் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
- திருப்பத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
- மீன் மார்க்கெட்டில் பார்மலின் திரவம் கலக்கப்பட்டு விற்கப்படுவதை தடுப்பதற்கு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் மக்கள் உரிமை கூட்டணி மாநில பொதுச் செயலாளர் விஸ்டம் கமருதீன் மனு அளித்தார். அதில், நகரில் செயல்பட்டு வரும் மருதுபாண்டியர் அரசு மருத்துவ மனையில் விபத்து போன்ற காலகட்ட ங்களில் ஏற்படும் இறப்புகளை தவிர்ப்பதற்காக அவசர சிகிச்சை பிரிவை ஏற்படுத்த வேண்டும்.
பொது பிரிவுக்கு என்று மட்டும் தற்சமயம் மருத்துவர்கள் இருந்து வரும் நிலையில் காது, மூக்கு, தொண்டை மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு என்று மருத்துவர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும். நகரில் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டில் பார்மலின் திரவம் கலக்கப்பட்டு விற்கப்படுவதை தடுப்பதற்கு துறை சார்ந்த அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. அப்போது மாவட்ட தலைவர் சதக்கத்துல்லா உடனிருந்தார்.
- 3 மாதங்களுக்கு முன்பு தனபாலன், மனைவியிடம் நான் திருந்தி விட்டேன் என்று கூறி சினேகவள்ளியை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
- மீண்டும் கணவன்-மனைவி வாழ்ந்து வந்த நிலையில் தனபாலன் குடிபோதையில் நேற்று குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற சமயத்தில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருவேம்பத்தூர் ஆந்தகுடி இரவிய மங்கலம் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் தனபாலன் (வயது45), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சினேகவள்ளி (38), இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
தனபாலன் தினமும் குடித்துவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார். இதையடுத்து 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவனிடம் இருந்து பிரிந்து மனைவி சினேகவள்ளி, தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
3 மாதங்களுக்கு முன்பு தனபாலன், மனைவியிடம் நான் திருந்தி விட்டேன் என்று கூறி சினேகவள்ளியை வீட்டுக்கு அழைத்து வந்தார். மீண்டும் கணவன்-மனைவி வாழ்ந்து வந்த நிலையில் தனபாலன் குடிபோதையில் நேற்று குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற சமயத்தில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர், மண்வெட்டியால் மனைவியை தாக்கி கொன்றார்.
தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் குமார், திருவேகம்பத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சினேக வள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சில மணி நேரங்களில் தனபாலனும் கைது செய்யப்பட்டார். மனைவியை அடித்து கொல்ல பயன்படுத்திய மண்வெட்டியை போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.
- ராமு கொலையை தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
- செங்கோட்டை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ராமு (வயது27). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற ராமு, இரவு ஆகியும் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அங்குள்ள இம்மனேந்தல் கண்மாய் கரையில் வாலிபர் ஒருவரின் உடல் தலை இல்லாமல் கிடந்ததை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். அவரை யாரோ மர்மநபர்கள் தலை துண்டித்து கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து மானாமதுரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்தவர் மாயமாகி தேடப்பட்டு வந்த ராமு என்பது தெரியவந்தது. ராமுவின் உடல் மட்டுமே அங்கு கிடந்தது. அவரது தலை சம்பவ இடத்தில் இல்லை.
ராமு கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
கொலை செய்யப்பட்டது வாலிபர் ராமு என்பதை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து அவரது உடலை போலீசார் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ராமுவை தலை துண்டித்து கொலை செய்தது யார்? எதற்காக கொன்றார்கள்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராமுவின் தலை போலீசாருக்கு கிடைக்கவில்லை. அவரை கொன்ற கொலையாளிகளை தலையை துண்டித்து எடுத்து சென்றுள்ளனர்.
ராமு பிணம் மீட்கப்பட்ட கண்மாய் மற்றும் அதனை சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் போலீசார் தலையை தேடி வருகின்றனர்.
ராமு கொலையை தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால் செங்கோட்டை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் சம்பவ இடத்திற்கு சென்று நேரடி விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் இன்று காலை கொலை நடந்த பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விசாரணையை துரிதப்படுத்தி கொலையாளிகளை விரைவில் கண்டுபிடித்து கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
- சிங்கம்புணரி அருகே 50 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
- அர்களுக்கு சர்க்கரை பொங்கல், லெமன் சாதம், புளிசாதம், தயிர் சாதம், வெஜிடேபிள் பிரியாணி உள்ளிட்ட 5 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள ஏரியூரில் திருமலை மருதீஸ்வரர் திருமண மண்டபத்தில் அரசு சார்பில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடந்தது.
சமூகநலன் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணை ந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகிய துறைகளின் சார்பில் இந்த வளைகாப்பு விழா நடைபெற்றது. ஒன்றிய தலைவர் திவ்யாபிரபு தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
விழாவில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு மாலை அணிவித்து கன்னத்தில் சந்தனம் பூசி, நெற்றியில் குங்குமமிட்டு, கைகளில் கண்ணாடி வளையல் அணிந்து வளைகாப்பை நடத்தினர். அதனை தொடர்ந்து அவர்களுக்கு சில்வர் கிண்ணம், வாழைப்பழம், மஞ்சள், குங்குமம், ரவிக்கைதுணி, மஞ்சள் கயிறு, தாம்பூலத்தில் வைத்து சீதனமாக வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு சர்க்கரை பொங்கல், லெமன் சாதம், புளிசாதம், தயிர் சாதம், வெஜிடேபிள் பிரியாணி உள்ளிட்ட 5 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது.
இந்த விழாவில் மாவட்ட திட்ட அலுவலர், வட்டார குழந்தைகள் திட்ட அலுவலர், ஏரியூர் ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
- இளையான்குடி அருகே உள்ள தர்காவில் தமிழ்மகன் உசேன் தலைமையில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.
- முன்னதாக அவர் அ.தி.மு.க. கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
சிவகங்கை
எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்திட அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தமிழகம் முழுவதும் உள்ள தர்காவிலும் சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் புதூரில் புலவர் மீரா தர்காவில் மாவட்ட செயலாளரும், சிவகங்கை எம்.எல்.ஏ.வுமான செந்தில் நாதன் தலைமையில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்திட சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடத்தினார்.
பின்னர் தொண்டர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க.வில் ஜாதி, மதம் கிடையாது. அவரவர் மத வழிபாட்டின் படி இறைவனிடம் வேண்டி கூட்டு பிரார்த்தனை செய்து மீண்டும் எடப்பாடி யார் தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்திட பிரார்த்திப்போம் என்றார்.
முன்னதாக அவர் அ.தி.மு.க. கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், நகரசெயலாளர் மீரா, ஒன்றிய செயலாளர்கள் பாரதிராஜன், ஜெகதீசுவரன், கோபி, செல்வமணி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தேவகோட்டையில் எடப்பாடி அணியைச் சேர்ந்தவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஓ.பி.எஸ். அணியில் இணைந்தனர்.
- சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆவின் சேர்மன் அசோகன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் இணையும் நிகழ்ச்சி நடந்தது.
தேவகோட்டை
அ.தி.மு.க. ஒருங்கி ணைப்பாளர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையை ஏற்று சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆவின் சேர்மன் அசோகன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் இணையும் நிகழ்ச்சி நடந்தது.சாக்கோட்டை கிழக்கு ஒன்றியக் செயலாளர் பாண்டி, மற்றும் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், காரைக்குடி பெருநகர செயலாளர் பாலா, தேவகோட்டை நகர செயலாளர் ரவிக்குமார், காரைக்குடி தொகுதி செயலாளர் பழனி, கன்னங்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் பாண்டி, தேவகோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் வினோத், தெற்கு ஒன்றிய செயலாளர் பாவாசி கருப்பையா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கணேஷ் பாபு, முன்னிலை வகித்தனர்.
எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து விலகி சாக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த ஒன்றிய துணைச் செயலாளர் ஊரவயல் முத்து மாணிக்கம், அரியக்குடி கிளைச் செயலாளர் ஆறுமுகம், கலாவதி வார்டு கவுன்சிலர் சேகர், எம்.ஜி.ஆர். மன்றம் ராகப்பன், எம்.ஜி.சின்னக்கருப்பன், முத்தரையர் சங்கத் தலைவர் கணேசன், ஒன்றிய பாசறை செயலாளர் ராமராஜன் கண்மாய்க்குடியிருப்பு சுப்பிரமணியன், மா சின்னத்தம்பி, மகளிர் அணியினர் உட்பட 500 நபர்கள் இணைந்தனர்.
- ரூ.4.73 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்படுகிறது.
- இதற்கான பூமி பூஜை நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூ.4.73 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நடந்தது.
இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
இந்திய நாட்டின் வளர்ச்சி என்பது கிராமப்புறங்களின் வளர்ச்சியை பொறுத்தே அமைகிறது என்ற அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராமப்புற மேம்பாட்டிற்கு தனித்துவமளித்து அதற்கான அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் வருகிற நிதியாண்டில் சாக்கோட்டை, எஸ்.புதூர், சிவகங்கை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும், புதிய அலுவலக கட்டிடத்திற்கான பணிகள் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர, சிங்கம்புணரி, திருப்பத்தூர், மானாமதுரை ஆகிய ஊராட்சி ஒன்றி யங்களுக்கும், புதிய அலுவலகக் கட்டிடங்கள் அமைப்பதற்கும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஊராட்சி அளவிலும், ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் அமைப்பதற்கும் முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, 600-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி செயலகம் தமிழகம் முழுவதும் அமைப்பதற்கு ஆணை பிறப்பித்துள்ளார்.
அந்த ஊராட்சி செயல கத்தில் கிராம நிர்வாக அலுவலகம், இணையதள சேவை, ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான அறை, கூட்டரங்கம் மற்றும் அலுவலர்கள் பிரிவிற்கான தனி அறை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும், கிராம பகுதிகளில் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பழமையான கட்டி டங்களை இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், சிங்கம்புணரி வட்டம், உரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பயனாளிக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகைக்கான ஆணையைஅமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சண்முகவடிவேல், பேரூராட்சித் தலைவர் கோகிலாராணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் வெண்ணிலா, மானாமதுரை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் லதாஅண்ணாதுரை, நெற்குப்பை பேரூராட்சித் தலைவர் புசலான், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் மீனாள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ரவி, மதிவாணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், வட்டாட்சியர்கள் திருப்பத்தூர் வெங்கடேசன், சிங்கம்புணரி சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயக்குமார், தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கையில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
- இதில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.
பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, பொது மக்களிடம் இருந்து 352 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தேவகோட்டை வட்டத்திற்குட்பட்ட 5 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டத்தின் கீழ், தலா ரூ.1,000 வீதம் மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணைகளையும், இளையான்குடி கிளை, தெற்கு கீரனூர் (வடக்கு) பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் சார்பில் 16 பயனாளிகளுக்கு கிசான் கடன் திட்டத்தின் கீழ், ரூ.3 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டிலான கறவை மாட்டு பராமரிப்புக் கடனுதவிகளும், இளையான்குடி கிளை, நெஞ்சத்தூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் சார்பில் 6 பயனாளிகளுக்கு கிசான் கடன் திட்டத்தின் கீழ், ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பீட்டிலான கறவை மாட்டு பராமரிப்புக் கடனுதவிகளும் வழங்கப்பட்டன.
வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை விளைநிலமாக மாற்றுவதற்கென ரூ.1 லட்சத்து 34ஆயிரத்து 200 மதிப்பீட்டில் பின்னேற்ப்பு மானியத் தொகைக்கான ஆணைகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 1 ஹெக்டேர் பரப்பளவில் பழச்செடிகள், கால்நடை, தேனீ வளர்ப்பு மற்றும் மண்புழு உரக்கூடம் அமைப்பதற்கென தலா ரூ.50ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் மானியத் தொகைகான ஆணைகளையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு தேய்ப்புப்பெட்டியையும் என ஆக மொத்தம் 36 பயனா ளிகளுக்கு ரூ.9 லட்சத்து 63 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.






