search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    21 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா
    X

    விருதுநகரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற ராஜபாளையம் மாணவர் முனியசாமி, மாணவிகள் ஜீவிதா, அமலா ஆகியோர் கலெக்டர் மேகநாதரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    21 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

    • வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை விருதுநகர் கலெக்டர் வழங்கினார்.
    • திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திற னாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    இதில் ராஜபாளையம் ரிதம் அறிவுசார் குறை பாடுடையோர்க்கான சிறப்பு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சென்னையில் நடந்த மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர் முனியசாமி 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், மாணவி ஜீவிதா நீளம் தாண்டுதல் போட்டியிலும், மாணவி அமலா கிரிக்கெட் பந்து எறிதல் போட்டியிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். அவர்கள் பெற்ற சான்றிதழ் மற்றும் கேடயத்தை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

    முன்னாள் படைவீரர் கொடிநாளையொட்டி 2019-ம் ஆண்டில் அதிக வசுல் செய்து சாதனை புரிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, சார் பதிவாளர் முத்துச்சாமி ஆகியோருக்கு வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில், ஆனையூர், மங்களம், கீழ திருத்தங்கல் பகுதிகளை சேர்ந்த வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு தலா 2 சென்ட் வீதம் தலா ரூ.20ஆயிரம் என மொத்தம் ரூ.4 லட்சத்து 20ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் தலா ரூ.65ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 30ஆயிரம் மதிப்பிலான நவீன செயற்கை கால்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    Next Story
    ×