வாக்காளர் சிறப்பு முகாமை ஆய்வு செய்த எம்.எல்.ஏ.

வாக்காளர் சிறப்பு முகாமை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி கடந்த கடந்த 9-ந் தேதி தொடங்கி வருகிற டிசம்பர் 8-ந் தேதி வரை நடக்கிறது.
வாக்காளர் சிறப்பு முகாமை ஆய்வு செய்த எம்.எல்.ஏ.
Published on

சிவகங்கை

சிவகங்கையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த கடந்த 9-ந் தேதி தொடங்கியது. வருகிற டிசம்பர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த காலகட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், இவற்றுடன் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கான படிவங்களையும் பூர்த்தி செய்து ஆவணங்களுடன் வழங்கலாம். சிவகங்கை மாவட்டம் முழுவதும் நேற்று வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது. மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் மேற்கு ஒன்றியம் மணலூர் ஊராட்சியில் நடந்த புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், மற்றும் வாக்காளர் சேர்ப்புக்கான முகவர்களிடம் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், சிவகங்கை எம்.எல்.ஏ.வுமான பி.ஆர்.செந்தில்நாதன் ஆய்வு செய்தார். இதில் திருப்புவனம் மேற்கு ஒன்றிய செயலாளர் சோனைரவி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மணலூர் மணிமாறன், வக்கீல் திருப்புவனம் மதிவாணன், கிளைச் செயலாளர்கள் பீசர்பட்டினம் ராமச்சந்திரன், கீழடி சதாசிவம், மணலூர் பிரபு, தயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com