எடப்பாடி அணியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் ஓ.பி.எஸ். அணியில் இணைப்பு

தேவகோட்டையில் எடப்பாடி அணியைச் சேர்ந்தவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஓ.பி.எஸ். அணியில் இணைந்தனர். சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆவின் சேர்மன் அசோகன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் இணையும் நிகழ்ச்சி நடந்தது.
தேவகோட்டையில் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஓ.பி.எஸ். அணியில் இணைந்தனர்.
தேவகோட்டையில் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஓ.பி.எஸ். அணியில் இணைந்தனர்.
Published on

தேவகோட்டை

அ.தி.மு.க. ஒருங்கி ணைப்பாளர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையை ஏற்று சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆவின் சேர்மன் அசோகன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் இணையும் நிகழ்ச்சி நடந்தது.சாக்கோட்டை கிழக்கு ஒன்றியக் செயலாளர் பாண்டி, மற்றும் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், காரைக்குடி பெருநகர செயலாளர் பாலா, தேவகோட்டை நகர செயலாளர் ரவிக்குமார், காரைக்குடி தொகுதி செயலாளர் பழனி, கன்னங்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் பாண்டி, தேவகோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் வினோத், தெற்கு ஒன்றிய செயலாளர் பாவாசி கருப்பையா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கணேஷ் பாபு, முன்னிலை வகித்தனர்.

எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து விலகி சாக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த ஒன்றிய துணைச் செயலாளர் ஊரவயல் முத்து மாணிக்கம், அரியக்குடி கிளைச் செயலாளர் ஆறுமுகம், கலாவதி வார்டு கவுன்சிலர் சேகர், எம்.ஜி.ஆர். மன்றம் ராகப்பன், எம்.ஜி.சின்னக்கருப்பன், முத்தரையர் சங்கத் தலைவர் கணேசன், ஒன்றிய பாசறை செயலாளர் ராமராஜன் கண்மாய்க்குடியிருப்பு சுப்பிரமணியன், மா சின்னத்தம்பி, மகளிர் அணியினர் உட்பட 500 நபர்கள் இணைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com