என் மலர்
சிவகங்கை
- வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
- மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை
தமிழக அரசின் கூடுதல் ஆணையர் (நில சீர்திருத்த ஆணையகம்) சாந்தா வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளராக மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் சிவகங்கை மாவட்டத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2023 பணிகள் தொடர்பாக, மாவட்டத்தில் வாக்காளர் பதிவு அலுவலர்களாக உள்ள சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களாக உள்ள வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், தேர்தல் தனித்துணை வட்டாட்சியர்கள் மற்றும் இதர வருவாய் அலுவர்கள் ஆகியோர்களுடன் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார்.
இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சாந்தா, வாக்காளர் சரிபார்ப்பு பட்டியலை ஏற்பளிப்பு செய்து அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), தனி வட்டாட்சியர் (தேர்தல்) மாணிக்கவாசகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மத்திய தரைவழி மற்றும் விமான போக்குவரத்து இணை அமைச்சர் விஜயகுமார் சிங் சிவகங்கைக்கு வந்தார்.
- அங்குள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு மத்திய மந்திரி மரியாதை செலுத்தினார்.
திருப்பத்தூர்
மத்திய தரைவழி மற்றும் விமான போக்குவரத்து இணை அமைச்சர் விஜயகுமார் சிங் சிவகங்கைக்கு வந்தார். அவர் திருப்பத்தூரில் உள்ள மருது சகோதரர்கள் மணிமண்டபத்திற்கு சென்று அங்குள்ள அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக பிள்ளையார் பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் மத்திய மந்திரி சாமி தரிசனம் செய்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட தலைவர் மேப்பல் சத்தியநாதன், மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் முருகேசன், ஒன்றிய தெற்கு ஒன்றிய தலைவர் தங்கபாண்டி, மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
- அச்சமின்றி பணியாற்ற ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்.
- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பா ண்டியன் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் பொருளா தரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் கல்வி அறிவு பெறுவதில் அரசுபள்ளிகள் முக்கிய அங்கம் வகிக்கிறது.
சமீபகாலமாக ஆசிரியர்கள் சமூக விரோதிகளால் பல்வேறு தொல்லை களுக்கு ஆளாகின்றனர். ஆசிரியர்களை பள்ளி வளாகத்திற்குள் புகுந்து தாக்கிய சம்பவங்களும் சில இடங்களில் அரங்கேறி உள்ளன. உண்மையிலேயே தவறி ழைக்கும் ஆசிரியர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதை வரவேற்கும் அதேநேரத்தில் பொய்யான குற்றச்சாட்டால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். குழந்தைகளோடு நேரடி தொடர்புள்ளதால் பல தேவையற்ற பொய்யான குற்றச்சாட்டிற்கு ஆசிரியர்கள் ஆளாக நேரிடுகிறது.
படிப்பில் பின் தங்கிய மாணவர்களை கண்டித்த தற்காக ஆசிரியர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறுவதும், சில அரசியல் காரணங்களுக்காகவும் பல்வேறு ஆசிரியர்கள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. சில இடங்களில் விசாரணை யின்றி ஆசிரியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இதனால் கற்றல் கற்பித்தலில் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த நிலைகளை மாற்று வதற்கு ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை மையங்களை பள்ளிகளில் நிறுவ வேண்டும். மதிப்பெண் எடுப்பதை முக்கியமாக கருதாமல் சிந்தனைகளை தூண்டும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்க வேண்டும். மேலும் மாணவர்கள் விளையாட்டு மைதானங்களில் செலவிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். விளையாடுவதன் மூலம் வகுப்பறை அழுத்தத்திலிருந்து விடுபட முடிகிறது.
வருங்கால மாணவர் சமுதாயம் அறிவாற்றல் வாய்ந்த வலிமையான சமுதாயமாக மாற்றுவதற்கான ஒத்துழைப்பை ஆசிரியர்கள் தருவதற்கு கடுமையாக உழைக்கும் அதே நேரத்தில் அவர்கள் அச்சமில்லாமலும், மனநிறைவுடனும் பணியாற்ற ஏதுவாக தமிழக மருத்துவர்களுக்கு உள்ளதுபோல் பணி பாதுகாப்பு சட்டத்தை ஆசிரியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகளை கட்டாயமாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவகங்கையில் முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- இதில் முன்னாள் படைவீரர் உதவி இயக்குநர் விஜயகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 15 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.
தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மனுதாரர்களுக்கு உரிய பதிலினை தெரிவிக்கும்படியும், அக்கோரிக்கை மனுக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, அம்மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆய்விற்குட்படுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் 35 முன்னாள் படைவீரர்களுக்கு திருமண மானியம், கண்கண்ணாடி மானியம் மற்றும் கல்வி உதவித்தொகை என மொத்தம் ரூ.6,74,900-மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
இதில் முன்னாள் படைவீரர் உதவி இயக்குநர்
விஜயகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- இலங்கை பொருளாதார வீழ்ச்சியின் போது மனிதாபிமான அடிப்படையில் பிற நாடுகளை விட இந்தியா அதிகம் உதவிகள் செய்துள்ளது.
- சேது சமுத்திர திட்டம் குறித்து இந்தியா தான்முடிவு செய்ய வேண்டும்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் இலங்கையின் முன்னாள் முதல்-அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவர் செந்தில் தொண்டமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கை பொருளாதார வீழ்ச்சியின் போது மனிதாபிமான அடிப்படையில் பிற நாடுகளை விட இந்தியா அதிகம் உதவிகள் செய்துள்ளது. இதனால் இலங்கை-இந்திய உறவு மேலும் பலப்பட்டுள்ளது. இலங்கையில் டாலர் தட்டுபாடு நிலவி உள்ளதால், பிற நாட்டு கரன்சிகளை பயன்படுத்த அனுமதி வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஐ.எம்.எப். நிதி கிடைத்தால் இலங்கை இன்னும் இரு ஆண்டுகளில் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது. மேலும் உள்நாட்டு போருக்கு பிறகு இலங்கை அபிவிருத்தி திட்டங்களுக்கு சீனா அதிக அளவு முதலீடு செய்தது.
சீனாவிற்கு அதிகளவு வட்டி கட்ட வேண்டி இருந்த காரணத்தினால், இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சியடைய காரணமாக அமைந்தது. சேது சமுத்திர திட்டம் குறித்து இந்தியா தான்முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது ஜல்லிக்கட்டு மாநில இளைஞர் அணி தலைவர் ராஜேஷ் உடனிருந்தார்.
- ஜெயலலிதா பிறந்தநாள் கைப்பந்து போட்டியை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
- அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகடாமி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. இளைஞர் பாசறை மாவட்ட துணை செயலாளர் சந்தனமூர்த்தி ஏற்பாட்டில் காளை யார்கோவில் ஒன்றியம் மறவமங்கலம் அரசு மேல்நி லைப்பள்ளி மைதானத்தில் கைபந்து போட்டி நடந்தது.முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தலைமை தாங்கி ேபாட்டியை தொடங்கி வைத்தார்.
காளையார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, ஸ்டீபன்அருள்சாமி, இளைஞரணி துணை செயலாளர் கருணாகரன், மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு.முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சரவணன், பாசறை மாவட்ட இணை செயலாளர் மோசஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகடாமி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மத்திய மந்திரி வி.கே.சிங் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
- மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.
கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். இதில் மத்திய மந்திரி வி.கே. சிங் கலந்து கொண்டு அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி இந்தி யாவில் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி, இந்தியாவை வளாச்சிப்பாதையில் வழிநடத்தி செல்கிறார். அதன்மூலம் தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்கும் நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.
அனைத்து மாநிலங்க ளிலும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பயன்பெறும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டங்களின் பயன்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒவ்வொரு துறையைச் சார்ந்த அலுவலர்களின் கடமையாகும்.
தகுதியான பயனா ளிகளுக்கு உரிய பயன்கள் கிடைக்கப் பெறுவதற்கான நடவடிக்கைகளை, அலு வலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர்கள் பாண்டியன் (காரைக்குடி) நாகராஜன் (மதுரை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்புவனத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தினசரி இரு முறை 44 டவுன் பஸ்கள் மூலம் மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது.
- பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து இரவு இடைக்காட்டூர் கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டது.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரில் நிலைதடுமாறிய பஸ் வீட்டின் சுவற்றில் மோதியதில் 8 பேர் காயமடைந்தனர்.
அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்டம் சார்பில் திருப்புவனத்தில் கிளை பணிமனை இயங்கி வருகிறது. திருப்புவனத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தினசரி இரு முறை 44 டவுன் பஸ்கள் மூலம் மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது.
பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து இரவு இடைக்காட்டூர் கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. உசிலம்பட்டி காசிமாயன் (41) பஸ்சை ஓட்டினார். திருப்புவனத்தில் பயணிகளை இறக்கி விட்டு மீதமுள்ள 15 பயணிகளுடன் கிளம்பிய பஸ், புதூரில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வீட்டின் சுவற்றில் மோதி நின்றது.
இந்த விபத்தில் பஸ் பயணிகள் 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் மீட்கப்பட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். மேலும் இந்த விபத்து குறித்து திருப்புவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சன் பயோ நேச்சுரல்ஸ் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- வேப்பங்கொட்டையில் இருந்து எண்ணெய் தயாரிப்பது, மூலப்பொருட்களை எவ்வாறு சேமிப்பது குறித்து விவாதம் நடந்தது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள விசாலயன்கோட்டை சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயோ ஆராய்ச்சி மற்றும் பூச்சி கட்டுப்பாடு எனும் தலைப்பில் ஆய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக சன் பயோ நேச்சுரல்ஸ் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி தாளாளர் டாக்டர் சேது குமணன், சன் பயோ நேச்சுரல்ஸ் நிறுவன அதிகாரி சக்திவேல் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
கல்லூரியின் கூட்ட அரங்கில் பயோ ஆர்கானிக் உரம் மற்றும் பூச்சி கட்டுப்பாடு குறித்த விவாதம் நடந்தது. வேப்பங்கொட்டையில் இருந்து எண்ணெய் தயாரிப்பது, மூலப்பொருட்களை எவ்வாறு சேமிப்பது குறித்து விவாதம் நடந்தது. உதவி பேராசிரியர் கருப்புராஜ், ஆர்கானிக் உரம் தொழில்நுட்பத்தை பற்றியும், பூச்சியல் இணை பேராசிரியர் விஷ்ணுபிரியா, ஆர்கானிக் பூச்சிக்கொல்லி பற்றியும் பேசினர். இதில் கல்லூரி தாளாளர் சேதுகுமணன், பயோ நேச்சுரல்ஸ் சக்திவேல், ஆடிட்டர் எழில், இயக்குநர் கோபால் உள்பட பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் 13 முன்னாள் கைதிகளின் மறுவாழ்வுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதியுதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- பொருளாதாரம் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிவகங்கை
தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் காலமுறை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகக் சிறு கூட்ட ரங்கில் நடந்து. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அவர் பேசியதாவது:-
பொது மன்னிப்பில் விடுதலையான சிறை வாசிகளின் மறுவா ழ்விற்கென, தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவர்க ளின் வாழ்வா தாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழக அரசால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சிறைவாசிகள் சிறுதொழில்கள் தொடங்கி, அவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் மூலம் உதவித் தொகைகள் வழங்கப்பட்டு அவர்களின் பொருளாதாரம் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் பொது மன்னிப்பில் விடுதலையான 13 முன்னாள் சிறை வாசி களுக்கு, அவர்களின் மறுவாழ்விற்காக தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகையை பெறும் பயனா ளிகள், இதன்மூலம் சிறு தொழில்கள் தொடங்கி, நல்லமுறையில் தங்களது வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) சுந்தரராஜ், சிறை மீண்டோர் உதவி சங்கத்தின் செயலாளர் பகீரத நாச்சியப்பன், சிவகங்கை மண்டல நன்னடத்தை அலுவலர் சேதுராமன், நன்னடத்தை அலுவலர்கள் பிரியதர்ஷினி, பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தேவகோட்டையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை செலுத்தினர்.
- மாவட்ட செயலாளர் அசோகன் உறுதிமொழி வாசிக்க அனைவரும் திரும்பக்கூறி எடுத்துக்கொண்டனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆர்ச் பூங்கா அருகில் ஓ.பி.எஸ்.அணி அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் அசோகன், கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் தலைமை தாங்கினார்.
திருச்சி-ராமேசுவரம் சாலையில் சங்கரபதி அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் அசோகன், கொள்கை பரப்பு செயலா ளர் மருதுஅழகுராஜ் தலைமையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்ப ட்டோர் தேவகோட்டை ஒன்றிய அலுவலகத்தில் இருந்து மவுன ஊர்வலமாக புறப்பட்டனர்.
திருப்பத்தூர் சாலை வழியாக தியாகிகள் அருகே அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மாவட்ட செயலாளர் அசோகன் உறுதிமொழி வாசிக்க அனைவரும் திரும்பக்கூறி எடுத்துக்கொண்டனர்.
மாநில மாணவரணி செயலாளர் ஆசைத்தம்பி, நகர் செயலாளர்கள் ரவிக்குமார், பாலா, ஒன்றிய செயலாளர்கள் மருத்தாணி வினோத், தியாகராஜன், ராமசந்திரன், பாவாசி கருப்பையா, கண்ணங்குடி ஒன்றிய செயலாளர்கள் உலக்குடி பாலசுப்பிர மணியன், பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






