1,150 பேருக்கு அமைச்சர் பெரியகருப்பன் பட்டம் வழங்கினார்

1,150 பேருக்கு பட்டங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். ஜனாப் அப்துல் சலீம், சிராஜுதீன் மற்றும் அவுரங்கசீப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
1,150 பேருக்கு  அமைச்சர் பெரியகருப்பன் பட்டம் வழங்கினார்
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் 12-வது பட்டமளிப்பு விழா நடந்தது. ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாஹ் கான் தொடங்கி வைத்தார்.

முதல்வர்அப்பாஸ் மந்திரி வரவேற்று அறிக்கை சமர்ப்பித்தார். சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா, கல்வியியல் கல்லூரி அறிக்கை சமர்ப்பித்தார்.

சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு 1,150 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

முன்னாள் கல்லூரி மாணவியும், மானாமதுரை எம்.எல்.ஏ.வுமான தமிழரசி,முன்னாள் எம்.எல்.ஏ. சுபமதியரசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜுமுதின், கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அஹமது ஜலாலுதீன், பொருளாளர் அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அஸ்ரப் அலி, ஜனாப் அப்துல் சலீம், சிராஜுதீன் மற்றும் அவுரங்கசீப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com