search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் வகையில் காளைகளுக்கு தீவிர பயிற்சி: இலங்கை முன்னாள் முதலமைச்சர்
    X

    காளைகளுக்கு பயிற்சி அளிப்பதை படத்தில் காணலாம்.

    ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் வகையில் காளைகளுக்கு தீவிர பயிற்சி: இலங்கை முன்னாள் முதலமைச்சர்

    • பேட்டகாளி, சோழன், அணில், கரிசல், கரிகாலன், புல்லட் என இவர் வளர்க்கும் காளைகளுக்கு செல்ல பெயர் வைத்துள்ளார்.
    • ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போலவே ஒவ்வொரு காளையும் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வருகிறது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இலங்கையின் முன்னாள் முதலமைச்சரும், இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் திருப்பத்தூர் அருகே ஆளவிளாம்பட்டி கிராமத்திலுள்ள அவரது தோப்பில் தமிழகம் மற்றும் வெளி மாநில காளைகளை வாங்கி பராமரித்து வருகிறார்.

    ஜல்லிக்கட்டில் ஆர்வம் உள்ள செந்தில் தொண்டமான் தன்னுடைய காளைகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க வைப்பது வழக்கம். அவருடைய காளைகள் பரிசுகளை குவித்து நம்பர் ஒன் காளைகளாக திகழ்ந்து வருகின்றன.

    பேட்டகாளி, சோழன், அணில், கரிசல், கரிகாலன், புல்லட் என இவர் வளர்க்கும் காளைகளுக்கு செல்ல பெயர் வைத்துள்ளார். சீறிப்பாய்வதில் அசாத்திய திறமை, பெருத்த திமில், கூரிய கொம்புகள், ராஜநடையோடு கம்பீரமாக வலம் வரும் இந்த காளைகள் களத்தில் வீரர்களை மிரள வைக்கும் அளவிற்கு சிறப்பு பயிற்சிகளை அளித்து வருகிறார் செந்தில் தொண்டமான்.

    பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக எனது தோட்டத்திலேயே வாடிவாசல் ஏற்பாடு செய்து அதன் வழியாக பாய்ந்தோட பயிற்சி வழங்குதல், சீறிப்பாய்ந்து மணற்மேடுகளை முட்டுதல், மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் இருக்க தனி பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் காளையின் உடல் வலிமைக்காக வழக்கமான உணவுகளை தவிர்த்து பேரிச்சம் பழம், பருத்தி விதை, புண்ணாக்கு, முட்டை, கோதுமை தவிடு போன்ற ஊட்டமளிக்கும் உணவுப் பொருள்களை வழங்குகின்றோம்.

    காளைகளுக்கு தினமும் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போலவே ஒவ்வொரு காளையும் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வருகிறது.

    ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டிக்கும் சென்றுவர கேரவன், தனித்தனி அறைகளில் பேன், ஏர்கூலர், வசதியுடன் கூடிய தங்குமிடம் என இந்த காளைகளுக்கு அனைத்து வசதிகளோடு கூடிய பராமரிப்பும் தீவிர பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×