என் மலர்
நீங்கள் தேடியது "New Route"
- புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கத்தை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- நிர்வாகி சோனைமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது சிறுகுடி. இந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி கிடையாது. தற்போது சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதி வந்து விட்டாலும் பஸ் வசதி இல்லாமல் மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள முத்தனேந்தல் அல்லது இடைக்காட்டூர் வந்து சிறுகுடி மக்கள் பஸ் ஏறி வெளியூர் சென்று வந்தனர்.
இது குறித்து மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசியிடம் உங்கள் முயற்சியால் சிறுகுடிக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழரசி எம்.எல்.ஏ. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 75 வருடமாக போக்குவரத்து வசதி இல்லாத சிறுகுடி கிராமத்திற்கு புதிய பஸ் வழித்தடத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் அவர் கிராம மக்களோடு பஸ்சில் பயணமும் செய்தார். இதில் தி.மு.க. ஒன்றிய குழு துணை தலைவர் முத்துசாமி ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணம், ஒன்றிய கவுன்சிலர்கள் ராதா சிவச்சந்திரன், மலைச்சாமி, நிர்வாகி சோனைமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி அருகே ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ நேரில் விடுத்த வேண்டுகோளை ஏற்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வரகனூர் (வழி புளியங்குளம், லட்சுமிபுரம், இளையரசனேந்தல்) வழித்தடத்தில் தினமும் 5 முறை வந்து செல்லும் வகையில் பஸ் இயக்க உத்தரவிட்டுள்ளார். இதன் தொடக்க விழா இன்று காலை இளையரசனேந்தலில் நடைபெற்றது.
இதில் துரைவைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்து பயணச்சீட்டெடுத்து பஸ்சில் பயணித்தார்.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ரமேஷ், ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், மத்திய பகுதி ஒன்றிய செயலாளர் சரவணன், கோவில்பட்டி நகர செயலாளர் பால்ராஜ், இளையரசனேந்தல் பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜாராம், முன்னாள் யூனியன் சேர்மன் எல்.எஸ். கணேசன், மேற்குபகுதி ஒன்றிய செயலாளர் கேசவன், கோவில்பட்டி நகர துணை செயலாளர் வனராஜன், ம.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் நகராஜன், லியோ செண்பகராஜ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கொம்பையா, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






