

சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 15 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.
தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மனுதாரர்களுக்கு உரிய பதிலினை தெரிவிக்கும்படியும், அக்கோரிக்கை மனுக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, அம்மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆய்விற்குட்படுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் 35 முன்னாள் படைவீரர்களுக்கு திருமண மானியம், கண்கண்ணாடி மானியம் மற்றும் கல்வி உதவித்தொகை என மொத்தம் ரூ.6,74,900-மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
இதில் முன்னாள் படைவீரர் உதவி இயக்குநர்
விஜயகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.