என் மலர்
சிவகங்கை
- வாகனம் மோதி 3 மாடுகள் பலியாகின.
- விபத்தில் 3 மாடுகள் இறந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர்
திருப்புத்தூர் அருகே உள்ள புதுகாட்டாம்பூரில் சாலையில் படுத்து கிடந்த மாடுகள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.இதில் 3 மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் ஒரு மாட்டுக்கு கொம்பு உடைந்தது.
மற்றொரு மாட்டுக்கு காலில் காயம் ஏற்பட்டு காயங்களுடன் தப்பித்து ஓடியது. இதனைக்கண்ட அப்பகுதிமக்கள் மாட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். காயமடைந்த மாடுகளுக்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த பகுதியில் சாலையில் சுற்றிதிரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது நடந்த விபத்தில் 3 மாடுகள் இறந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- மாங்குடி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
காரைக்குடி
மத்திய அரசை கண்டித்து காரைக்குடி வ.உ.சி. சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு காங்கிரஸ் சார்பில் மாங்குடி
எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், நகர செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தனர்.
இதில் நிர்வாகிகள் பங்கேற்று கோஷம் எழுப்பினர். நகர தலைவர் பாண்டி, கவுன்சிலர் ரத்தினம், வட்டார தலைவர்கள் செல்வம், கருப்பையா, ஒன்றிய கவுன்சிலர் கோவிலூர் அழகப்பன், கண்டனூர் நகர தலைவர் குமார், வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஜெயப்பிரகாஷ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரவீன், சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜான்பால், நிர்வாகிகள் நெல்லியான், அப்பாவு, பழ காந்தி, மணச்சை பழனியப்பன், கருப்பையா, தட்சிணாமூர்த்தி, புதுவயல் முகமது மீரா, அருணா, பாலா, மாஸ்மணி, மகளிரணி சூர்யா, நாச்சம்மை, வசந்தாதர்மராஜ், மாரியாயி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை
இதேபோன்று தேவகோட்டை ஸ்டேட் வங்கி முன்பு மாங்குடி எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட துணைத்தலைவர் அப்பச்சி சபாபதி, நகர தலைவர் இரவுசேரி சஞ்சய், இலக்கிய அணி சாமிநாதன், வடக்கு வட்டார காங்கிரஸ் இளங்குடி முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- 24 பயனாளிகளுக்கு ரூ.17.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- சாந்தி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.
இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனா ளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதில் வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மானாமதுரை வட்டத்தைச் சேர்ந்த 10 பயனாளிகளுக்கு உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளையும், தொழிலாளர் நலத்துறையின் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) சார்பில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா நலவாரியங்களின் கீழ், 10 பயனாளிகளுக்கு ஓய்வூதியத்திற்கான ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.
மொத்தம் 24 பயனா ளிகளுக்கு ரூ.17 லட்சத்து 77 ஆயிரத்து 691 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவி களை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நடந்த கலைத்திருவிழாவில் ஓட்டப்பந்தயம், பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி விடுதி மாணவ- மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், புத்தகங்களை கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) சாந்தி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- காளையார்கோவில் அருகே வருகிற 9-ந் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், பள்ளிவயல் குரூப், பள்ளித்தம்பம் கிராமத்தில் உள்ள நாடகமேடையில் வருகிற 9-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களை கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதி வாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த முகாமின் நோக்கமாகும். மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நடைபெற உள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.
- இரட்டைக்கொலை வழக்கில் துப்புதுலக்காததை கண்டித்து தேவகோட்டையில் நாளை உண்ணாவிரதம்-கடையடைப்பு நடைபெறும்.
- இந்த போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் பொதுமக்கள், வணிகர்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த மாதம் 11-ந் தேதி அதிகாலை நேரத்தில் கனகம், அவரது மகள் வேலுமதி, பேரன் மூவரசு ஆகிய 3 பேரை அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் வெட்டி விட்டு கனகம் தனது பேத்தி திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த 60 பவுன் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது.
இந்த கொள்ளை சம்பவத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட வேலுமதி சம்பவ இடத்திலேயே இறந்தார். கனகம் மருத்துவ மனையில் சிகிச்சை பல னின்றி இறந்தார். மேலும் மூவரசு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த இரட்டை கொலை மற்றும் கொள்ளை சம்பவம் கண்ணங்கோட்டை கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. கிராம மக்கள் நகை கொள்ளைபோனதால் கனகம் பேத்தியின் திருமணம் நின்று விடக்கூடாது. அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.
மேலும் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் 25 நாட்களாக போலீசார் துப்பு துலக்காததால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கொள்ளையர்களை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை வலி யுறுத்தி நாளை (7-ந்தேதி) அடையாள உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய காரைக்குடி டி.எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் சிறப்பு தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
- சிவகங்கை புத்தகத்திருவிழாவில் 20 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் நன்கொடை கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
- சிவகங்கை புத்தக திருவிழா மன்னர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 27-ந்தேதி முதல் நடந்து வருகிறது.
சிவகங்கை
சிவகங்கை புத்தக திருவிழா மன்னர் மேல்நி லைப்பள்ளியில் கடந்த 27-ந் தேதி முதல் நடந்து வருகிறது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
புத்தகத்திருவிழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக பெருந்திரள் வாசிப்பு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள், பேச்சாளர்களின் கருத்துரை நிகழ்ச்சிகள், மாயாஜாலக் காட்சிகள் நடந்தன.
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு உறுதுணை யாகவும், போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்வதற்கும், முதியவர்களின் மன அமைதியை சீராக வைத்துக் கொள்வதற்கும் புத்தகங்கள் மற்றும் நூலகங்கள் அடிப்படையாக அமைகிறது. அதனை கருத்தில் கொண்டு, இந்த புத்தகத்திருவிழாவில் கலந்து கொள்ளும் தன்னார்வலர்கள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கி, அந்த புத்தகங்களை தங்களுக்கு விருப்பமுள்ள நூலகங்களுக்கு வழங்க முன்வரலாம்.
தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் நூலகங்களை தத்தெடுத்தும், பல்வேறு வகையான புத்தகங்களை கிராம நூலகங்கள் மற்றும் பள்ளி நூலகங்களுக்கு வழங்கியும், இந்த புத்தகத்திருவிழாவிற்கு சிறப்பு சேர்த்து வருகின்றனர்.
தன்னார்வலர்கள் பங்களிப்பை அளிக்கும் வகையில், அரசு பள்ளியில் படித்து மருத்துவரான தேவ கோட்டை செந்தில் மருத்து வமனை நிறுவன தலைவர் சிவக்குமார் சார்பில் தேவகோட்டை மற்றும் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 20 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை இந்தநிகழ்ச்சியில் கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் நன்கொடையாக வழங்கினர்.
இது தவிர, உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் தாமாகவே முன்வந்து தங்களது பங்களிப்பையும் அளிக்கும் வகையில், இந்த புத்தக திருவிழாவின் மூலம் பல்வேறு நூல்களை நூல கங்களுக்கும், பள்ளி களுக்கும் வழங்கி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில், நூலகங்களின் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வசதிகளை ஏற்படுத்த தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் முன்வந்து, சிவகங்கையில் நடைபெறும் புத்தகத்திரு விழாவில் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி முருகன் கோவில்களில் தைப்பூச விழா நடைபெற்றது. மானாமதுரை புறவழிச் சாலையில் அமைந்துள்ள வழிவிடு முருகன் கோவிலில் நடந்த தைப்பூச விழாவில் வள்ளி, தெய்வானை சமேத மூலவருக்கும், உற்சவருக்கும் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மூலவர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் வழிவிடு முருகனை தரிசனம் செய்தனர்.
மானாமதுரை ெரயில் நிலையம் எதிரே உள்ள பூரண சக்கர விநாயகர் கோவிலில் பாலமுருகன் சன்னதியில் நடந்த தைப்பூச விழாவில் முருகனுக்கு அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்து பூஜை நடந்தது. பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகனை தரிசித்தனர்.
மானாமதுரை அருகே உள்ள கால்பிரவு கிராமத்தில் எழுந்தரு ளியுள்ள செல்வமுருகன் கோவி லில் நடந்த தைப்பூச விழாவில் வள்ளி, தெய்வானை சமேத செல்வ முருகனுக்கு 16 வகை பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வ முருகனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஏ.ஆர்.பி. முருகேசன் செய்திருந்தார்.
மானாமதுரையில் தாய மங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள மயூரநாதர் கோவிலில் நடந்த தைப்பூச விழாவில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தனர்.
மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் பாலமுருகன் கோவிலிலும் தைப்பூச விழா நடந்தது.
இடைக்காடர் சித்தர்கோவிலில் பவுர்ணமி அன்னதான வழிபாட்டு குழுசார்பில் சிறப்பு யாகம், அபிஷேகம், அன்னதானம் நடந்தது. இரவு இடைக்காடர் சித்தருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.மதுரை, திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர் .
கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி, கருப்பனேந்தல் மடம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி முதல்ஜீவ ஒடுக்கம் கோவிலில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது.
இளையான்குடி ஒன்றியம் குறிச்சி வழிவிடு பெரியநாச்சி, காசி விசுவநாதர் கோவிலில் செந்திலாண்டவர் சன்னதியில் தைப்பூச விழா நடந்தது. செந்திலாண்டவருக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜை நடைபெற்று தீபார தனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செந்திலாண்டவரை தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி எஸ். பி.தேவர் செய்திருந்தார்.
வேதியேரேந்தல் விலக்கில் உள்ள பஞ்சமுக பிரத்யங்கிராதேவி கோவிலில் தங்ககவசம், பூஜை, திருவிளக்கு வழிபாடு நடந்தது. திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் நடந்த தைப்பூச விழாவில் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தனர்.
- விவசாயிகளிடமிருந்து 3,162 மெட்ரிக் டன் நெல் ெகாள்முதல் நிலையத்தை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- இந்த ஆய்வின்போது, மண்டல மேலாளர் அருண்பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் கீழக்கண்டனி, வேம்பத்தூர், மானா மதுரை ஊராட்சி ஒன்றியம் வாகுடி, பீசர்பட்டினம் ஆகிய பகுதிகளில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் செயல்பட்டு வரும் நேரடி கொள்முதல் நிலையங்களை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம், 2022-23-ம் கொள்முதல் பருவத்தில் 55 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 4 நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை எவ்வளவு துரிதமாக கொள்முதல் செய்ய முடியுமோ? அந்த அளவிற்கு விரைந்து முடிக்க தேவையான பணிகளை திட்டமிட்டு அலுவலர்கள் செயல்பட வேண்டும்.
கொள்முதல் நிலை யங்களில் பணியாற்றும், பணியாளர்களுக்கு அத்தியாவசிய தேவை களை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் அலுவலர்கள் கண்காணித்து வர வேண்டும். அதேபோல் நெல் கொள்முதல் நிலை யத்திற்கு வரும் விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சாலை, வாகன, இட வசதி, போன்றவற்றை கூடுதலாக அமைக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை விவசாயிகளிடம் இருந்து 3 ஆயிரத்து 162 மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்ப ட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கான காலவிரையம் தவிர்க்கப்படுவதுடன், உரிய விலையும் கிடைக்கப் பெறுவதால் விவசாயிகளுக்குரிய லாபம் முழுமையாக கிடைக்கும்.
விவசாயிகள் இதுபோன்ற அரசு கொள்முதல் நிலையங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, மண்டல மேலாளர் அருண்பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- காரைக்குடியில் அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
- மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மகளிரணி செயலாளர் ஈஸ்வரி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க வினர் நகர செயலாளர் மெய்யப்பன் தலைமையில் மரியாதை செலுத்தினர்.
காரைக்குடி
அண்ணா நினைவு நாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் நகர செயலாளர் குணசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கல்லல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நகர துணை செயலாளர் கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் சித்திக், கலா காசிநாதன், கார்த்திகேயன், அவைத் தலைவர் சன் சுப்பையா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. நகர செயலாளர் மெய்யப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கற்பகம் இளங்கோ, அம்மா பேரவை ஊரவயல் ராமு, இளைஞரணி இணை செயலாளர் சத்குரு தேவன், மாவட்ட மகளிரணி தலைவி டாக்டர் சித்திராதேவி, விவசாய அணி செயலாளர் சிவானந்தம் போஸ், மகளிரணி இணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், நகர்மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் நகர செயலாளர் பாலா, மாநில இளைஞரணி இணை செயலாளர் திருஞானம்,சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் மாத்தூர் பாண்டி, அரியக்குடி கிளை செயலாளர்ஆறுமுகம், காரைக்குடி துணை செயலாளர் கணேசன், வழக்கறிஞர் அணி செயலாளர் பாலமுருகன், பேரவை ரவி, மஞ்சுநாத், அபி மன்யு, சரவணன், இளைஞரணி ஆறுமுகம், சுல்தான்,மாணவரணி வெங்கடேஷ்,அழகேசன்,லெட்சுமணன்,சிறுபான்மை பிரிவு சகுபர்,ஜாவித்,மகளிரணி ராமாமிர்தம், காளீஸ்வரி, ரேவதி, மாலதி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.இதில் தெற்கு நகர செயலாளர் கார்த்திக், வடக்கு நகர செயலாளர் அஸ்வின்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் முத்துபாரதி, சிறுபான்மை பிரிவு பொருளாளர் மாலிக்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மகளிரணி செயலாளர் ஈஸ்வரி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- பிரான்மலை கோவிலில் தைப்பூசத்தையொட்டி தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
- பால் பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சுவாமிக்கு அபிஷே ஆராதனைகள் நடந்தன.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் பிரசித்திபெற்ற மங்கைபாகர்-தேனம்மை மற்றும் வடுக பைரவர் கோவில் உள்ளது. இந்த மலைப்பகுதி சுமார் 2,500 அடி உயரம் கொண்டது. இதில் பாதாளம், பூலோகம், கைலாயம் என 3 அடுக்குகளாக சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார்.
பாதாளத்தில் திருக்கொடுங்குன்ற நாதர்-குயில்முகநாயகியும், பூலோகத்தில் உமா மகேசுவரர்-விசாலாட்சி அம்பாளுடனும், கைலாயத்தில் திருமண கோலத்தில் மங்கைபாகர்-தேனம்மை யாகவும் அருள் பாலித்து வருகின்றனர்.
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம் என்ற பெருமை கொண்ட தாகும். இந்த மலையை கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி ஆண்டதாக கூறப்படுகிறது. குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினம் 5 கோவில் தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடை பெறும்.
முருகப்பெருமானுக்கு வேறு எங்கும் தீர்த்த வாரி உற்சவம் நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தை பூசத்திருநாளான இன்று பிரான்மலை மங்கை பாகர்-தேனம்மை கோவிலில் இருந்து விநாயகர் முன்செல்ல வள்ளி-தெய்வானை உள்ளிட்ட தேவியருடன் முருகப்பெருமான் சப்பரத்தில் புறப்பட்டு 3 மைல் தொலைவில் உள்ள மேலப்பட்டி பிள்ளை யார்பட்டியில் உள்ள சுயம்பெருமாள் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கோவில் தோப்பில் தைப்பூச தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளினார்.
அதனை தொடர்ந்து பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்ற சுயம்பெருமாள் ஆற்றில் இறங்கி தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. பால் பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சுவாமிக்கு அபிஷே ஆராதனைகள் நடந்தன.
அதனை தொடர்ந்து மகா தீபாராதனையுடன் பூஜைகள் நிறைவு பெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
விழா ஏற்பாடுகளை 5 கோவில் தேவஸ்தானம் செய்திருந்தது. ஆகம பூஜைகளை தேவஸ்தானபரம்பரை ஸ்தானிகம் சிவஸ்ரீ உமாபதி சிவாச்சாரியார் செய்தார்.
- அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியரை குத்திக்கொன்ற வழக்கில் வாலிபருக்கு சிவகங்கை கோர்ட்டு ஆயுள் தண்டனை வழங்கியது.
- ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி சாய் பிரியா உத்தரவிட்டார்.
சிவகங்கை
சிவகங்கை அரசு மருத்துவமனையில் தற்காலிக மருந்தாளுநராக பணிபுரிந்தவர் தமிழ் செல்வன். இவருக்கும், ஒக்கூர் அண்ணா நகரை சேர்ந்த அருண்குமாரின் தாயாருக்கும் தகாத உறவு இருந்தது.
கடந்த 10.4.2019-ந் தேதி இது குறித்து மருத்துவமனையில் பணியில் இருந்த தமிழ்ச்செல்வனிடம் அருண்குமார் கேட்க சென்றார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழ்ச்செல்வனை குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை ஒருங்கினைந்த வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தீர்ப்பு கூறப்பட்டது.
அருண்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்படவே அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி சாய் பிரியா உத்தரவிட்டார்.
- எஸ்.எஸ்.எஸ். பார்க் தங்கும் விடுதி திறப்பு விழா நடந்தது.
- கோவிலூர் எஸ்.எஸ்.சுப்பிரணியன்,பொறியாளர் முருகானந்தம் குடும்பத்தினர் திறப்பு விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா கோவிலூரில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய எஸ்.எஸ்.எஸ். பார்க் தங்கும் விடுதி திறப்பு விழா குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அருளாசியுடன் நடந்தது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கற்பகம் இளங்கோ, காரைக்குடி அ.தி.மு.க நகர செயலாளர் மெய்யப்பன்,தொழிலதிபர் சத்குரு தேவன் முன்னிலை வகித்தனர். கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி சுப்பிரமணியன் வரவேற்றார். தொழிபதிபர் படிக்காசு திறந்து வைத்தார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்நாதன், மாங்குடி, ஆடிட்டர் ராஜகோபால், மாநில நல்லாசிரியர் வீரபாண்டியன், சென்னை ஏ.வி.எம். ஸ்டுடியோ மேலாளர் விஸ்வநாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். லிப்ட் வசதியை முன்னாள் அமைச்சர் பாஸ்கரனும், ஜெனரேட்டரை ஐ.ஓ.பி. வங்கி மேலாளர் மனோஜ்குமாரும் தொடங்கி வைத்தனர்.
ஆவின் சேர்மன் அசோகன், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி,ஒன்றிய செயலாளர்கள் ஜெயகுணசேகரன், சேவியர்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் ஒன்றிய செயலாளர் கோவிலூர் எஸ்.எஸ்.சுப்பிரணியன்,பொறியாளர் முருகானந்தம் குடும்பத்தினர் திறப்பு விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






