அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சியினர் மரியாதை

காரைக்குடியில் அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சியினர் மரியாதை செலுத்தினர். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மகளிரணி செயலாளர் ஈஸ்வரி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தி.மு.கவினர் நகர செயலாளர் குணசேகரன் தலைமையில் மரியாதை செலுத்தினர்.
தி.மு.கவினர் நகர செயலாளர் குணசேகரன் தலைமையில் மரியாதை செலுத்தினர்.
Published on

அ.தி.மு.க வினர் நகர செயலாளர் மெய்யப்பன் தலைமையில் மரியாதை செலுத்தினர்.

 காரைக்குடி

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. சார்பில் நகர செயலாளர் குணசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கல்லல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நகர துணை செயலாளர் கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் சித்திக், கலா காசிநாதன், கார்த்திகேயன், அவைத் தலைவர் சன் சுப்பையா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க. நகர செயலாளர் மெய்யப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கற்பகம் இளங்கோ, அம்மா பேரவை ஊரவயல் ராமு, இளைஞரணி இணை செயலாளர் சத்குரு தேவன், மாவட்ட மகளிரணி தலைவி டாக்டர் சித்திராதேவி, விவசாய அணி செயலாளர் சிவானந்தம் போஸ், மகளிரணி இணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், நகர்மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் நகர செயலாளர் பாலா, மாநில இளைஞரணி இணை செயலாளர் திருஞானம்,சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் மாத்தூர் பாண்டி, அரியக்குடி கிளை செயலாளர்ஆறுமுகம், காரைக்குடி துணை செயலாளர் கணேசன், வழக்கறிஞர் அணி செயலாளர் பாலமுருகன், பேரவை ரவி, மஞ்சுநாத், அபி மன்யு, சரவணன், இளைஞரணி ஆறுமுகம், சுல்தான்,மாணவரணி வெங்கடேஷ்,அழகேசன்,லெட்சுமணன்,சிறுபான்மை பிரிவு சகுபர்,ஜாவித்,மகளிரணி ராமாமிர்தம், காளீஸ்வரி, ரேவதி, மாலதி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.இதில் தெற்கு நகர செயலாளர் கார்த்திக், வடக்கு நகர செயலாளர் அஸ்வின்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் முத்துபாரதி, சிறுபான்மை பிரிவு பொருளாளர் மாலிக்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மகளிரணி செயலாளர் ஈஸ்வரி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com