என் மலர்
நீங்கள் தேடியது "பயனாளிகள். Welfare assistance"
- 24 பயனாளிகளுக்கு ரூ.17.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- சாந்தி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.
இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனா ளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதில் வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மானாமதுரை வட்டத்தைச் சேர்ந்த 10 பயனாளிகளுக்கு உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளையும், தொழிலாளர் நலத்துறையின் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) சார்பில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா நலவாரியங்களின் கீழ், 10 பயனாளிகளுக்கு ஓய்வூதியத்திற்கான ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.
மொத்தம் 24 பயனா ளிகளுக்கு ரூ.17 லட்சத்து 77 ஆயிரத்து 691 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவி களை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நடந்த கலைத்திருவிழாவில் ஓட்டப்பந்தயம், பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி விடுதி மாணவ- மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், புத்தகங்களை கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) சாந்தி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






