என் மலர்
சேலம்
- ஸ்ரீரங்கன். இவரது மகன் குமாரவேல் (33), எலக்ட்ரீசியன். இவர் கடந்த ஆண்டு வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி கீேழ விழுந்தார்.
- மனம் உடைந்த குமாரவேல் நேற்றிரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
சேலம் இரும்பாலை அருகே உள்ள கீரபாப்பம்பாடி மலையனூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன். இவரது மகன் குமாரவேல் (33), எலக்ட்ரீசியன். இவர் கடந்த ஆண்டு வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி கீேழ விழுந்தார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இதனால் மனம் உடைந்த குமாரவேல் நேற்றிரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். பி ன்னர் சம்பவம் குறித்து இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்த குமாரவேலுக்கு திருமணம் ஆகவில்லை.
- சேலம் மின்பகிர்மான வட்டம் தெற்கு கோட்ட அலுவலகம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் செயல்பட்டு வருகிறது.
- (புதன்கிழமை) காலை 11 மணி அளவில் மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.
சேலம்:
சேலம் மின்பகிர்மான வட்டம் தெற்கு கோட்ட அலுவலகம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் செயல்பட்டு வருகிறது. இங்கு நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 11 மணி அளவில் மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. ஆகவே இந்த கூட்டத்தில் சேலம் தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியை சார்ந்த மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு தெற்கு கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலம் அயோத்தி யாப்பட்டணம் ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் (64). இவர் தனியார் சுற்றுலா பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் மேட்டுப்பட்டி டோல் கேட் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ராமேஸ்வரம் கோவில் சென்று விட்டு சேலம் வந்தார். மீண்டும் மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக டோல்கேட்டில் இறங்கி சாலையை கடக்கும் போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வரதராஜன் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசபட்ட வரதராஜன் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ரவி கொடுத்த புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெத்தநாயக்கன் பாளையத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந் தேதி தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு நடைபெறுகிறது.
- தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நடத்தி வருகிறார்.
சேலம்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந் தேதி தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நடத்தி வருகிறார்.
செயல் வீரர்கள் கூட்டம்
அந்த வகையில் நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. இளைஞர்அணி செயல்வீரர்கள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நாமக்கல் அருகே உள்ள பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடக்கிறது. இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார்.
இதற்காக ஈரோட்டில் இருந்து கார் மூலம் நாமக்கல் வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. கூட்டத்துக்கு முன்பாக பிற்பகல் 3 மணி அளவில் அவர் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து, உள்நோயாளிகளுக்கு பதிவு சீட்டு வழங்க உள்ளார்.
ரூ.140 கோடி மதிப்பில் சாலை
இதேபோல் வெண்ணந்தூர் மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது ரூ.140 கோடி மதிப்பில் சாலை அமைக்க முதல்-அமைச்சர் அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார். இதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வெண்ணந்தூர் அருகே மலைவாழ் மக்களின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்து நன்றி தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான மல்லூர் அருகே மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி, ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் இளைஞரணியினர் திரளாக பங்கேற்கிறார்கள். தொடர்ந்து சேலம் வரும் அவர் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு தங்குகிறார்.
கூட்டம்
தொடர்ந்து நாளை மறுநாள் (22-ந் தேதி) சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் சீலநாயக்கன் பட்டியில் காலை 10 மணியளவில் நடைபெறு கிறது. இதில் பங்கேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து சிறப்புரையாற்றுகிறார்.
இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்பொய்யா மொழி மற்றும் மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், இளைஞரணி அமைப்பா ளர்கள் அருண்பிரசன்னா, வீரபாண்டி பிரபு, மணிகண்டன் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞரணியினர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
மாநாட்டு திடல் ஆய்வு
இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் முடிந்ததும், பெத்தநாயக்கன் பாளையத்தில் இளைஞரணி மாநில மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர் காரில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தி.மு.க.வினர் செய்து வருகிறார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் மாவட்ட தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
விழா நடைபெறும் இடத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அவர் செல்லும் வழிநெடுகிலும் போலீஸ் பாதுகாப்பு அளிப்ப தற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
- ஓம் சக்தி நகர் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
- இதுவரையில் எங்களுக்கு மேட்டூர் காவிரி குடிநீர் வசதியே செய்து கொடுக்கப்படவில்லை.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா பாகல்பட்டி கிராமம் அருகே அமைந்துள்ளது ஓம் சக்தி நகர். இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் இப்பகுதியில் சுமார் 650 வீடுகள் வாங்கி குடியிருந்து வருகிறோம். எங்கள் குடியிருப்பு பகுதிக்கு இதுவரை மேட்டூர் காவிரி குடிநீர் வசதி என்பது இல்லாததால் நாங்கள் பஞ்சாயத்து ஆழ்துளை கிணறு தண்ணீரைதான் குடிப்பதற்கும், எல்லா வசதிக்கும் பயன்படுத்தி வருகிறோம். எங்கள் பகுதி சுற்றியுள்ள கிராமமான மாரமங்க லத்துப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, பூமிநா யக்கன்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, செங்கா னூர், தோளூர் ஆகிய பகுதிக ளுக்கெல்லாம் மேட்டூர் காவிரி குடிநீர் வசதிசெய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு மட்டும் மேட்டூர் காவிரி குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட வில்லை. இது குறித்து பலமுறை கிராம சபைகூட்டத்திலும், ஊராட்சி மன்ற தலைவரையும், துணை தலைவர் ஊராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து கடிதம் கொடுத்தோம். இதுவரையில் எங்களுக்கு மேட்டூர் காவிரி குடிநீர் வசதியே செய்து கொடுக்கப்படவில்லை.
மேலும் எங்கள் பகுதியில் சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு இந்த சாலையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே குடிநீர் வசதி, சாலை வசதி ஆகியவற்றை விரைவாக மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
- இதற்கிடையில் நேற்று மாலை கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆதிகேசவலு திடீரென வந்தார்.
- கோவிலுக்கு வந்து செல்லும் வழிகள், சுற்றுபுறங்கள், மதில் சுவர் ஆகிய பகுதிகளில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டார்.
சேலம்:
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் அவசர கால வெளியேறும் வழி, அடிப்படை வசதிகள் குறித்து திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையொட்டி சேலம் மாநகராட்சி செயற்பொறியாளர் பழனிச்சாமி, சேலம் தாசில்தார் தாமோதரன், சேலம் டவுன் இன்ஸ்பெக்டர் மோகன்பாபு, அறங்காவலர் குழுத்தலைவர் சக்திவேல் ஆகியோர் கடந்த 17-ந் தேதி கூட்டாய்வு மேற்கொண்டனர்.
இதில் கோவில் அருகாமையில் உள்ள தனியார் கட்டிடம், கோவிலுக்கு சொந்தமான கட்டிடம் என இடிந்து விழக்கூடிய நிலையிலுள்ள அபாயகர கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த சேலம் மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டிருந்தார்.
நீதிபதி ஆய்வு
இதற்கிடையில் நேற்று மாலை கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆதிகேசவலு திடீரென வந்தார். பின்னர் கோவிலுக்கு வந்து செல்லும் வழிகள், சுற்றுபுறங்கள், மதில் சுவர் ஆகிய பகுதிகளில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டார்.
அப்போது அபாயகரமான கட்டிடங்களை நவம்பர் 30-ந் தேதிக்குள் அகற்றி விடுவதாகவும், கிழக்கு புறத்திலிருந்து கோவிலுக்கு வரும் மாநகராட்சி சந்தினையும், பஸ் நிலையத்திலிருந்து கோவிலின் தென் கிழக்கு பகுதிக்கு வரும் மாநகராட்சி பொது சந்தினையும் மீண்டும் கோவிலுக்கு பயன்படுத்தும் வகையில் சீரமைப்பதாகவும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி தெரிவித்தார்.
மேலும் தென்மேற்கு பகுதியிலுள்ள இடிந்து விழும் நிலையிலுள்ள சுற்று சுவரினை சீரமைப்பதுடன், மாநகராட்சி கடைகளை காலி செய்து பஸ் நிலைய பகுதியில் பிரம்மாண்டமான நுழைவு வாயில் அமைத்து அழகுபடுத்தவுள்ளதாகவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தினை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாகவும் அவர் நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதேபோல் மதில் சுவரினையொட்டி பழுதடைந்துள்ள மாநகராட்சி கடைகளை இடித்து அப்புறப்படுத்த உள்ளதாகவும், மதில்சுவரையொட்டி தென்மேற்கு பகுதியில் கட்டப்பட்டு வரும் கழிப்பிடம் கட்டும் பணி நிறுத்தப்பட்டு விட்டதாகவும், அதனை எதிர்புறம் மாற்றி கொள்வதாகவும், கோவிலில் சுற்றுபுற பகுதிகளில் சாலைகளில் கடைகள் வைக்க அனுமதிக்கபடாது எனவும், சுற்றுபுறத்திலுள்ள முறையற்ற கட்டுமானங்களுக்கு அறிவிப்பு வழங்கி நடவடிக்கை மேற்கொள்வதாகவும் மாநகராட்சி செயற்பொறியாளர் பழனிச்சாமி உறுதியளித்தார்.
இந்த ஆய்வின் போது திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், சேலம் தாசில்தார் தாமோதரன், தலைமை நில அளவர் சுரேஷ் பரமசிவம், டவுன் இன்ஸ்பெக்டர் மோகன் பாபு, அறங்காவலர் குழுத்தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
- கரியக்கோவில் ஆற்றின் குறுக்கே 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோவில் அணை அமைந்துள்ளது.
- 3,600 ஏக்கர் விளைநிலங்கள் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கல்வராயன்மலை அடிவாரம் பாப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் கரியக்கோவில் ஆற்றின் குறுக்கே 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோவில் அணை அமைந்துள்ளது.
இந்த அணையால் பாப்பநாயக்கன்பட்டி, ஏழுப்புளி, பீமன்பாளையம், தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில் 3,600 ஏக்கர் விளைநிலங்கள் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன. ஏ.குமாரபாளையம், கல்யா ணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக் கன்பாளையம் பகுதியில் 2,000 ஏக்கர் பழைய ஆயக்கட்டு நேரடி பாசனம் பெறுகின்றன.
சுற்றுப்புற கிராமங்க ளுக்கு முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வரும் இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 2022-ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பெய்த பருவ மழையால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 2022-ம் ஆண்டு அக்டோபர் 25-ந் தேதி 50.52 அடியை எட்டி நிரம்பியது. 175.63 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியதும் உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டது.
இதனையடுத்து நடப்பாண்டு மார்ச் மாதத்தில் இருந்து சுழற்சி முறையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் ஜூன் மாத இறுதியில் நீர்மட்டம் 31 அடியாக குறைந்து 68 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே மீதமிருந்தது. சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தால் அக்டோபர் 1-ல் நீர்மட்டம் 18.37 அடியாக குறைந்தது. 27.10 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருந்தது.
நீர்மட்டம் 33.20 அடியாக உயர்வு
இந்த நிலையில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் தற்போது 33.20 அடியாக உயர்ந்துள்ளது. 76.17 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 25-ந்தேதி அணை நிரம்பி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு நவம்பர் மாதம் 18-ந்தேதி வரை அணை நிரம்பவில்லை.
இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் நவம்பர் இறுதிக்குள் பருவ மழை கை கொடுக்கும் என்பதால் அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் கரியக்கோ வில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்புமென விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது.
- கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 149 கனஅடியாக இருந்தது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாலும், அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
இதையடுத்து கடந்த மாதம் 10-ந் தேதி முதல் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேலும் இந்த மாதம் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டிய தண்ணீரும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைந்தது.
இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 61.83 அடியாக இருந்த நிலையில் இன்று 62.24 அடியாக உயர்ந்து விட்டது.
மேலும் நீர்வரத்து நேற்று வினாடிக்கு 3 ஆயிரத்து 198 கனஅடியாக இருந்த நிலையில் இன்று வினாடிக்கு 4 ஆயிரத்து 15 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. அணையில் இருந்து குடிநீர்தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 26.83 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 149 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1332 கனஅடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து வாய்க்கால் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 4152 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- காய்கறி மார்க்கெட்டில் பதுங்கி இருந்து வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக செவ்வாய்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- சப்- இன்ஸ்பெக்டர் தமிழ் மணி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.
சேலம்:
சேலம் கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட்டில் பதுங்கி இருந்து வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக செவ்வாய்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் தமிழ் மணி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது அங்கு ஒரு வாலிபர் கஞ்சா மொத்தமாக வாங்கி சிறிய பொட்டலங்களாக தயார் செய்து வைத்து விற்பனை செய்துகொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அவர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கருங்கல்பட்டி தெற்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளையராசு (வயது 25) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
சேலம்:
சேலம் கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பாலம் நகர், நெடுஞ்சாலைநகர், கென்னடிநகர், வசந்தம் நகர், கிழக்கு திருவாக்கவுண்டனூர், மேத்தாநகர், காசக்காரனூர், கோனேரிக்கரை, கே.பி.கரடு வடபுறம், மூலப்பிள்ளை யார்கோவில், சண்முக செட்டிக்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகாத்தாம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், நெய்காரப்பட்டி,பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்டமுத்தம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, தளவாய்பட்டி, சர்க்கார் போடிநாயக்கன்பட்டி, கொல்லப்பட்டி, சுந்தர்நகர், மல்லமூப்பம்பட்டி, காந்தி நகர், சித்தனூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், ராமகவுண்டனூர், எம்.ஜி.ஆர்.நகர், காமநாய்க்கன்பட்டி, அரியாகவுண்டம்பட்டி, சோளம்பள்ளம் மற்றும் பழைய சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.
- சுப்ரமணிய சாமி கோவிலில் 17 -ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவும், 6-ம் ஆண்டு தீ மிதி விழாவும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
மகுடஞ்சாவடி:
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் எழுந்தருளியுள்ள சுப்ரமணிய சாமி கோவிலில் 17 -ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவும், 6-ம் ஆண்டு தீ மிதி விழாவும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருக்கல்யாணம்
கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று (சனிக்கிழமை) மாலை வான வேடிக்கையுடன் சூரசம்ஹார விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் வள்ளி- தெய்வானை வசந்த் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. நாளை (திங்கட்கிழமை) அதிகாலையில் 6-ம் ஆண்டு குண்டம் தீ மிதி விழா நடைபெறுகிறது.
விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்விழாவில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சுப்ரமணிய சாமி ஆசி பெற விழா கமிட்டி சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா கோவில் வளாகத்தில் பிரமாண்ட யாக சாலைகள் அமைக்கப்பட்டு ெதாடங்கியது.
- கணபதி வழிபாடு, தீபாராதனை செய்யப்பட்டு சாமிக்கு கண் திறப்பு சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே சின்னாகவுண்டம் பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சின்ன மாரியம்மன், ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா கோவில் வளாகத்தில் பிரமாண்ட யாக சாலைகள் அமைக்கப்பட்டு ெதாடங்கியது. கணபதி வழிபாடு, தீபாராதனை செய்யப்பட்டு சாமிக்கு கண் திறப்பு சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு மேல் 7.30. மணிக்குள் ராஜகோபுரம், கருவறை விமானம் மற்றும் பரிவார சாமி சன்னதி விமானங்களில் கோபுர கலசங்கள் வைத்து பூஜை செய்து பூலாம்பட்டியில் காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் கலசங்களுக்கு ஊற்றி தீபாராதனை செய்து மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த விழாவில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.






