search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reduction of water opening"

    • தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
    • பாசனத்துக்காகவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர் மட்டமும் குறையத் தொடங்கியது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    71 அடி உயரம் கொண்ட அணை கடந்த 10-ந் தேதி முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் மேலூர், கள்ளந்திரி பாசனத்துக்கும், அதன் பின்பு ராமநாதபுரம் மாவட்டம் பாசனத்துக்காகவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் அணையின் நீர் மட்டமும் குறையத் தொடங்கியது. இந்த நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 3169 கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு 2352 கன அடி நீர் வருகிறது. அணையில் நீர் மட்டம் 65.16 அடியாக உள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.35 அடியாக உள்ளது. 1451 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. 192 கன அடி நீர் வருகிறது 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.60 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 194 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. தேக்கடி 2.2, கூடலூர் 1.6, உத்தமபாளையம் 1.2, ஆண்டிபட்டி 3.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • தண்ணீர் திறப்பு நேற்று 3,025 கன அடியாக இருந்த நிலையில் இன்று 2,724 கன அடியாக குறைந்துள்ளது.

    சேலம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் பலத்த மழையின் காரணமாக தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, சிவமொக்கா, குடகு, ஹாசன், சிக்கமகளூரு ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து 1450 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1224 கன அடி நீர் வெளியேற்றப் படுகிறது. அணையின் நீர்மட்டம் 99.10 அடியாக உள்ளது.

    கபினி அணைக்கு நீர்வரத்து 221 கன அடியாகவும் நீர்வெளியேற்றம் 1500 கன அடியாகவும் உள்ளது. தற்போது இந்த அணையின் நீர்மட்டம் 73.80 அடியாக உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நேற்று 3,025 கன அடியாக இருந்த நிலையில் இன்று 2,724 கன அடியாக குறைந்துள்ளது.

    • கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் சீராக உயர்ந்தது.
    • இந்த நிலையில் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்தும் சரிந்தது.

    கூடலூர்:

    தமிழகம்-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் சீராக உயர்ந்தது.

    இந்த நிலையில் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்தும் சரிந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 123.90 அடியாக உள்ளது. 803 க.அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 700 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 63.80 அடியாக உள்ளது. 1139 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 52.70 அடியாக உள்ளது. 55 கனஅடி நீர் வருகிறது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.44 அடியாக உள்ளது. 34 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 3.2, தேக்கடி 1, போடி 1.2, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 1, பெரியகுளம் 1.6, ஆண்டிபட்டி 8 மி.மீ. மழையளவு பதிவானது.

    • கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
    • காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77.53 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 192 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,305 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    ×