நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் சீராக உயர்ந்தது. இந்த நிலையில் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்தும் சரிந்தது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கூடலூர்:

தமிழகம்-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் சீராக உயர்ந்தது.

இந்த நிலையில் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்தும் சரிந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 123.90 அடியாக உள்ளது. 803 க.அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 700 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 63.80 அடியாக உள்ளது. 1139 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 52.70 அடியாக உள்ளது. 55 கனஅடி நீர் வருகிறது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.44 அடியாக உள்ளது. 34 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 3.2, தேக்கடி 1, போடி 1.2, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 1, பெரியகுளம் 1.6, ஆண்டிபட்டி 8 மி.மீ. மழையளவு பதிவானது.

X

Maalai Malar
www.maalaimalar.com