என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அணையில் படர்ந்துள்ளபச்சை நிற பாசிகளை அகற்ற நுண்ணுயிர் கலவை தெளிப்பு
    X

    மேட்டூர் அணையில் படர்ந்துள்ளபச்சை நிற பாசிகளை அகற்ற நுண்ணுயிர் கலவை தெளிப்பு

    • பயிர்களால் நொதிப்பு தன்மை ஏற்பட்டு தண்ணீர் பாசிகள் படர்ந்து பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசி வருகிறது.
    • 16 கண் மதகு பகுதியில் திறனூட்டப் பட்ட நுண்ணுயிர் கலவை தெளிக்கும் பணியில் நீர் வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 120 அடி, மொத்த கொள்ளளவு 93.47 டி.எம்.சி., நீர்த்தேக்க பரப்பளவு 60 சதுர மைல்களாகும்.

    அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் செல்லும் போது கரையோரத்தில் உள்ள விவசாயிகள் சோளம், கம்பு, ராகி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்வது வழக்கம்.இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணையின் நீர் மட்டம் உயரும் போது விவசாய பயிர்கள் நீரில் விடுகின்றன.

    இதனால் மூழ்கிய பயிர்களால் நொதிப்பு தன்மை ஏற்பட்டு தண்ணீர் பாசிகள் படர்ந்து பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மேட்டூர் அணையின் வலது கரை, இடதுகரை, 16 கண் மதகு பகுதியில் திறனூட்டப் பட்ட நுண்ணுயிர் கலவை தெளிக்கும் பணியில் நீர் வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    இவ்வாறு தெளிக் கப்படும் நுண்ணுயிர் கலவையால் நன்மை செய்யும் நுண்ணுயிரி பன்மடங்கு பெருக்கமடைந்து ஆல்கே எனும் பாசிகளை முழுமையாக கட்டுபடுத்தி இப்பகுதியில் வீசும் துர்நாற்றம் படிப்படியாக குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×