என் மலர்
சேலம்
- நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு காச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ெரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்.
- சேலம் ரெயில்வே போலீஸ் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம்- மல்லூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு காச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ெரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து ரெயிலின் லோகோ பைலட் கொடுத்த தகவலின்பேரில் சேலம் ரெயில்வே போலீஸ் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவரது பெயர் மற்றும் ஊர் விபரம் தெரியவில்லை. பலியான வாலிபர் வலது கையில், தாய் குழந்தை என பச்சைக்குத்தப்பட்டுள்ளது. சிவப்பு வெள்ளை புளூ கலரில் பனியன், மஞ்சள் கலர் பேண்ட் அணிந்திருந்தார். இவரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் அது குறித்து போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- வாழப்பாடி அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தூய்மை பராமரிப்பு விழிப்புணர்வு பிரசார சைக்கிள் பேரணி மற்றும் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
- பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டது.
வாழப்பாடி:
வாழப்பாடி பேரூராட்சியில், தூய்மை பாரத இயக்கத்தின், நகரங்களுக்கான தூய்மை மக்கள் இயக்கத்தின் கீழ், பொதுமக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை, மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்தல், திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட சுகாதார மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி பேரூராட்சி தலைவர் கவிதா சக்கரவர்த்தி, செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் ஆலோசனையின் பேரில், வாழப்பாடி அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தூய்மை பராமரிப்பு விழிப்புணர்வு பிரசார சைக்கிள் பேரணி மற்றும் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டது.
பேரணியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கலைஞர்புகழ், தலைமையாசிரியர் ரவிசங்கர், ஜெயலட்சுமி, துப்புரவு ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.ஜி.ஆர். பழனிசாமி மற்றும் உறுப்பினர்கள், பணியாளர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து, வாழப்பாடி பாப்பான் ஏரியில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டதோடு, இந்திரா நகர் பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
- சின்ன கல்வராயன் மற்றும் பெரிய கல்வராயன் மலையில் 90க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.
- கலக்காம்பாடியில் இருந்து மண்ணுார் வரையிலான 9 கி.மீ., மலைப்பாதையில் தார்சாலை, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து கிடக்கிறது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் சின்ன கல்வராயன் மற்றும் பெரிய கல்வராயன் மலையில் 90க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. கல்வராயன் மலையின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மண்ணுார், பெரண்டூர், மொரசம்பட்டி கிராமங்களுக்கு சாலை, போக்குவரத்து மற்றும் மின்சார வசதிகள் கிடைக்காததால் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்த கிராம மக்களின் நீண்ட நாள் போராட்டத்தின் விளைவாக, கடந்த 2018–-ல் மின்சாரம், சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, கலக்கம்பாடியில் இருந்து, மொரசம்பட்டி, பெரண்டூர் மற்றும் மண்ணுார் மலை கிராமங்களுக்கு, வாழப்பாடியில் இருந்து பேளூர், தும்பல், கருமந்துறை, பகுடுப்பட்டு வழியாக 2019-–ல் மினி பஸ் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டது.
தினந்தோறும் 3 முறை மட்டுமே மினி பஸ் இயக்கப்படுவதால், மற்ற நேரங்களில் பயணிப்பதற்கு இரு சக்கர வாகனங்களையும், விவசாய விளைபொருட்களை கொண்டு செல்வதற்கு சரக்கு வாகனங்களையும் இந்த மலை கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கலக்காம்பாடியில் இருந்து மண்ணுார் வரையிலான 9 கி.மீ., மலைப்பாதையில் தார்சாலை, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து கிடக்கிறது. இதனால், பேருந்து மற்றும் சரக்கு வாகனங்கள், இரு சக்கர வாகனங்களில் செல்வோர், விபத்து அபாயத்திலேயே பயணித்து வருகின்றனர்.
எனவே, பழுதடைந்து கிடக்கும் மலைப்பாதை தார்சாலையை புதுப்பிக்கவும், சிதைந்து கிடக்கும் தடுப்புச்சுவரை சீரமைக்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மேட்டூர் அடுத்த புதுச்சாம்பள்ளி பகுதியை பஸ் கடக்கும்போது, திடீரென அந்த பஸ்சின் முன் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது.
- தீ விபத்தில் பஸ் முழுவதும் எரிந்து எலும்பு கூடாய் காட்சி அளித்தது. பயணிகளின் உடைமைகள் அனைத்தும் தீக்கிரையானது.
மேட்டூர்:
கோவையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் ஒன்று 43 பயணிகளை ஏற்றிக் கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது.
நள்ளிரவு ஒரு மணியளவில், சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த புதுச்சாம்பள்ளி பகுதியை பஸ் கடக்கும்போது, திடீரென அந்த பஸ்சின் முன் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது.
இதை பார்த்த டிரைவர் சாலையிலேயே பஸ்சை நிறுத்திவிட்டு, பயணிகளை உடனடியாக வெளியேறும்படி எச்சரித்தார். இதனையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக கீழே இறக்கப்பட்டனர். அதற்குள் பஸ் தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பஸ் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
அப்போது சில பயணிகளுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கோவையை சேர்ந்த தாமோதரன் (வயசு 38), அவரது மனைவி வினோதினி (30), சந்தோஷ் (28) உட்பட 10 பேர், மேட்டூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற பயணிகள் தீக்காயம் இன்றி தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து மேட்டூர் தீயணைப்பு நிலையத்தினர் மற்றும் மற்றும் கருமலைக்கூடல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து, சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் பஸ் முழுவதும் எரிந்து எலும்பு கூடாய் காட்சி அளித்தது. பயணிகளின் உடைமைகள் அனைத்தும் தீக்கிரையானது. இதுகுறித்து கருமலைகூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நள்ளிரவில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 971 கன அடியிலிருந்து, 1001 கனஅடியாக சற்று அதிகரித்து உள்ளது.
- தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து, ஆண்டு தோறும் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டால், மீண்டும் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் வரை குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பது வழக்கம். நேற்று முன்தினம் மாலை, மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, காவிரி டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காகவும், காவிரி கரையில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களுக்காகவும், மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை 9 மணி முதல் விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தேவை அதிகரிக்கும் பட்சத்தில் 2 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்படும்.
இந்த நிலையில், காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும், தொடர்ந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாலும், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது. நேற்று காலை 103.74 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.71 அடியாக உள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 971 கன அடியிலிருந்து, 1001 கனஅடியாக சற்று அதிகரித்து உள்ளது. தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
- ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
- வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுக மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சேலத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் ஜி.கே.வாசன் இன்று சந்தித்து பேசினார்.
அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது:-
தமிழகத்தில் திமுகவை எதிர்த்து வாக்களிக்க மக்கள் தயாராகி வருகின்றனர். வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுக மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுக மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதிமுகவுடனான கூட்டணி தொடரும். மக்கள் மீது அதிக சுமைகளை ஏற்றிய திமுக அரசு, மக்கள் பாடம் புகட்டுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சங்ககிரியில் இருந்து கேரளாவிற்கு ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் ராஜேஷ்குமார் தலைமையில் அலுவலர்கள் நேற்று இரவு சங்ககிரி ரெயில் நிலையத்தில் சோதனை நடத்தினர்.
- ரேஷன் அரிசி கடத்த முயன்றவர்கள் அங்கிருந்து தலைமறைவாகினர். இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சங்ககிரி:
சங்ககிரியில் இருந்து கேரளாவிற்கு ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் ராஜேஷ்குமார் தலைமையில் அலுவலர்கள் நேற்று இரவு சங்ககிரி ரெயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது ரெயில் நிலைய நடைமேடை பகுதியில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. போலீசார் வருவதை பார்த்ததும் ரேஷன் அரிசி கடத்த முயன்றவர்கள் அங்கிருந்து தலைமறைவாகினர். இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த ரேஷன்அரிசி மூட்டைகள் சங்ககிரி நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டன. ரெயிலில் ரேஷன்அரிசி கடத்த முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. அமர்வு நீதிமன்றத்தில் துரைசாமி இந்த வழக்கில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
- வருகிற 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் ஆற்றோரம் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் எலும்பன் என்கிற துரைசாமி (வயது 2). இவர் மீது சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால் துரைசாமி இந்த வழக்கில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால், அவர் பிணையில் வெளிவர இயலாதபடி பிணை ஆனை கோர்ட்டு பிறப்பித்துள்ளது. மேலும் அவர் மீது மீதான குற்ற முறையீட்டுக்க பதில் அளிக்க வருகிற 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர் தலைமறைவான 27.3.2003-ம் ஆண்டு முதல் போலீசார் பல்வேறு இடங்களில் அவரை தேடி வருகின்றனர். ஆனாலட போலீசாரின் கண்களில் படாமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வருகிறார். இதனால் எலும்பன் என்கிற துரைசாமி பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என சேலம் டவுன் போலீஸ் நிலையம் வெளியீட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த திருமணமான இளம்பெண்ணை திருமணம் செய்ய முயன்றார்.
- நேற்று மாலை சரவணணை அடித்து உதைத்து, பின்னர் அம்மாப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைந்தனர்.
சேலம்:
சேலம் பொன்னம்மாபேட்டை ராமமூர்த்தி புதூரை சேர்ந்தவர் மாரப்பன். இவரது மகன் சரவணன் (வயது27). இவர் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த மீனாட்சி (20) என்ற பெண்ணை திருமணம் செய்தார். பின்னர் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததால், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை, 9-ந் தேதி முதல் 2 பேரும் பிரிந்து தனித்தனியே வசித்து வருகின்றனர்.
இதையடுத்து சரவணன், சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த திருமணமான இளம்பெண்ணை திருமணம் செய்ய முயன்றார். இதையறிந்த சரவணன் மனைவி மீனாட்சி, இவரது அக்காள் உள்ளிட்டோர் நேற்று மாலை சரவணணை அடித்து உதைத்து, பின்னர் அம்மாப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைந்தனர். போலீசார், சரவணன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்திலும் அம்மா ஆட்சி காலத்திலும் சரி ஏழைகள் ஏற்றம் பெற வேண்டி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.
- ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன், அந்த முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையை நிறுத்திவிட்டது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர்-தாரமங்கலம் மெயின் ரோட்டில் வேலகவுண்டனூரில் ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தை திறந்து வைத்து பேசியதாவது:-
ஆதரவற்ற முதியோர் இல்லத்தை திறந்து வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்திலும் அம்மா ஆட்சி காலத்திலும் சரி ஏழைகள் ஏற்றம் பெற வேண்டி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். அ.தி.மு.க.தான் ஏழைகளுக்கு உதவுகின்ற கட்சி. ஏழை மக்களுக்கு திட்டங்களை வகுப்பது தான் அ.தி.மு.க.வின் கொள்கை.
அம்மா இருந்தபோது, ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள், வயதானவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு வழங்கி, முதியோர் உதவித்தொகை வழங்கினார்.
இதையடுத்து அம்மா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முதியோர் உதவித்தொகை பெற கிடைக்கப்பெற வழியற்றதை கேள்விப்பட்டு நான், சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழகம் முழுவதும் தகுதியான 5 லட்சம் முதியோர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிப்பு வழங்கினேன். அதன் வாயிலாக கிட்டத்தட்ட 4 லட்சம் முதியோர்களுக்கு அம்மா அரசு அறிவித்த முதியோர் உதவித்தொகை கிடைக்கப்பெற்றது.
ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள், ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன், அந்த முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையை நிறுத்திவிட்டது.
முதியோர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அவர்கள் உணவு உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் அ.தி.மு.க. அரசு, அந்த திட்டத்தை அமல்படுத்தி முதியோர் உதவித்தொகை வழங்கியது. முதியோர்களை மறந்து விடாதீர்கள், கைவிட்டு விடாதீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சேலம் மாவட்ட மத்திய சிறையில் சேலத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் வார்டனாக பணியாற்றி வந்தார்.
- ஜெயில் அதிகாரிகள், அவருக்கு நினைவூட்டல் கடிதம் மூலமாகவும், வீட்டிற்கு நேரில் சென்றும் பலமுறை அழைப்பு விடுத்தனர்.
சேலம்:
சேலம் மாவட்ட மத்திய சிறையில் சேலத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் வார்டனாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த வருடம் மார்ச் மாதம் பணி முடிந்து வீட்டிற்கு சென்றார். பின்னர் அன்று முதல் இன்று வரை பணிக்கு வரவில்லை.
இது குறித்து ஜெயில் அதிகாரிகள், அவருக்கு நினைவூட்டல் கடிதம் மூலமாகவும், வீட்டிற்கு நேரில் சென்றும் பலமுறை அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர் தொடர்ந்து பணிக்கு வரவில்லை. இது பற்றி ஜெயில் அதிகாரிகள், மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உயர் அதிகாரிகள் பரிந்துரையின் பேரில் சிறைதுறை நிர்வாகம் வார்டன் சீனிவாசனை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் மற்ற வார்டன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சேலம் மாவட்டத்தில், 11 ஆயிரத்து 612 நுகர்வோர் பொங்கல் பரிசு வாங்கவில்லை.
- பொங்கல் பரிசு வாங்காததால் தமிழக அரசுக்கு, ஒரு கோடியே 16 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மீதமானது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 1,606 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வினியோகம் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. தகுதியுள்ள 10 லட்சத்து 71 ஆயிரத்து 724 நுகர்வோர் பொங்கல் பரிசு பெற டோக்கன் வழங்கப்பட்டது.
அதன்படி ரேஷன் கடைக்கு வருகை தந்த நுகர்வோர், பரிசு தொகுப்பு வாங்கினர். ஒரு கார்டுக்கு தலா, ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் முழு கரும்பும் வழங்கப்பட்டன. முதற்கட்டமாக போகி பண்டிகை வரை பொங்கல் பரிசு வினியோகம் செய்யப்பட்டது.
இதையடுத்து, 2-ம் கட்டமாக 17-ந் தேதி முதல், 20-ந் தேதி வரை நுகர்வோர், பொங்கல் பரிசை பெற்றுச்சென்றனர். மொத்த கார்டுகளில் 10 லட்சத்து 60 ஆயிரத்து 112 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இது, 98.1 சதவீதம். மீதமுள்ள சேலம் மாவட்டத்தில், 11 ஆயிரத்து 612 நுகர்வோர் பொங்கல் பரிசு வாங்கவில்லை.
இதன்மூலம் தமிழக அரசுக்கு, ஒரு கோடியே 16 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மீதமானது. இத்தொகை அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டு உள்ளது என பொது விநியோக திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.






