search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலத்தில் பொங்கல் பரிசு ரூ.1.16 கோடி மீதம் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது
    X

    சேலத்தில் பொங்கல் பரிசு ரூ.1.16 கோடி மீதம் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது

    • சேலம் மாவட்டத்தில், 11 ஆயிரத்து 612 நுகர்வோர் பொங்கல் பரிசு வாங்கவில்லை.
    • பொங்கல் பரிசு வாங்காததால் தமிழக அரசுக்கு, ஒரு கோடியே 16 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மீதமானது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 1,606 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வினியோகம் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. தகுதியுள்ள 10 லட்சத்து 71 ஆயிரத்து 724 நுகர்வோர் பொங்கல் பரிசு பெற டோக்கன் வழங்கப்பட்டது.

    அதன்படி ரேஷன் கடைக்கு வருகை தந்த நுகர்வோர், பரிசு தொகுப்பு வாங்கினர். ஒரு கார்டுக்கு தலா, ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் முழு கரும்பும் வழங்கப்பட்டன. முதற்கட்டமாக போகி பண்டிகை வரை பொங்கல் பரிசு வினியோகம் செய்யப்பட்டது.

    இதையடுத்து, 2-ம் கட்டமாக 17-ந் தேதி முதல், 20-ந் தேதி வரை நுகர்வோர், பொங்கல் பரிசை பெற்றுச்சென்றனர். மொத்த கார்டுகளில் 10 லட்சத்து 60 ஆயிரத்து 112 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இது, 98.1 சதவீதம். மீதமுள்ள சேலம் மாவட்டத்தில், 11 ஆயிரத்து 612 நுகர்வோர் பொங்கல் பரிசு வாங்கவில்லை.

    இதன்மூலம் தமிழக அரசுக்கு, ஒரு கோடியே 16 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மீதமானது. இத்தொகை அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டு உள்ளது என பொது விநியோக திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×