என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி
    X

    வாழப்பாடி பேரூராட்சி சார்பில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சைக்கிள் பிரசார பேரணி நடைபெற்ற போது எடுத்த படம். 

    தூய்மை மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி

    • வாழப்பாடி அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தூய்மை பராமரிப்பு விழிப்புணர்வு பிரசார சைக்கிள் பேரணி மற்றும் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
    • பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி பேரூராட்சியில், தூய்மை பாரத இயக்கத்தின், நகரங்களுக்கான தூய்மை மக்கள் இயக்கத்தின் கீழ், பொதுமக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை, மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்தல், திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட சுகாதார மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி பேரூராட்சி தலைவர் கவிதா சக்கரவர்த்தி, செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் ஆலோசனையின் பேரில், வாழப்பாடி அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தூய்மை பராமரிப்பு விழிப்புணர்வு பிரசார சைக்கிள் பேரணி மற்றும் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

    பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டது.

    பேரணியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கலைஞர்புகழ், தலைமையாசிரியர் ரவிசங்கர், ஜெயலட்சுமி, துப்புரவு ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.ஜி.ஆர். பழனிசாமி மற்றும் உறுப்பினர்கள், பணியாளர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து, வாழப்பாடி பாப்பான் ஏரியில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டதோடு, இந்திரா நகர் பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    Next Story
    ×