என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு- இடைத்தேர்தல் குறித்து இருவரும் ஆலோசனை
    X

    எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு- இடைத்தேர்தல் குறித்து இருவரும் ஆலோசனை

    • ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    • வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுக மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    சேலத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் ஜி.கே.வாசன் இன்று சந்தித்து பேசினார்.

    அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது:-

    தமிழகத்தில் திமுகவை எதிர்த்து வாக்களிக்க மக்கள் தயாராகி வருகின்றனர். வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுக மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுக மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதிமுகவுடனான கூட்டணி தொடரும். மக்கள் மீது அதிக சுமைகளை ஏற்றிய திமுக அரசு, மக்கள் பாடம் புகட்டுவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×