என் மலர்
சேலம்
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
- சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 8 ஆயிரம் கனஅடியாக வந்தது.
இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 120 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை முதல் வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்து வந்து கொண்டு இருக்கிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- சுரங்க மின் நிலையங்கள் வழியாக காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அணை இந்தாண்டில் 7-வது முறையாக கடந்த 20-ந் தேதி நிரம்பியது.
இதையடுத்து அணைக்கு வரும் உபரிநீர் மேட்டூர் அணையில் இருந்து 16 கண்மதகு வழியாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே கடந்த 2 நாட்களாக அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 25 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை முதல் வினாடிக்கு 15 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்து காணப்பட்டது.
இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டது. ஆனாலும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 120 அடியாக இருந்தது.
- தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 120 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 35 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை முதல் வினாடிக்கு 25 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்து காணப்பட்டது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- கைபேசியின் மூலம் தகாத மற்றும் பாவியல் ரீதியான செய்திகளை அனுப்பியுள்ளார்.
- பிரம்மநாயகத்தை பல முறை தொலைபேசியில் எச்சரித்துள்ளார்.
சேலம் பள்ளப்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பாலத்தில் நடந்து சென்றவரிடம் செல்போன் மற்றும் பணம் பறிப்பு என்று வெளிவந்த செய்தி குறித்து காவல் துறை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமகிருஷ்ணன் அம்பேத்கார் காலனி அதிகாரிப்பட்டி அம்மாபேட்டை என்பவர் ஒரு சிறுமியுடன் (பெயர் வெளியிடப்படவில்லை) சுமார் ஒரு வருடமாக நட்பில் இருந்துள்ளார்.
சுமார் 6 மாதங்களுக்கு முன்பு பிரம்மநாயகம் என்பவர் அந்த சிறுமிக்கு தவறாக கைபேசி அழைப்பு கொடுத்து தன்னை அவளுடைய உறவினர் என்று அறிமுகப்படுத்தி மரியாதைக்குன்றிய வார்த்தைகளில் பேசியுள்ளார்.
இதை சிறுமி ராமகிருஷ்ணனிடம் தெரிவித்தபோது அவர் பிரம்மநாயகத்தை பல முறை தொலைபேசியில் எச்சரித்துள்ளார்.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பிரம்மநாயகம் மீண்டும் சுரேஷ் என்னும் பெயரில் இன்ஸ்டாகிராம் ஐடி நுவங்கி அதன் வழியாக தொடர்பு கொண்டு கைபேசியின் மூலம் தகாத மற்றும் பாவியல் ரீதியான செய்திகளை அனுப்பியுள்ளார்.
சிறுமி அவரை பிளாக் செய்து அவர் அனுப்பிய செய்திகளை ராமகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார். பிரம்மநாயகத்தை பிடிப்பதற்காக ராமகிருஷ்ணன் ஒரு போலியான இன்ஸ்டாகிராம் ஐடி ஒரு பெண் பெயரில் உருவாக்கி சில நாட்களாக பிரம்மநாயகத்துடன் இன்ஸ்டாகிராமில் உரையாடியுள்ளார்.
ராமகிருஷ்ணளின் நோக்கம் பிரம்மநாயகத்தை சேலத்திற்கு வரசெய்து அவர் அனுப்பிய தகாத செய்திகள் மற்றும் புகை படங்களை நீக்க செய்து மேலும் இனி சிறுமியை தொந்தரவு செய்யாதவாறு எச்சரிப்பதற்காகவும் அந்த ஆன்லைன் உரையாடல் அடிப்படையில் பிரம்மநாயகம் இன்று 25.10.2025 ம்தேதி சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
ராமகிருஷ்ணன் அவரது நண்பர்கள் வினிக்குமார் மற்றும் பிரதீப்ராஜ் மூவரும் பிரம்மநாயகத்தை பின்தொடர்ந்து பேருந்து நிலையம் அருகிள் உள்ள பாலம் அருகில் வருமாறு கேட்டுள்ளனர்.
அங்கு அவர்கள் பிரம்மநாயகத்தை தாக்கி அவரது அலைப்பேசியை பறித்து உடைத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த தாக்குதலின் நோக்கம் பிரம்மநாயகம் இனி அந்த சிறுமியை தொந்தரவு செய்யாமல் இருப்பதையும் அவளுக்கு அனுப்பிய தகாத செய்திகள் மற்றும் புகைப்படத்தை அவரது மொபைலில் இருந்து நீக்குவதை உறுதி செய்வதே ஆகும்
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்தது.
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக உபரிநீர் அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 7-வது முறையாக கடந்த 20-ந் தேதி நிரம்பியது. இதையடுத்து தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்தது. அது அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இது தவிர கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர்வரத்து அதிகரித்து வருவதால் கடந்த 6 நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- சேலம் சென்று கொண்டிருந்த கார் டேங்கர் லாரி மீது மோதியது.
- விபத்து காரணமாக சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உளுந்தூர்பேட்டை:
சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகன் சந்தோஷ் (வயது28). இவரது உறவினர் பாக்கியலட்சுமி(55). இவர் கடலூர் பாதிரிக்குப்பத்தில் வசித்து வந்தார். இவரை அழைத்து செல்வதற்காக சந்தோஷ் காரில் கடலூர் வந்தார். பின்னர் பாக்கியலட்சுமியை அழைத்து கொண்டு சேலம் புறப்பட்டார்.
காரில் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சூர்யா (24) என்பவரும் பயணம் செய்தார். காரை சந்தோஷ் ஓட்டி சென்றார். இந்த கார் இன்று காலை 8 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட செம்பியன்மாதேவி கன்னிமார் கோவில் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக 35 டன் தார் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சென்றது. இந்த லாரி டிரைவர் இன்டிகேட்டர் போடாமல் திடீரென வலது புறமாக செல்ல முயன்றபோது டிரைவர் திடீரென பிரேக் போட்டார். அப்போது சேலம் சென்று கொண்டிருந்த கார் டேங்கர் லாரி மீது மோதியது. இதில் காரை ஓட்டி சென்ற சந்தோஷ், பாக்கியலட்சுமி, சூர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டி சென்றவர் தஞ்சை மாவட்டம், மாரனேரி கோவில் தெருவை சேர்ந்த துரைராஜ் என்பது தெரியவந்தது. அவர் விபத்து நடந்ததும் லாரியை அங்கே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளளது.
- கர்நாடகாவில் இருந்து உபரிநீர் திறப்பு நேற்று காலை முதல் அதிகரிக்கப்பட்டது.
- இன்று காலை முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
கடந்த சில நாட்களாக நீர்வரத்தை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111 அடியாக குறைந்து காணப்பட்டது.
இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் உபரிநீர் வரத்தும் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து கடந்த 20-ந் தேதி இந்தாண்டில் 7-வது முறையாக அணை நிரம்பியது.
அதே நேரத்தில் கர்நாடகாவில் இருந்து உபரிநீர் திறப்பு நேற்று காலை முதல் அதிகரிக்கப்பட்டது. அந்த தண்ணீர் நேற்று மதியம் முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது. இதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டது. இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. 12 மணி அளவில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 65ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.
- கடந்த 2 நாட்களாக அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
- மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர்:
தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை எதிரொலியாக இந்த ஆண்டு மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி 7-வது முறையாக கடந்த 20-ந் தேதி நிரம்பியது.
அதே நேரத்தில் அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்த நிலையில், அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 21-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்தானது மேலும் அதிகரித்துள்ளது.
அதாவது கடந்த 2 நாட்களாக அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நீர் வரத்தானது, நேற்று மாலை 6 மணிக்கு வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை அணைக்கு நீர்வரத்து 55 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்படுகிறது.
இதையடுத்து சேலம், நாமக்கல் உள்பட காவிரி ஆறு பாய்ந்தோடும் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் காவிரி கரையை பகுதியை ஒட்டி அமைந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
- தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்தாண்டில் 7-வது முறையாக கடந்த 20-ந்தேதி மதியம் நிரம்பியது. இதையடுத்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையில் கடந்த 4 நாட்களாக நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 300 கனஅடியும், 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 12 ஆயிரத்து 700 கனஅடியும் என மொத்தம் வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது.
- தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்தாண்டில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை 7 முறை நிரம்பியது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதையடுத்து அணையில் இருந்து நீர்மின்நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18 ஆயிரத்து 300 கனஅடியும், 16 கண்மதகு வழியாக வினாடிக்கு 16 ஆயிரத்து 700 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.
தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
- ஆண்டிப்பட்டி, வேடுகாத்தம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், நெய்க்காரப்பட்டி,
சேலம்:
சேலம் மாவட்டம் கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (23-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பால நகர், நெடுஞ்சாலை நகர், கென்னடி நகர், வசந்தம் நகர், கிழக்கு திருவாக்கவுண்டனூர், மேத்தா நகர், காசக்காரனூர், கோனேரி கரை, கே.பி.கரடு வடபுறம், மூலப்பிள்ளையார் கோவில், சண்முகசெட்டிக்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகாத்தம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், நெய்க்காரப்பட்டி, பெருமாம்பட்டி,
சேலத்தாம்பட்டி, வட்ட முத்தம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, தளவாய்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, சுந்தர் நகர், மல்லமூப்பம்பட்டி, காந்தி நகர், சித்தனூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், அரியா கவுண்டம்பட்டி எம்.ஜி.ஆர். நகர், காமநாயக்கன்பட்டி, ராம கவுண்டனூர், போடிநாயக்கன்பட்டி, அரியாகவுண்டம்பட்டி, சோளம் பள்ளம் மற்றும் பழைய சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் பாரதி தெரிவித்துள்ளார்.






