என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திமுக ஒரு கார்ப்பரேட் கட்சி.. அதிமுக தான் உண்மையான கட்சி- எடப்பாடி பழனிசாமி
- தமிழ்நாட்டிற்கு டிஜிபி நியமனம் செய்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன கஷ்டம்?
- அதிமுகவின் கோரிக்கையை ஏற்று 100 நாள் வேலையை மத்திய அரசு 125 நாட்களாக உயர்த்தியது.
சேலத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டு மக்களை பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவலைப்படாமல் இருக்கிறார். பொது மக்களை பற்றி கவலைப்பட்டிருந்தால் தமிழ்நாட்டிற்கு டிஜிபி நியமனம் செய்திருப்பார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என முதலமைச்சர் நினைத்தால் உடனடியாக டிஜிபியை நியமனம் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு டிஜிபி நியமனம் செய்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன கஷ்டம்?
திமுக ஒரு கார்ப்பரேட் கட்சி, அதிமுக தான் உண்மையான கட்சி. வரும் தேர்தலுடன் திராவிட முன்னேற்றக் கழக வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. திமுகவிற்காக உதயநிதி ஸ்டாலின் எத்தனை காலம் உழைத்திருக்கிறார்?
திட்டங்களை நிறைவேற்ற நிதியில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூப்பாடு போடுகிறார். கார் பந்தயம் நடத்த, கடலில் பேனா சிலை வைக்க தேவையில்லாமல் நிதி செலவழிப்பு.
கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. திமுக அரசு அளித்த வாக்குறுதியின்படி 100 நாள் வேலை நாட்களை உயர்த்தினார்களா?
அதிமுகவின் கோரிக்கையை ஏற்று 100 நாள் வேலையை மத்திய அரசு 125 நாட்களாக உயர்த்தியது.
அதிமுக எப்படி கூட்டணி அமைக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






