என் மலர்
சேலம்
- புஷ்பராஜ் மற்றும் கிருஷ்ணன் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டது.
- கடந்த 17-ந் தேதி அவரது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார்.
சேலம்
சேலம் ஜாகீர் அம்மா பாளையம் அண்ணாநகரை சேர்ந்தவர் புஷ்பராஜ் (73), பத்திரப்பதிவுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் கடந்த 17-ந் தேதி அவரது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். அப்போது ஜாகீர் அம்மாபாளையம் வீரபாண்டியார் நகரை சேர்ந்த சிலம்பரசன் என்ற கோபால கிருஷ்ணன் (32)என்பவர் கட்டுமான பொருட்களை மினி சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவ்வழியாக வந்தார்.
புஷ்பராஜ் வீட்டின் முன்பு வந்த போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த புஷ்பராஜ் எனது வண்டியை யாரிடம் கேட்டு அப்புறப்படுத்தினாய் என கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இப்போது ஆத்திரமடைந்த சிலம்பரசன் முதியவர் புஷ்பராஜை அடித்து தள்ளி விட்டார். இதில் கீழே விழுந்ததில் அவரது பின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.இதனை தடுக்க வந்த புஷ்பராஜின் மகள் கோகிலா வையும் அவர் அடித்தார். பின்னர் உறவினர்கள் புஷ்பராஜை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் சிலம்பரசன் மீது பெண் வன்கொடுமை கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த புஷ்பராஜ் நேற்று உயிரிழந்தார்.இதை அடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றி உள்ளனர். இதனால் சிலம்பரசன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆணையும் சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.
- உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு 55 உணவு நிறுவனங்களில் ஆய்வு
- 9 கடைகளுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
சேலம்
தமிழக சுகாதார செயலாளர் மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையாளர் உத்தரவுப்படி சேலம் மாவட்டம் ஆத்தூர், எடப்பாடி, தலைவாசல் மற்றும் சேலம் மாநகராட்சி சூரமங்கலம் போன்ற பகுதிகளில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு 55 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது 10 உணவு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு சட்ட விதி மீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அபராதம்
பழைய மற்றும் சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மட்டன் மற்றும் சிக்கன் 74.5 கிலோ, சேமித்து வைக்கப்பட்ட சாதம் 46.2 கிலோ, கெட்டுப்போன மீன்கள் 60 கிலோ, நூடுல்ஸ், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் 11.7 கிலோ என மொத்தமாக 193 கிலோ கிராம் பறிமுதல் செய்யப்பட்டு அந்தந்த பகுதிகளில் அழிக்கப்பட்டது.இதையடுத்து 12 உணவு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 9 உணவு நிறுவனங்களுக்கு ரூ. 15000 அபராதம் விதிக்கப்பட்டது.
எச்சரிக்கை
இதுகுறித்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் கூறுகையில், சேலம் மாவட்டம் முழுவதும் இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். உணவு பாதுகாப்பு சட்ட விதி மீறல்கள் கண்டறியப்படும் உணவு நிறுவனங்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி கடுமையான மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
தாரமங்கலம்
தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிராமம். செங்கோ டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (60). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கீழே தவறி விழுந்து தலையில் அடிபட்டு மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டில் தென்னை மரத்திற்கு வைத்தி ருந்த பூச்சி மாத்திரையை சாப்பிட்டு மயக்க நிலையில் இருந்துள்ளார். அவரை உடனடியாக மீட்ட அவரது குடும்பத்தினர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த சுப்பிரமணி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இது பற்றி அவரது மகன் சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பிரபல ரவுடியான பல்சர்குமார் மீது 12 வழக்குகள் உள்ளன.
- கடந்த மாதம் 7-ந் தேதி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.
சேலம்
சேலம் டவுன் மேட்டுதெரு ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் என்ற பல்சர்குமார் (33), பிரபல ரவுடியான இவர் மீது 12 வழக்குகள் உள்ளன. மேலும் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் 7-ந் தேதி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.
சரமாரி வெட்டு
இந்த நிலையில் டவுன் ரெயில்வே ஸ்டேசனில் உள்ள தண்டவாளத்தில் நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து நேற்றிரவு மது குடித்து கொண்டிருந்த போது அவர்களுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது பல்சர் குமாரை 4 பேரும் சேர்ந்து ஓட ஓட விரட்டி தலையில் வெட்டினர்.பலத்த காயத்துடன் அலறிய படி வெளியில் ஓடி வந்த பல்சர் குமார் அதிர்ச்சி யில் உறைந்தார். பின்னர் உறவினர்களை செல்போ னில் அழைத்தார். அதன்பே ரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு ெதாடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் வி சாரணை நடத்தினர். இதில் பல்சர்குமா ரின் நண்பர்களான ஜாபர் , சித்தேஷ், பிரகாஷ், மணி ஆகியோர் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
தேடுதல் வேட்டை
மேலும் அவர்கள் திட்ட மிட்டு அழைத்து வந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டனரா? அல்லது திடீரென மோதல் ஏற்பட்டு இந்த தாக்குதல் நடந்ததா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் 4 பேரையும் போலீசார் தேடிய போது அவர்கள் தலைமறை வானது தெரிய வந்தது.தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் தலைமை யிலான தனிப்படை போலீ சார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தாரமங்கலம்
தாரமங்கலம் அருகிலுள்ள பாப்பம்பாடி கிராமம் கருத்தானுர் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (34) . இவர் அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே அரசு அனுமதியின்றி பட்டாசு வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த போது ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்து கைது செய்துள்ளனர்.
- வட்டார அளவிலான முன்னோடி விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு
- தாரமங்கலம் பகுதியில் 10,300 ஏக்கரில் பயிர்கள் விதைக்கப்பட்டு வருகின்றனர்.
தாரமங்கலம்
தாரமங்கலம் வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் வேளாண் அலுவலக கட்டிட அரங்கத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குனர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆத்மா திட்ட குழு தலைவர் ஐயப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட வட்டார அளவிலான முன்னோடி விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து இலவச மரக்கன்றுகள் ஆன வேம்பு.மகாகனி.தேக்கு. செம்மரம் போன்ற கன்றுகளை நடவு செய்ய அறிவுறுத்தப்பட்டனர். மேலும் தற்போது பெய்து வரும் நல்ல மழையை பயன்படுத்தி தாரமங்கலம் பகுதியில் 10,300 ஏக்கரில் துவரை, பச்சைபயிறு, தட்டைப்பயிறு, ராகி உள்ளிட்ட பயிர்கள் விதைக்கப்பட்டு வருகின்றனர்.
பருவநிலை மாற்றத்தின் காரணமாக காலதாமதமாக பெய்த மழையால் விதைப்பு பணிகள் மகசூல் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த இழப்பீட்டை தவிர்க்கவும் மகசூலை அதிகரிக்கவும் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டது.மேலும் இக்கூட்டத்தில் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஷர்மிளாதேவி, வேளாண் உதவி பொறியாளர், பட்டு வளர்ச்சித்துறை ஆய்வாளர், மீன்வளத்துறை ஆய்வாளர் உட்பட பலர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
- பிரசாந்த் ஜோதிடம் பார்ப்பதாக கூறி தோஷம் உள்ளது என்று கூறி பூஜை செய்தால் நிவர்த்தி ஆகும்
- செல்வராஜ் வீட்டில் இருந்த 2 பவுன் தங்க சங்கலி மற்றும் ரூ. 2 ஆயிரம் கொண்டு வைத்தனர்
மேட்டூர்
மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் அருகே காப்பரத்தாம்பட்டியில் வசிக்கும் பழனிசாமி மகன் செலவராஜ் (29) கட்டிட வேலை செய்து வருகிறார்.
இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி மதியம் 12 மணி அளவில் செல்வராஜ் வீட்டிற்கு வந்த பிரசாந்த் (23) என்கிற வாலிபர் ஜோதிடம் பார்ப்பதாக கூறியுள்ளார் உங்களுக்கு தோஷம் உள்ளது என்று கூறி பூஜை செய்தால் நிவர்த்தி ஆகும் என்று கூறியுள்ளார்.இதனை நம்பிய செல்வ ராஜ் மற்றும் அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்து வீட்டுக்கு உள்ளே பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது ஜோதிடம் பார்க்கும் பிரசாந்த் உங்கள் வீட்டில் உள்ள நகை பணத்தை பூஜையில் வைக்க வேண்டும் பூஜை முடிந்தயுடன் திருப்பி தருவதாக கூறியுள்ளார்.
பின்பு பூஜையில் செல்வராஜ் வீட்டில் இருந்த 2 பவுன் தங்க சங்கலி மற்றும் ரூ. 2 ஆயிரம் கொண்டு வந்து பூஜையில் வைத்துள்ளனர். அப்போது ஜோதிடம் பார்த்த பிரசாந் மந்திரம் சொல்லி விட்டு குடிக்க தண்ணீர் கொண்டு வாருங்கள் என்று கூறி நகை பணத்தை சுருட்டி கொண்டு தப்பியுள்ளார்.மேலும் இந்த சம்பவம் குறித்து ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் செல்வராஜி புகார் செய்துள்ளார். ஜலகண்டா புரம் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமரா காட்சியை வைத்து தீவிர விசாரணை செய்ததில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பிர சாந்தை அடையாளம் கண்டு வாகன என்னை வைத்து தேடிவந்த நிலையில் நகை பணம் கொள்ளையடித்த பிரசாந்த் திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் மகன் என்பது தெரியவந்துள்ளது.
பின்பு ஜலகண்டாபுரம் போலீசார் விரைந்து சென்று திருச்சியில் பிரசாந்த்தை கைது செய்து அவரிடம் இருந்த இரண்டு பவுன் தங்க சங்கலியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
- நடேசன் விறகு அடுப்பில் சமையல் செய்து விட்டு தீயை அணைக்காமல் கடைக்கு சென்றுவிட்டார்.
- கடைக்குச் சென்ற நடேசன் திரும்பி வந்து பார்த்தபோது குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது
மேட்டூர்
மேட்டூர் அருகே புதுக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி நடேசன் (63) இவரது மனைவி சரோஜா (55) . இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தனர். மனைவி சரோஜா ஊருக்கு சென்ற நிலையில் நடேசன் விறகு அடுப்பில் சமையல் செய்து விட்டு தீயை அணைக்காமல் கடைக்கு சென்றுவிட்டார். அப்போது அடுப்பில் இருந்த தீ பொறி குடிசையில் பட்டு மள, மள குடிசை வீடு தீப்பற்றி எரிய தொடங்கியது.
கடைக்குச் சென்ற நடேசன் திரும்பி வந்து பார்த்தபோது குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததை கண்டு கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டரை வெளியே எடுத்து வந்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்து குறித்து கருமலைக்கூடல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி குடிசை வீட்டில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இந்த விபத்தில் குடிசை வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது மேலும் வீட்டிலிருந்த துணிகள், மளிகை பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகியது. இது குறித்து கருமலை கூடல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அசைவ ஓட்டல்களில் ஆய்வு
- சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 40 கிலோ சிக்கன், 5 கிலோ மீன், 2 கிலோ மட்டன், 3 கிலோ நண்டு, இறால் என மொத்தம் 52 கிலோ பறிமுதல்
சங்ககிரி
நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட மாணவி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அசைவ ஓட்டல்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஓட்டல்களில் ஆய்வு
அந்த வகையில் சங்ககிரி உணவு பாதுகாப்பு அலுவலர் கண்ணன் தலைமையில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் சங்ககிரி புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், பச்சகாடு, குப்பனூர் பைபாஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், தாபாக்கள், ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட உணவகங்களில் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு சில ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு சட்ட விதி மீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.இதையடுத்து சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 40 கிலோ சிக்கன், 5 கிலோ மீன், 2 கிலோ மட்டன், 3 கிலோ நண்டு, இறால் என மொத்தம் 52 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பாக அழிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 4 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் 5 உணவு நிறுவனங்களுக்கு தலா ரூ. 5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
- பதிவேடுகளை பார்வையிட்டு தணிக்கை செய்து 3 மாதத்திற்கு மேல் நிலுவையில் உள்ள பட்டா மாறுதல்களை விரைந்து முடிக்க வேண்டும்
- வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று ஆய்வு
சங்ககிரி
சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் ஆய்வு செய்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக சங்ககிரி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் ஆய்வு பணி மேற்கொண்டார். அப்போது கலைஞர் மகளிர் உரிமை திட்ட உதவி மையத்தை பார்வையிட்டார். தொடர்ந்து அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு தணிக்கை செய்து 3 மாதத்திற்கு மேல் நிலுவையில் உள்ள பட்டா மாறுதல்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறவுறுத்தினார்.
முன்னதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு வாகன டிரைவர் உரிமம் மற்றும் வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்குவது குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது, சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், சங்ககிரி ஆர்.டி.ஓ. லோகநாயகி, தாசில்தார் அறிவுடைநம்பி, ஆதிதிராவிட நல தனி தாசில்தார் லெனின், வட்ட வழங்கல் அலுவலர் அமுதா, மண்டல துணை தாசில்தார் ரமேஷ், ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர் முத்துசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சிராஜூதின், வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் கன மழை பெய்து வருகிறது.
- இரவு 11 மணியில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கன மழையாக கொட்டியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
குறிப்பாக சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதியான மேட்டூர், ஏற்காடு, சங்ககிரி, ஓமலூர், எடப்பாடி ஆகிய பகுதிகளில் நேற்றிரவு 12 மணிக்கு தொடங்கிய மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக கன மழையாக கொட்டியது. பின்னர் விடிய விடிய மழை தூறலாக நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் தொடர்ச்சியாக ஏற்காட்டில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு 7 மணிக்கு லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது.
இரவு 11 மணியில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கன மழையாக கொட்டியது. இதனால் ஏற்காட்டில் உள்ள சிறுவர் பூங்காவில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளதால் சிறுவர்கள் விளையாட முடியாமல் தவித்து வருகிறார்கள். ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பெய்து வரும் கன மழையால் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மழை மற்றும் குளிர் காரணமாக இரவு 7 மணிக்கு மேல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக மேட்டூரில் 47.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஏற்காட்டில் 17.4, சங்ககிரியில் 17.10, ஓமலூரில் 15, எடப்பாடி 14.4, காடையாம்பட்டி 9 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று காலை மாவட்டம் முழுவதும் வெயில் அடித்தபடி இருந்தது.
- கடந்த ஒரு வாரமாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிற
- மேட்டூர் அணை பகுதியில் நேற்று 47.80 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 3 மாதத்திற்கும் மேலாக காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது.
இதையடுத்து குறுவை பயிர்களை காப்பாற்ற கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக்கோரி தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தது.
இதையடுத்து முதல் கட்டமாக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து 2-வது கட்டமாகவும் 15 நாட்களுக்கு 5ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.
ஆனால் கர்நாடக அரசு அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
இதற்கிடையே கடந்த ஒரு வாரமாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 18-ந் தேதி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 556 கனஅடி நீர் வந்தது. 19-ந் தேதி 2ஆயிரத்து 844 கனஅடி தண்ணீர் வந்தது. 20-ந் தேதி நீர்வரத்து 2ஆயிரத்து 938 கனஅடியாக அதிகரித்தது. நேற்று 3ஆயிரத்து 367 கனஅடியாக அதிகரித்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4ஆயிரத்து 421 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையின் நீர்மட்டம் 38.19 அடியாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 6ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் 11.17 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது. மேட்டூர் அணை பகுதியில் நேற்று 47.80 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.






