கடன் தொல்லையால்சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 5 பேர் மாயம்

5 பேரும் கடந்த 17-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியில்சென்றனர். அதன் பிறகு இது வரை வீடு திரும்பவில்லை.அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.
மாயமான சூர்யாபேகம், சிராஜ்ஜின் முனீர், பரக்கத்நிஷா, ஷேக்சதாக், ஜாயதா.
மாயமான சூர்யாபேகம், சிராஜ்ஜின் முனீர், பரக்கத்நிஷா, ஷேக்சதாக், ஜாயதா.
Published on

சேலம்:

சேலம் ஜாகீர்அம்மாப்பாளையம் மெயின்ரோடு மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சூர்யாபேகம் (62). இவரது மகன் சிராஜ்ஜின் முனீர் (39), வெள்ளி தொழிலாளி. இவரது மனைவி பரக்கத்நிஷா (29). இவர்களது குழந்தைகள் ஷேக்சதாக் (10), ஜாயதா (5).

திடீர் மாயம்

இவர்கள் 5 பேரும் கடந்த 17-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியில்சென்றனர். அதன் பிறகு இது வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.

ஆனால் அவர்கள்கு றித்து எந்த தகவலும் கிடைக்காததால் சம்பவம் குறித்து சிராஜ்ஜின் முனீரின் சகோதரி சல்மா சூர மங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகிறார்கள். மேலும் மாயமாகி 8 நாட்கள் ஆகி உள்ளதால் அவர்கள் தற்போது எங்கு உள்ளனர் என்பது மர்மமாக உள்ளது.

கடன் தொல்லை

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது வெள்ளி வேலை செய்து வந்த சிராஜ்ஜின்முனீருக்கு கடன் அதிகமாக இருந்தது தெரிய வந்தது.

இதனால் அவரை யாராவது மிரட்டினார்களா? இதனால் அவர் குடும்பத்துடன் அவர் எங்காவது சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் ேபாலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com