என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இன்று அடைப்பு
- கருப்பூர் பகுதியில் மகளிர் தொழில் பூங்கா செயல்பட்டு வருகிறது.
- 1200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது.
கருப்பூர்
சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியில் மகளிர் தொழில் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு 180 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.இந்த நிலையில் மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி தமிழ்நாடு தொழிற் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் சார்பில் இன்று ஒரு நாள் 180 தொழிற் நிறுவனங்களும் உற்பத்தியை நிறுத்தி பூங்கா வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன.
இப்போராட்டத்தில் சங்க தலைவர் மகேஷ்வரி விஸ்வநாதன், பொருளா ளர் சாந்தி, ஒருங்கிணைப்பா ளர் சிந்து வசந்த், துைண தலைவர் பார்வதி உள்பட 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனால் 1200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. இன்று ஒரு நாள் மட்டும் இந்த தொழிற்பேட்டையில் ரூ.4 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது.
நாமக்கல்
தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின் சார்பில் முதல்-அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு தொழிற்சா லைகள் இன்று உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டன.
அதுபோல் லாரி பாடி கட்டுமானத்தில் ஈடுபடும் நிறுவனங்களும் போராட்டத்தில் பங்கேற்றன.இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக இன்று சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்தனர்.
ஆயில் மில்கள்
வேலை நிறுத்தம்
தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து தொழிற்கூட்ட மைப்புகள் சார்பில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி மும்முனை மின்சாரத்தை பயன்படுத்தும் நிறுவனங்களான அரிசி ஆலைகள், ஆயில் தயாரிப்பு மில்கள், பருப்பு மில்கள், பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனால் இந்த நிறுவனங்களில் தினசரி உற்பத்தி முடங்கி உள்ளது. இதி ல் வேலை பார்த்தோரும் இன்று ஒரு நாள் வேலை இழந்துள்ள னர்.
குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள 250-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளும், 100-க்கும் மேற்பட்ட ஆயில் மில்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதனால் அரிசி ஆலைகளில் உற்பத்தி முற்றிலும் முடங்கி உள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட அரிசி ஆலைகள் சங்க தலைவர் சியாமளநாதன் கூறியதாவது-
மின் கட்டண உயர்வால் அனைத்து சிறுதொழில்க ளும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. தொழில் நிறு வனங்களுக்கான மும்முனை மின்சார கட்ட ணம் 30 சதவீதம் உயர்ந் துள்ளது. இதனால் 4 லட்சம் ரூபாய் மின் கட்ட ணம் வந்த அரிசி ஆலை களுக்கு தற்போது 5 லட்சத்து 20 ஆயிரம் மின் கட்டணம் வருகிறது.
இதனால் செலவு மேலும் அதிகரித்துள்ளதால் தொழில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மின் கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் நிலை உள்ளது.
எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு மின் கட்ட உயர்வை திரும்ப பெற வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்