என் மலர்
சேலம்
- ராதா என்பவருக்கும் பூமாலை என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
- கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராதா குடும்ப தகராறு காரணமாக கணவனை பிரிந்து தம்பி அபிஷேக் குடும்பத்தினரு டன் வசித்து வருகிறார்.
சங்ககிரி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா படவீடு கிராமம் அல்லி நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் அபிஷேக் பிரபாகரன் (36) சமையல் தொழிலாளி.
இவரது அக்கா ராதா என்பவருக்கும் சங்ககிரி அருகே வளைய செட்டிபாளையத்தைச் சேர்ந்த பூமாலை என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராதா குடும்ப தகராறு காரணமாக கணவனை பிரிந்து தம்பி அபிஷேக் குடும்பத்தினரு டன் வசித்து வருகிறார். ராதா வடுகப்பட்டி அரசு மருத்துவமனை மூலம் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 8.45 மணிக்கு அபிஷேக் தனது அக்கா ராதாவை வடுகப்பட்டி அருகே உள்ள காளியம்மன் கோவில் பக்கத்தில் பணி செய்ய இறக்கிவிட்டு அங்கு நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அக்கமாபேட்டையைச் சேர்ந்த அசோகன் என்பவர் அபிஷேக்கை பார்த்து உன் அக்காவை அவரது கணவருடன் பிழைக்க விட மாட்டியா? என திட்டியும், அருகில் கிடந்த தென்னம்மட்டையை எடுத்து தலையில் அடித்ததா கவும் கூறப்படுகிறது. மேலும் அதே பகுதியைச் சேர்ந்த சிவன், ராஜதுரை ஆகியோரும் அபிஷேக்கை மாறி மாறி தாக்கி அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்று விட்டதாக தெரிகிறது.
காயமடைந்த அபிஷேக் பிரபாகரனை அருகில் இருந்தவர்கள் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து அபிஷேக்பிர பாகரன் நேற்று சங்ககிரி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அசோகன், சிவம், ராஜதுரை ஆகிய 3 பேர் மீதும் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சேலம் அயோத்தியாபட்டணத்தை அடுத்த குப்பனூர் பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது.
- இக்கல்லூரியில் படிக்கும் 2 மாணவிகள் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்கி விட்டு மீண்டும் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
சேலம்:
சேலம் அயோத்தியாபட்டணத்தை அடுத்த குப்பனூர் பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
2 மாணவிகள்
இந்த நிலையில் இக்கல்லூரியில் படிக்கும் 2 மாணவிகள் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்கி விட்டு மீண்டும் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் மாணவிகளை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் மாணவிகளை தங்கள் கையைப் பிடித்து சாலையை கடத்தி விடுமாறும் வற்புறுத்தி உள்ளனர். அதற்கு மாணவிகள் மறுத்ததாக தெரிகிறது.
சரமாரி தாக்குதல்
இதனை தொடர்ந்து அந்த 2 வாலிபர்களும் மாணவிகளை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை தடுத்து மாணவிகளை மீட்டனர். மேலும் இதுகுறித்து வீராணம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கைது
இதில் மாணவிகளை தாக்கியது குப்பனூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (22), கார்த்திகேயன் (25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவிகளை வழிமறித்து வாலிபர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
- சேலம் கோட்டை அழகிரி நாதர் என்று அழைக்கப்படும் கோட்டை பெருமாள் கோவிலில் இன்று காலை சிறப்பு அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது.
சேலம்:
சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்க ளில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
சேலம் கோட்டை அழகிரி நாதர் என்று அழைக்கப்படும் கோட்டை பெருமாள் கோவிலில் இன்று காலை சிறப்பு அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. அதன்பின்னர் அழகிரிநா தர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கண்ணாடி மாளிகை
கண்ணாடி மாளிகையில் ராமர், லட்சுமணன், சீதா, ஆஞ்சநேயர் ஊஞ்சல் உற்சவ சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயர், கருடாழ்வாரை பக்தர்கள் வழிபட்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள பட்டை கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அம்மாபேட்டை சவுந்தர ராஜ பெருமாள் கோவிலில் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேலம் பெரமனூர் வெங்க டேச பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்கா ரம் செய்யப்பட்டிருந்தது. ஜாகீர் அம்மாபாளையம் வர பிரசாத ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
துளசி மாலை
ஆனந்தா இறக்கம் அருகே உள்ள லட்சுமி நாராயணசாமி கோவிலில் புரட்டாசி முதல் சனிக் கிழமையையொட்டி சாமிக்கு துளசி மாலை அணிவிக்கப்பட்டது.
சேலம் செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து அபி ஷேக வழிபாடு நடை பெற்றது. செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், அயோத்தி யாப்பட்டணம் ராமர் கோவில், சின்னத் திருப்பதி வெங்கடேச பெரு மாள்கோவில், அழகாபுரம் வெங்கடேசுவரா பாலாஜி டிரஸ்ட் கோவில், உடையாப்பட்டி சென்றாய பெரு மாள் கோவில், கடைவீதி வேணுகோபால சுவாமி கோவில், நாமமலை பெரு மாள் கோவில், நெத்திமேடு கரியபெரு மாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை யொட்டி சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
- தமிழ் மாதமான புரட்டாசியில் பெரும் பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து பெருமாள், ஆஞ்சநேயர் வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம்.
- சேலம் மாவட்டம் வாழப்பாடி, ஓமலூர், எடப்பாடியில் இருந்து தக்காளி, கத்தரி, வெண்டைக்காய், அவரை உள்பட பல்வேறு காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.
சேலம்:
தமிழ் மாதமான புரட்டாசியில் பெரும் பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து பெருமாள், ஆஞ்சநேயர் வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். இதனால் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்து விட்டது. மேலும் காய்கறிகள் விற்பனை அதிகரித்துள்ளது. சேலம் மாநகரில் திருமணிமுத்தாறு ஆற்று பாலம், வ.உசி.மார்க்கெட் ஆகிய பகுதிகளில் காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த மார்க்கெட்டு களுக்கு சேலம் மாவட்டம் வாழப்பாடி, ஓமலூர், எடப்பாடியில் இருந்து தக்காளி, கத்தரி, வெண்டைக்காய், அவரை உள்பட பல்வேறு காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. ஊட்டியில் இருந்து கேரட், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளும் விற்பனைக்கு வருகிறது.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் சேலத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் வரத்து குறைவாகவே இருந்தது. வரத்து குறைவு காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் மற்ற நாட்களை விட ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது.
சேலம் மார்க்கெட்டில் விற்பனையாகும் காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
கேரட்-ரூ.46, பீன்ஸ்-75, மிளகாய்-ரூ.34 முள்ளங்கி-ரூ.20, பாகற்காய்-ரூ.22க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அவரை-ரூ.45, கத்தரிக்காய்-ரூ.20, பீர்க்கங்காய்-ரூ.24, புடலங்காய்-ரூ.20 தக்காளி-ரூ.15, சின்ன வெங்காயம்-ரூ.40, பல்லாரி-ரூ.34, உருளைக்கிழங்கு-ரூ.34, விற்பனையாகி வருகிறது.
மழை காரணமாக மார்க் கெட்டுக்கு காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வரத்தைவிட இந்த வாரம் சற்று உயர்வாகவே இருந்து வருகிறது.
- ஏற்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- ஓமலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
குறிப்பாக பெத்த நாயக்கன் பாளையம், தலைவாசல், ஆனைமடுவு, ஆத்தூர் உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு 10 மணிக்கு தொடங்கிய மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக கன மழையாக கொட்டியது.
இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாய பயிர்கள் செழித்து வளர்வதுடன் நீர்நிலைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காட்டில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் ஏற்காடு மலைப்பாதையில் 3 மற்றும் 4-வது கொண்டை ஊசி வளைவு, 40 அடி பாலம் ஆகிய பகுதிகளில் உள்ள அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. வெள்ளியை காய்ச்சி ஊற்றுவது போல இந்த தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளை இந்த அருவிகள் வெகுவாக கவர்ந்துள்ளது.
இதனால் மலைப்பாதையில் கொட்டும் அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள். மேலும் செல்பி எடுத்தும் உற்சாகமாக நீரில் விளையாடியும் வருகிறார்கள். இதனால் ஏற்காடு செல்லும் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்துள்ளனர். ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
ஓமலூர் அருகே உள்ள சேர்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள பனிக்கரடு பகுதியில் கிழக்கு சரபங்கா நதி உற்பத்தியாகிறது. இந்த நதி சக்கர செட்டிப்பட்டி ஊராட்சி நாலுகால்பாலம் வழியாக காமலாபுரம் ஏரியை வந்து அடைகிறது.
இந்த நிலையில் ஓமலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் கிழக்கு சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் சக்கரசெட்டிப்பட்டி வனப்பகுதியில் விவசாயிகள் ஏற்படுத்திய ஏரி நிரம்பி, தற்போது காமலாபுரம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
கனமழையின் காரணமாக ஒரே நாளில் ஏரி நிரம்பி உள்ளதால் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக பெத்த நாயக்கன்பாளையத்தில் 20 மி.மீ. மழை பதிவாகி உள்ளது . தலைவாசல் 19, ஆனைமடுவு 18, ஆத்தூர் 9.4, சங்ககிரி 7.4, தம்மம்பட்டி 4, ஏற்காடு 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 78.8 மி.மீ. மழை பெய்துள்ளது.
- கணவாய்புதூர், கே.என்.புதூர் கிராமங்களில் 1938-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நில குடியேற்ற கூட்டுறவு சங்கத்திற்கு 382 ஏக்கர் நிலம் இருந்தது.
- விவசாயிகளுக்கு பட்டா வழங்க கோரி சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. மற்றும் கணவாய் புதூர் ஊராட்சி பொதுமக்கள் சார்பில் காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காடையாம்பட்டி:
ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி ஒன்றியம் கணவாய் புதூர் ஊராட்சி கணவாய்புதூர், கே.என்.புதூர் கிராமங்களில் 1938-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நில குடியேற்ற கூட்டுறவு சங்கத்திற்கு 382 ஏக்கர் நிலம் இருந்தது. சங்கத்தின் பெயரிலேயே பட்டா இருந்து வந்தது.
அந்த நில குடியேற்ற கூட்டுறவு சங்கத்தில் 474 சங்க உறுப்பினர்கள் இந்த நிலத்தை விவசாயம் செய்து அங்கேயே குடியிருந்து வந்தனர். தற்போது 500 குடும்பம் வரை உள்ளன. இந்த சங்கமானது 1986-ம் ஆண்டு கலைக்கப்பட்டது.
அதற்கு முன்பாக கூட்டுறவு சங்கமானது சங்க உறுப்பினர்கள் அவர்களது அனுபவத்தில் உள்ள சங்கத்தின் நிலத்தை அவரவர்கள் பட்டா பெற்றுக்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அந்த நிலங்கள் அனைத்தும் தரிசு புறம்போக்கு நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது என தெரிகிறது. அந்த நிலங்களுக்கு அனுபவத்தில் உள்ள விவசாயிகளின் பெயரில் பட்டா வழங்கக்கோரி நீண்ட நாட்களாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் அந்த நிலத்தை வருவாய்த்துறையினர் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நிலங்களை அளவீடு செய்து வந்து உள்ளனர்.
இதனை கண்டித்து லேண்ட் காலனி நிலங்களை விவசாயிகளுக்கு பட்டா வழங்க கோரி சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. மற்றும் கணவாய் புதூர் ஊராட்சி பொதுமக்கள் சார்பில் காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. தலைவர் டாக்டர். மாணிக்கம் தலைமை தாங்கினார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் வரவேற்றார் கணவாய் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் குமுதா ரத்தினம் ஒன்றிய பா.ம.க. செயலாளர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்திக், சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர்் சங்க தலைவர் கண்ணையன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். மாவட்ட வன்னியர்சங்க தலைவர் முருகன், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், தொழிற்சங்க தலைவர் பழனிசாமி, மாநில வன்னியர் சங்க பொதுக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட கவுன்சிலர் அண்ணாமலை, ஒன்றிய குழு துணை தலைவர் செல்வி ராமசாமி, ஒன்றிய பா.ம.க. செயலாளர் வெங்கடேஷ், செல்வம், ராஜாமணி, மாதேஷ், பி எஸ் கே செல்வம் விஜயராகவன், ராஜேந்திரன், நகரச் செயலாளர் சாய் சுஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
ஓமலூர்
ஓமலூர் அடுத்த காருவள்ளி சின்ன திருப்பதி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இன்று முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 5 மணி முதலே சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
நீண்ட வரிசை
இதையொட்டி கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி தரிசனம் செய்யும் வகையில் தடுப்புகள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் புரட்டாசி கடைசி வாரம், ஐப்பசி மாத முதல் வாரத்தில் தேரோட்டம் நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
சங்ககிரி
சங்ககிரி அருகே ஒருக்காமலையில் உள்ள வரதராஜப்பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் செயல் அலுவலர் சங்கரன் தலைமையில் வரதராஜ பெருமாள் சுவாமிக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
அதனைதொடர்ந்து திருக்கோடி ஏற்றப்பட்டது. சுவாமியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு சாமியை வழிபட்டனர்.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி சங்ககிரி டி.எஸ்.பி. ராஜா உத்திரவின் பேரில் சங்ககிரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- கிராம கட்டுப்பாட்டை மீறி மது குடிப்பவர்கள், விற்பவர்களை போலீசாரிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
- கிராம பகுதிகளில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புளியங்குறிச்சியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் குடிமகன்கள் புளியங்குறிச்சி பஸ் நிறுத்தம், நீரோடை, பள்ளி வளாகம் உள்ளிட்ட பொது இடங்களில் அமர்ந்து குடித்து வந்தனர்.
மேலும் கல்வராயன்மலையில் இருந்து கடத்தி வரும் சாராயத்தையும் விற்று வந்தனர். இதனால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வந்தது.
இதை தடுக்க புளியங்குறிச்சி எல்லை பகுதியில் மது அருந்த, விற்க ஊராட்சி நிர்வாகம் தடை விதித்து உள்ளது. மேலும் கிராம கட்டுப்பாட்டை மீறி மது குடிப்பவர்கள், விற்பவர்களை போலீசாரிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக கிராம பகுதிகளில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு உள்ளது. அந்த பலகையில் 'புளியங்குறிச்சி ஊராட்சியில் மது விற்க தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் மது அருந்துவோர் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து தலைவாசல் புளியங்குறிச்சியில் மது அருந்துவோர் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
- கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2500 கனஅடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2973 கன அடியும் திறக்கப்பட்டது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது.
எனவே தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது.
இதையடுத்து முதல் கட்டமாக தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் மீண்டும் 2-வது கட்டமாக தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. ஆனாலும் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விட மறுத்து விட்டது.
இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி காவிரி மேலாண்மை குழு அவசர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் உடனடியாக தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனாலும் அவர்கள் தண்ணீர் திறக்காமல் இருந்து வந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வந்தது. இதில் கர்நாடக அரசு வரலாறு காணாத வறட்சி நிலவுவதால் தண்ணீர் தர முடியாது என்று வாதிட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது. மேலும் காவிரி மேலாண்மை உத்தரவுக்கு தடை கோரிய கர்நாடகாவின் மனுவையும் டிஸ்மிஸ் செய்தது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அடுத்து கர்நாடக அணைகளில் இருந்து இன்று காலை முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2500 கனஅடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2973 கன அடியும் என மொத்தம் 5 ஆயிரத்து 473 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2796 கனஅடியாகவும், கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5147 கனஅடியாகவும் உள்ளது.
- சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு பெங்களூரில் இருந்தும், சேலத்தில் இருந்து கொச்சிக்கும் விமான சேவையை ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
- சேலத்தில் இருந்து சென்னை வழியாக ஐதராபாத்திற்கு அக்டோபர் மாத இறுதியில் இண்டிகோ நிறுவனம் விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்:
சேலத்திலிருந்து சென்னைக்கு மத்திய அரசின் உதய் திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விமான சேவை தொடங்கப்பட்டது. ஆனால் பொதுமக்களிடம் போதுமான வரவேற்பு இல்லாததால் தற்போது அந்த விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அந்த விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டுமென தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மேலும் சேலத்தில் இருந்து வெளியூருக்கும், வெளியூர்களிலிருந்து சேலத்திற்கும் விமானங்கள் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சேலம் பார்த்திபன் எம்.பி., பலமுறை பாராளுமன்றத்தில் கோரிக்கைகளை முன் வைத்தார். அதன் தொடர்ச்சியாக அடுத்த மாதம் 16-ந்தேதி முதல் சேலத்தில் இருந்து மீண்டும் விமானம் இயக்கப்படுகிறது. சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு பெங்களூரில் இருந்தும், சேலத்தில் இருந்து கொச்சிக்கும் விமான சேவையை ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும், சேலத்தில் இருந்து சென்னை வழியாக ஐதராபாத்திற்கு அக்டோபர் மாத இறுதியில் இண்டிகோ நிறுவனம் விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள், முக்கிய நபர்கள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மகுடஞ்சாவடி
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் கள ஆய்வு மேற்கொண்டார்.அப்போது மருத்துவமனைக்கு வருகை புரியும் வெளி நோயாளிகள், உள் நோயாளிகள் எண்ணிக்கை மற்றும் அறுவை சிகிச்சை விபரம் எந்த நோய்க்காக அதிக பேர் வருகிறார்கள் என்ற புள்ளி விபரம் உள்ளிட்டவை குறித்தும், மக்களை தேடி மருத்துவம் குறித்தும், அறுவை சிகிச்சை அரங்கு உள்ளிட்டவை ஆய்வு மேற்கொண்டார்.இதனைத் தொடர்ந்து மருத்துவமனை அருகே ரூ.50 லட்சம் மதிப்பில் வட்டார மருத்துவ ஆய்வகம் கட்டிடப் பணி நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், மகுடஞ்சாவடி வட்டார மருத்துவ அலுவலர் முத்துசாமி உள்ளிட்டர் உடன் இருந்தனர்.
- திடீரென கலெக்டர் கார் முன்பு அமர்ந்து தர்ணா
- மாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை
சேலம்
சேலம் ஜான்சன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார். அப்போது திடீரென கலெக்டர் கார் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து போலீசார் அவரை மீட்டு பேச்சுவார்த்தை நடத்தி மனு கொடுக்க ஏற்பாடு செய்தனர்.
அப்போது சரஸ்வதி கூறியதாவது:-
ஜான்சன் பேட்டை மாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்த போது அங்கு அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றியது.இந்த நிலையில் அவர்களை ஒன்று கூடி கோவில் திருவிழா நடத்தலாம் என நான் தெரிவித்தேன். அங்கிருந்த சிலர் என்னை தகாத வார்த்தையில் பேசி மிரட்டினர் .இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்த போது அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதனால் வீட்டிற்கு சென்ற நான் மண் எண்ணையை உடலில் ஊற்றியபடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றேன்.
அங்கு வந்த அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கினார். பின்னர் என் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். 7 நாள் சிறையில் இருந்த நான் ஜாமீனில் வெளியே வந்தேன்.பொய் வழக்கு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னைக்குச் சென்று புகார் தெரிவித்த நிலையில் அவர்கள் மீண்டும் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.கடந்த 4 மாதமாக போலீஸ் நிலையத்திற்கு சென்று முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கலெக்டர் தலையிட்டு என்மீது போடப்பட்ட பொய் புகார் மீது உரிய விசாரனை நடத்தி தன்னை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீதும் பொய்யான புகார் கொடுத்த கோவில் தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






