என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பூர் வியாபாரியிடம் ரூ.50 லட்சத்தை பறித்து சென்ற கும்பல்
- வெங்கடேசன் புற்றுநோய்க்கு பயன்படுத்தும் செங்காந்தள் விதை வியாபாரம் செய்து வருகிறார்.
- இன்று அதிகாலை 4.30 மணியளவில் வியாபாரம் சம்பந்தமாக திருப்பூரில் இருந்து சேலம் மாவட்டம் ஓமலூருக்கு வந்தார்.
சேலம்
திருப்பூர் காங்கேயம் ரோடு வெங்கடாசலம் கவுண்டர் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் வெங்கடேசன் (37). இவர் புற்றுநோய்க்கு பயன்படுத்தும் செங்காந்தள் விதை வியாபாரம் செய்து வருகிறார்.இவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் வியாபாரம் சம்பந்தமாக திருப்பூரில் இருந்து சேலம் மாவட்டம் ஓமலூருக்கு வந்தார். அங்கு பைனான்சியர் ஒருவரிடம் ரூ.50 லட்சம் செல்லாத பழைய 500 ரூபாய் நோட்டுகளை கடனாக பெற்றார்.
பின்னர் அரியானூர் பகுதியில் உள்ள பிரபல ஓட்டல் எதிரில் உள்ள காபி கடைக்கு சென்றுள்ளார். அங்கு வெங்கடேசனின் நண்பர்களான ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த வாஞ்சிநாதன், திருப்பூரை சேர்ந்த குமார் மற்றும் அவரது மகன் ஆகியோர் இருந்துள்ளனர்.அப்போது அவர்கள் வெங்கடேசன் வைத்துள்ள பழைய 500 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 500 ரூபாய் நோட்டுகளை வாங்கி தருவதாகவும், இதற்கு ரூ.5 லட்சம் கமிஷன் தருவார்கள் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து வெங்கடேசன் கையில் வைத்திருந்த பணத்துடன் அவர்களுடன் சென்றுள்ளார்.பணத்தை மாற்றுவதற்காக இரும்பாலை மாரமங்க லத்துப்பட்டி பகுதி 4 பேரும் வந்தனர். அப்போது அங்கு 2 காரில் வந்த சிலர் வெங்கடேசன் மற்றும் நண்பர்களிடம் தங்களை போலீஸ் என தெரிவித்தனர். மேலும் அதில் ஒருவர் போலீஸ் சீருடையில் இருந்ததாகவும் தெரிகிறது.அப்போது அவர்கள் நீங்கள் வைத்திருக்கும் பணம் கருப்பு பணம் எனக்கூறி வெங்கடேசன் உள்பட 4 பேரையும் விசாரணைக்கு வருமாறு அழைத்து சென்றனர். இரும்பாலை கோவிட் சென்டர் அருகே கார் வந்தபோது பணத்தை பறித்துக் கொண்ட அந்த கும்பல் வெங்கடேசனை மட்டும் அங்கேயே இறக்கிவிட்டு சென்றனர்.இதனால் அதிர்ச்சி யடைந்த வெங்கடேசன் இதுகுறித்து தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே சம்பவம் நடந்த பகுதி சேலம் மாநகரம் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட அரியானூர் பகுதி என்பதால் இதுகுறித்து துைண கமிஷனர் மதிவாணன், வெங்கடேசனிடம் பழைய ெசல்லாத 500 ரூபாய் நோட்டுகள் யாரிடம் இருந்து பெறப்பட்டது, எதற்காக அதை நீங்கள் வாங்கி சென்றீர்கள் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் வெங்கடேசன் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து வருகிறார். எனவே 50 லட்சமும் செல்லாத பழைய 500 ரூபாய் நோட்டுகளா அல்லது புதிய நோட்டுகளை கடனாக பெற்றுக் ெகாண்டு திசை திருப்ப பழைய ரூபாய் நோட்டுகள் என்று நாடகமாடுகிறார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.






