என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 400 ஏக்கர் பரப்பளவு உள்ள எடப்பாடி பெரிய ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மெதுவாக சென்று வருகின்றனர்.
தொடர் மழையால் எடப்பாடி பெரிய ஏரி நிரம்பியது
- தாழ்வான பகுதிகள் மற்றும் வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கியது.
- எடப்பாடி பகுதியில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
பரவலாக மழை: குறிப்பாக சங்ககிரி தலைவாசல், எடப்பாடி, தம்மம்பட்டி உள்பட பல பகுதிகளில் இடி, மின்ன லுடன் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைக ளில் தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கியது.எடப்பாடி பகுதியில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது . நேற்றிரவும் எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்தது எடப்பாடியில் பெய்த தொடர் மழையால் பழைய எடப்பாடி பகுதியில் 350 ஏக்கர் பரப்பளவுள்ள பெரிய ஏரி நிரம்பி வழி கிறது. இதனால் எடப்பாடி, ேதவகவுண்டனூர் பகுதியில் உள்ள 1000-த்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல மாவட்டத் தில் பெய்து வரும் தொடர் மழையால் 100-க்கும் மேற் பட்ட ஏரி குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. விவசாய நிலங்கள் எங்கு பார்த்தாலும் பச்சை பசே லென காட்சி அளிக்கிறது.32.6 மி.மீ. பதிவு :மாவட்டத்தில் அதிக பட்சமாக சங்கிரியில் 15.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தலைவாசல் 8, எடப்பாடி 6, தம்மம்பட்டி 3 , சேலம் 0.2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 32.6 மி.மீ. மழை பெய்துள்ளது.






