என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிற்சாலைகளின் மருத்துவ அலுவலர்களுக்கு தொழில்வழி கருத்தரங்கு
- சமீப காலங்களில் எந்திரங்களின் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் பெருமளவில் வளர்ச்சி
- இன்றைய காலகட்டத்தில் அதிக தொழிற்சாலைகளில் அபாயகரமான பணிகள் வளர்ந்து வரும் சூழ்நிலை
சேலம்:
தமிழ்நாடு அரசு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் ஓசூர் தேசிய மனிதவள வளர்ச்சி குழுமம் இணைந்து தொழிற்சாலையின் மருத்துவ அலுவலர்களுக்கான தொழில்வழி சுகாதாரம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு ஓசூர் அசோக் லேலாண்ட் எம்.டி.சி. கூட்டம் அரங்கில் நடைபெற்றது.தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் செந்தில்குமார் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில், தொழிலாளர்களின் நலனை காப்பது தலையாய கடமை. சமீப காலங்களில் எந்திரங்களின் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் பெருமளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் அதிகளவில் விபத்துக்களும் குறைந்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் அதிக தொழிற்சாலைகளில் அபாயகரமான பணிகள் வளர்ந்து வரும் சூழ்நிலையில் தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதற்காக தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் தமிழ்நாடு தொழிற்சாலைகள் விதிகளில் வரையறுக்கப்பட்டு உள்ளவாறு தொழில்வழி சுகாதார மையம் ஏற்படுத்தப்பட்டு தொழிலாளர்களின் நலன் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஓசூர் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் இக்கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். மேலும் ெசன்னை இந்தியன் அடிட்டிவ் லிட் சீனியர் மேனேஜர் மற்றும் அசோக் லேலாண்ட் முதன்மை மனிதவள அலுவலர் ஆகியோரும் இக்கருத்தரங்கில் சிறப்புரையாற்றினர்.தொழில் வழி மற்றும் பணி சூழல் பாதுகாப்பில் மருத்துவர்களின் செயல்பாடு குறித்து தொழிற்சாலை மருத்துவ அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இக்கருத்தரங்கில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலைகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் தேசிய மனிதவள வளர்ச்சி குழுமம் பழனிகுமார் நன்றி கூறினார்.






