என் மலர்
சேலம்
- ரெயில் கருப்பூர் ரெயில் நிலையம் அருகே வந்த போது எஸ்.1 கோச்சில் கழிவறை அருகில் சோதனை செய்தபோது கருப்பு கலர் சோல்டர் பேக் தனியாக கிடந்தது.
- போலியாக சப்-இன்ஸ்பெக்டர் என்று அடையாள அட்டை தயாரித்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
சேலம்:
சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் அதிக அளவில் கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தப்படுவதும் அதனை தடுக்க ரெயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டு கைது செய்வதும் வாடிக்கையாகி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சேலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜு மற்றும் போலீசார் முனுசாமி, பிரபாகரன், ஆகியோர் ரெயிலில் போதைப் பொருள்கள் கடத்தப்படுகிறதா? என தன்பாத் விரைவு ரெயிலில் காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து சேலம் வரை இன்று அதிகாலை சோதனை செய்தனர்.
அப்போது ரெயில் கருப்பூர் ரெயில் நிலையம் அருகே வந்த போது எஸ்.1 கோச்சில் கழிவறை அருகில் சோதனை செய்தபோது கருப்பு கலர் சோல்டர் பேக் தனியாக கிடந்தது. அதை திறந்து பார்த்த போது அதில் 5 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து அதன் அருகில் இருந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக கூறினார்.
இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கஞ்சா கடத்தி வந்ததை ஒத்துக்கொண்டார். மேலும் அவர் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள நடூர் திரிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த ஜப்ரில் என்பவரது மகன் அப்துல் முஷீத் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் அவரை சோதனை செய்தபோது ஒரு அடையாள அட்டை இருந்தது. அதில் அப்துல் முஷீத் சப்-இன்ஸ்பெக்டர் என்று இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் கேட்டதற்கு போலியாக சப்-இன்ஸ்பெக்டர் என்று அடையாள அட்டை தயாரித்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சித்ரா (50). இவர்களது மகன் தினகரன் (23), மருமகள் தீபிகா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
- இன்று காலை பார்த்த போது சித்ரா வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை சுந்தர கணபதி தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி சித்ரா (50). இவர்களது மகன் தினகரன் (23), மருமகள் தீபிகா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று இரவு வழக்கம் போல் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர். இந்த நிலையில் இன்று காலை பார்த்த போது சித்ரா வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சித்ராவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சித்ரா கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஸ்டெல்லா (35). வாடகை வீட்டில் வசித்து வரும் இவர்களது வீட்டு வாசலில் இருந்த காலணியை அருகில் வசிக்கும் கணேசன் மனைவி மகாலட்சுமி மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டதை தட்டி கேட்டுள்ளார்.
- ஆத்திரம் அடைந்த கணவனும் மனைவியும் ஸ்டெல்லாவிடம் தகராறு ஈடுபட்டு கத்தியால் கையில் குத்தி உள்ளனர்.
சேலம்:
சேலம் செவ்வாய்ப்பேட்டை கந்தசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி ஸ்டெல்லா (35). வாடகை வீட்டில் வசித்து வரும் இவர்களது வீட்டு வாசலில் இருந்த காலணியை அருகில் வசிக்கும் கணேசன் மனைவி மகாலட்சுமி மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டதை தட்டி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கணவனும் மனைவியும் ஸ்டெல்லாவிடம் தகராறு ஈடுபட்டு கத்தியால் கையில் குத்தி உள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த ஸ்டெல்லா சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாரியப்பன் (55). இவர் அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
- மாரியப்பன் ஏன் இங்கே உட்கார்ந்து மது குடிக்கிறீர்கள்? மேலும் காலிபாட்டில்களை உடைத்து விட்டு செல்கிறீர்கள்? என தட்டி கேட்டுள்ளார்.
சேலம்:
சேலம் வீராணம் அருகே உள்ள தாதம்பட்டி காந்திநகர் பகுதி சேர்ந்தவர் மாரியப்பன் (55). இவர் அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன் தினம் மாலை அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் சுரேஷ் (23), லோகநாதன் மகன் கோபி (32), மற்றும் ரவி, ஆறுமுகம் ஆகியோர் சுடுகாட்டில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர்.
இதைக் கண்ட மாரியப்பன் ஏன் இங்கே உட்கார்ந்து மது குடிக்கிறீர்கள்? மேலும் காலிபாட்டில்களை உடைத்து விட்டு செல்கிறீர்கள்? என தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் மாரியப்பனை தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் மற்றும் கோபியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய ரவி மற்றும் ஆறுமுகத்தை வலை வீசி தேடி வருகிறார்கள்.
- ஹரிபிரியா (17). இவருக்கும் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கவுதம் (22) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
- 1.1.2023 அன்று திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் நேதாஜி நகரிலேயே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.
சேலம்:
சேலம் களரம்பட்டி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரிபிரியா (17). இவருக்கும் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கவுதம் (22) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து காதலித்து வந்த இருவரும் கடந்த 1.1.2023 அன்று திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் நேதாஜி நகரிலேயே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ஹரிபிரியா நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கிச்சிப்பாளையம் போலீசார் ஹரிபிரியாவின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்வினியோகம் இருக்காது.
- இத்தகவலை மின்செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
சேலம்:
கருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுபதி, புதூர், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டுக்குட்டப்பட்டி, கருத்தா னூர், சக்கர செட்டிப்பட்டி, செக்காரப்பட்டி, புளியம்பட்டி, நாராயணம்பா ளையம், ஆணைகவுண்டம்பட்டி, ஹவுசிங்போர்டு, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை, வெத்தலைக்காரனூர், கோட்டக்கவுண்டம்பட்டி, பாகல்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், புதிய பஸ் நிலையம், 5 ரோடு, குரங்குசாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதி நகர், சீனிவாச நகர், ரெட்டியூர் மற்றும் நகரமலை அடிவாரம் ஆகிய பகுதியில் மின் விநியோகம் இருக்காது. இத்த கவலை செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.
இதே போல் உடையாபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 10-ந்் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் 5 மணி வரை உடையாபட்டி, அம்மாபேட்டை காலனி, வித்யா நகர், அம்மாபேட்டை, காந்தி மைதானம், பொன்னம்மா பேட்டை, தில்லை நகர், அயோத்தியாபட்டணம், வரகம்பாடி, கந்தாஸ்தரமம், தாதம்பட்டி, மேட்டுப்பட்டி தாதனூர், வீராணம், குப்பனூர், வலசையூர் ஆகிய பகுதியில் மின்வினியோகம் இருக்காது. இத்தகவலை மின்செயற்பொறியாளர் குணவர்தினி தெரிவித்துள்ளார்.
- விபத்தில் 2 பள்ளி பஸ்களிலும் பயணித்த மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- ஏத்தாப்பூர் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இன்று காலை வழக்கம் போல இப்பள்ளியின் 2 பஸ்கள் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பெரிய கிருஷ்ணாபுரம் அருகே அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தது.
சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை பஸ்கள் கடக்க முயன்றபோது ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்று, இந்த 2 பள்ளி பேருந்துகள் மீதும் ஒரே நேரத்தில் பலமாக மோதியது.
இந்த விபத்தில் 2 பள்ளி பஸ்களிலும் பயணித்த மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து சென்று பள்ளி குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தனியார் பள்ளி பஸ்கள் விபத்தானது குறித்து தகவல் வெளியானதால் விபத்து நடந்த பகுதியில் பெற்றோர்கள் குவிந்ததால் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
ஏத்தாப்பூர் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நங்கவள்ளி துணை மின் நிலையத்தில் நாளை 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது.
- இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சேலம்:
நங்கவள்ளி துணை மின் நிலையத்தில் நாளை 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நங்கவள்ளி, வனவாசி, வீரக்கல், சுரப்பள்ளி, குட்டப்பட்டி, சோரகை, மானாத்தாள், குப்பம்பட்டி, சீரங்கனூர், மல்லிக்குட்டை, பைப்பூர், பெரிய வனவாசி, சாணாரப்பட்டி, தானாவதியூர், செல்லக்கல் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- நாளை மறுநாள் 12-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது.
- இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சேலம்:
தாரமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் 12-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாரமங்கலம்,காடம்பட்டி, சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி, அத்திராம்பட்டி, பவளத்தானூர், அத்திக்காட்டானூர், பெரியாம்பட்டி,எம். செட்டிப்பட்டி, துட்டம்பட்டி, பாப்பம்பட்டி, சின்னப்பம்பட்டி, சமுத்திரம், பூக்கார வட்டம், கருக்குப்பட்டி, வெள்ளாளபுரம், வெள்ளக்கல்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
- இந்த நிலையில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏற்காட்டில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் புழுக்கத்தில் தவித்து வந்தனர்.
திடீர் மழை
இந்த நிலையில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏற்காட்டில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. விடுமுறை நாளான நேற்று அதிக அளவில் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
இதே போல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஆத்தூர், கெங்கவல்லி, மேட்டூர், தம்மம்பட்டி, காடையாம்பட்டி உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குளிர்ந்த காற்று வீசியது.
67.4 மி.மீ. பதிவு
மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 33.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆத்தூர் 13, கெங்கவல்லி 10, மேட்டூர் 6.2, தம்மம்பட்டி 4, காடையாம்பட்டி 1 மி.மீ என மாவட்டம் முழுவதும் 67.4 மி.மீ. மழை பெய்துள்ளது.
- சேலத்தில் நாளுக்கு நாள் வாகனங்கள் பயன்படுத்து வோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது.
- போக்குவரத்து விதி மீறல்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
சேலம்:
சேலத்தில் நாளுக்கு நாள் வாகனங்கள் பயன்படுத்து வோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது. அதே நேரத்தில் போக்குவரத்து விதி மீறல்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
புகார்
இந்த நிலையில் தனியார் பஸ்களில் அதிக ஒலியை எழுப்பக்கூடிய ஏர்ஹா ரன்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்தன.
இதையடுத்து சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) தாமோதரன் தலைமையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் சதாசிவம், செந்தில், ராமரத்தினம், மாலதி ஆகியோர் இன்று காலை சேலம் புதிய பஸ் நிலையத்தில் சோதனை நடத்தினர்.
ரூ.10 ஆயிரம் அபராதம்
இதில் 50 -க்கும் மேற்பட்ட பஸ்களின் ஏர்ஹாரன் சோதனை செய்யப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) தாமோதரன் கூறியதாவது:-
சேலம் மாவட்டம் மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர் ஆகிய பகுதிகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்களை தனியார் பஸ்கள் மட்டுமின்றி, பிற வாகனங்களில் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. அதன் அடிப்ப டையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பக்கூடிய ஏர்ஹாரன் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறி பயன்படுத்துவது தெரிய வந்தால் சம்பந்தப் பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து விபசாரம் நடப்பதாக சேலம் மாவட்ட ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. அமல அட்மின்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ்மோகன் மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு வருடந்தோரும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
விபசார புகார்
ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து விபசாரம் நடப்பதாக சேலம் மாவட்ட ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. அமல அட்மின்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையில் ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ்மோகன் மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ஏற்காட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் சொகுசு பங்களாக்களில் அதிரடி தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதில் ஏற்காடு பக்கோடா பாயிண்ட் செல்லும் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சோதனை செய்ததில் மூன்று இளம் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் மீட்டனர்.
2 பேர் கைது
மேலும் இது சம்பந்தமாக அவர்களிடம் டி.எஸ்.பி. அமல அட்மின் மற்றும் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு மேலும் சம்பந்தப்பட்ட கட்டிடத்துக்கு டி.எஸ்பி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
இந்த ரிசார்ட்டை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த ஏற்காட்டை சேர்ந்த கார்த்திக் (35) மற்றும் அந்த ரிசார்ட் மேலாளர் ரகுநாத் (20) ஆகியோைர கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்கள் 3 பேரையும் சேலம் கோர்ட் வளாக த்தில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
எச்சரிக்கை
ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என டி.எஸ்.பி. அமல அட்மின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.






