search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்ககிரி அருகே கல்குவாரியில் அனுமதியின்றி ரூ.8.45 லட்சம் மதிப்பிலான சுண்ணாம்புக்கல் வெட்டி எடுப்பு
    X

    சங்ககிரி அருகே கல்குவாரியில் அனுமதியின்றி ரூ.8.45 லட்சம் மதிப்பிலான சுண்ணாம்புக்கல் வெட்டி எடுப்பு

    • மூன்றரை ஏக்கர் நிலத்தில் சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்க கடந்த 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந் தேதி முதல் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி வரை 20 ஆண்டுகளுக்கு குத்தகை உரிமம் பெற்று இருந்தார்.
    • வெங்கடாசலம் தொடர்ந்து அனுமதியின்றி சுண்ணாம்பு கற்கள் வெட்டி எடுப்பதாக சென்னை புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனருக்கு தகவல் கிடைத்தது.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அன்னதானப்பட்டி கிராமம் பூத்தாளக்குட்டையை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர், அதே பகுதியில் மூன்றரை ஏக்கர் நிலத்தில் சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்க கடந்த 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந் தேதி முதல் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி வரை 20 ஆண்டுகளுக்கு குத்தகை உரிமம் பெற்று இருந்தார்.

    இந்த நிலையில் வெங்கடாசலம் தொடர்ந்து அனுமதியின்றி சுண்ணாம்பு கற்கள் வெட்டி எடுப்பதாக சென்னை புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனருக்கு தகவல் கிடைத்தது.

    ஆய்வு

    இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி சேலம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் நேரில் சென்று தணிக்கை மேற்கொண்டார். அதில் உரிய நடைசீட்டு அனுமதியின்றி குத்தகை பரப்பிற்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் சுரங்கப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து வெட்டி எடுக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் கனிமத்தினை அளவீடும் பணி மேற்கொள்ளப்பட்டதில் உரிய நடைசீட்டு அனுமதியின்றி குத்தகை பரப்பிற்குள் 816.04 டன் சுண்ணாம்பு கற்களும் மற்றும் குத்தகை பரப்பிற்கு வெளியே 1,465.62 டன் என மொத்தம் 2281.66 டன் சுண்ணாம்பு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    வழக்கு பாய்ந்தது

    இதையடுத்து சுரங்க குத்தகை அனுமதியின்றி சுண்ணாம்பு கற்கள் வெட்டி எடுத்தமைக்கும், அரசுக்கு ரூ. 8 லட்சத்து 45ஆயிரம் வருவாய் இழப்பு ஏற்படுத்திய குற்றத்திற்காகவும் வெங்கடாசலம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் புவியியல் மற்றும் சுரங்கத் துறை தனி தாசில்தார் செல்வகுமார் சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் வெங்கடாஜலத்தின் மீது சங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×