என் மலர்

  நீங்கள் தேடியது "New girl"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சாணார்பட்டி பகுதியில் புதுப்பெண் பணத்துடன் மாயமானார்.
  • வீட்டில் இருந்த 1 லட்சம் 40 பணமும் காணவில்லை.

  சேலம்:

  சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 48). இவருடைய மனைவி இறந்து விட்டார்.

  இந்த நிலையில் 2-வது திருமணம் செய்வதற்காக செந்தில் ஜோடி என்ற ஆப்பில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண் தொடர்பு கொண்டு பேசினார். இருவரும் தொடர்ந்து பேசி பழகி வந்தனர். கடந்த ஜூன் 24-ம் தேதி கவிதா சேலம் வந்தார்.

  பின்னர் செந்தில் - கவிதா இருவரும் ஒரு கோவிலில் வைத்து திருமண செய்து கொண்டனர். அப்போது அவருக்கு செந்தில் கம்மல், கொலுசு வாங்கி கொடுத்தார். அன்று இரவு அவருடன் தங்கினார். காலையில் எழுந்து பார்த்த போது கவிதாவை காணவில்லை. வீட்டில் இருந்த 1 லட்சம் 40 பணமும் காணவில்லை. தொடர்ந்து செந்தில் அவரை தேடி வந்தார். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

  இதுகுறித்து செந்தில் ஜலகண்டாபுரம் போலீஸ் புகார்செய்தார்.போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து மாயமான கவிதாவை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரை அருகே புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்
  • திண்டுக்கல்லை சேர்ந்த நாகபாண்டி என்பவரை அங்காள ஈஸ்வரி திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

  மதுரை,

  மதுரை அருகே உள்ள பொதும்பு கீழத்தெருவை சேர்ந்தவர் அங்காள ஈஸ்வரி (வயது 19). பிளஸ்-2 படித்துள்ளார். திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் உறவினர் கணேசன் மனைவி நாக லட்சுமி என்பவரின் செருப்பு கடையில் வேலை பார்த்தார்.

  அங்காள ஈஸ்வரி சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். இதுகுறித்து நாகலட்சுமி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான அங்காள ஈஸ்வரியை தேடி வந்தனர்.

  இதற்கிடையே திண்டுக்கல்லை சேர்ந்த நாகபாண்டி என்பவரை அங்காள ஈஸ்வரி திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. கணவன்-மனைவி இருவரும் ஆலம்பட்டிக்கு வந்தனர்.

  அப்போது நாகபாண்டி அங்காள ஈஸ்வரியை உற வினர் வீட்டில் ஒப்படைத்து விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் அங்காள ஈஸ்வரி குடும்பத்தினரை நாகலட்சுமி தொடர்பு கொண்டார். அப்போது அங்காள ஈஸ்வரி குடும்பத்தினர் இன்று இரவு மட்டும் அவள் உங்கள் வீட்டில் இருக்கட்டும். நாளை அழைத்துச் செல்கிறோம் என்று தெரிவித்தனர்.

  இதனை தொடர்ந்து அங்காள ஈஸ்வரி, உறவினர் நாகலட்சுமி வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அவருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. அங்காளஈஸ்வரி நேற்று காலை அந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுதொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேலம் மாவட்டம் மல்லூர் பச்சனம் பாளையம் பகுதியில் கல்லூரிக்கு சென்ற புதுப்பெண் மாயமானார்.
  • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.

  சேலம்:

  சேலம் மாவட்டம் மல்லூர் பச்சனம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார்.

  இவர் தனது உறவினர் பிரியா(வயது 20) என்பவரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

  பிரியா ஆண்டாகளூர் கேட் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 10-ந் தேதி வழக்கம் போல் காலையில் கல்லூரிக்கு சென்றார். பின்னர் பிரியா மாலை வீடு திரும்பவில்லை.

  இதனால் பதறிபோன உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

  அவர் என்ன ஆனார் ? என இதுவரையிலும் தெரியவில்லை. இதையடுத்து மல்லூர் போலீசில் நேற்று புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உளுந்தூர்பேட்டையில் திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
  • சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர்.

  கள்ளக்குறிச்சி:

  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பின்னலவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரகோத்தம்மன். அவரது மனைவி காயத்திரி (வயது 22). இவர்களுக்கு திருமணமாக 6 மாதம் ஆகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று காயத்திரிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய காயத்திரி அலறிதுடித்தார். சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். உயிருக்கு போராடிய அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நிலைமை மோசமானதால் உடனே காயத்திரி சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் இறந்தார். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் திடீரென இறந்தார்.
  • விழுப்புரம் சென்று அங்கு ஒரு ஓட்டலில் நூடுல்ஸ் வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் சாப்பிட்டு உள்ளனர்.

  விழுப்புரம்:

  விழுப்புரம் அருகே உள்ளஅன்னியூரை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மனைவி பிரதீபா (வயது 22). இவர்கள் கடந்த 2 வருடமாக காதலித்து வந்தனர். கடந்த 13. 6. 2022 ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் விழுப்பு ரம் சென்று அங்கு ஒரு ஓட்டலில் நூடுல்ஸ் வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் சாப்பிட்டு உள்ளனர். இந்நிலையில் இரவு 11.30 மணிக்கு பிரதீபாவுக்கு வாந்தி மயக்கம் ஏற்ப ட்டுள்ளது. உடனடியாக அவரை அதே ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று காட்டும் போது டாக்டர்புட் பாய்சன் என்று கூறியதாக தெரி கிறது. இதனால் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து கஞ்சனூர் போலீ சார் விசாரணை செய்த வருகிறார்கள்

  ×