என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கல்லூரிக்கு சென்ற புதுப்பெண் மாயம்
  X

  கல்லூரிக்கு சென்ற புதுப்பெண் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேலம் மாவட்டம் மல்லூர் பச்சனம் பாளையம் பகுதியில் கல்லூரிக்கு சென்ற புதுப்பெண் மாயமானார்.
  • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.

  சேலம்:

  சேலம் மாவட்டம் மல்லூர் பச்சனம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார்.

  இவர் தனது உறவினர் பிரியா(வயது 20) என்பவரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

  பிரியா ஆண்டாகளூர் கேட் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 10-ந் தேதி வழக்கம் போல் காலையில் கல்லூரிக்கு சென்றார். பின்னர் பிரியா மாலை வீடு திரும்பவில்லை.

  இதனால் பதறிபோன உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

  அவர் என்ன ஆனார் ? என இதுவரையிலும் தெரியவில்லை. இதையடுத்து மல்லூர் போலீசில் நேற்று புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×