உளுந்தூர்பேட்டையில் திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

உளுந்தூர்பேட்டையில் திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர்.
உளுந்தூர்பேட்டையில் திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பின்னலவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரகோத்தம்மன். அவரது மனைவி காயத்திரி (வயது 22). இவர்களுக்கு திருமணமாக 6 மாதம் ஆகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று காயத்திரிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய காயத்திரி அலறிதுடித்தார். சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். உயிருக்கு போராடிய அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நிலைமை மோசமானதால் உடனே காயத்திரி சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் இறந்தார். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com