என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருமணம் செய்த புதுப்பெண் பணத்துடன் மாயம்
  X

  திருமணம் செய்த புதுப்பெண் பணத்துடன் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சாணார்பட்டி பகுதியில் புதுப்பெண் பணத்துடன் மாயமானார்.
  • வீட்டில் இருந்த 1 லட்சம் 40 பணமும் காணவில்லை.

  சேலம்:

  சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 48). இவருடைய மனைவி இறந்து விட்டார்.

  இந்த நிலையில் 2-வது திருமணம் செய்வதற்காக செந்தில் ஜோடி என்ற ஆப்பில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண் தொடர்பு கொண்டு பேசினார். இருவரும் தொடர்ந்து பேசி பழகி வந்தனர். கடந்த ஜூன் 24-ம் தேதி கவிதா சேலம் வந்தார்.

  பின்னர் செந்தில் - கவிதா இருவரும் ஒரு கோவிலில் வைத்து திருமண செய்து கொண்டனர். அப்போது அவருக்கு செந்தில் கம்மல், கொலுசு வாங்கி கொடுத்தார். அன்று இரவு அவருடன் தங்கினார். காலையில் எழுந்து பார்த்த போது கவிதாவை காணவில்லை. வீட்டில் இருந்த 1 லட்சம் 40 பணமும் காணவில்லை. தொடர்ந்து செந்தில் அவரை தேடி வந்தார். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

  இதுகுறித்து செந்தில் ஜலகண்டாபுரம் போலீஸ் புகார்செய்தார்.போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து மாயமான கவிதாவை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×