புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை

மதுரை அருகே புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்திண்டுக்கல்லை சேர்ந்த நாகபாண்டி என்பவரை அங்காள ஈஸ்வரி திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.
புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை
Published on

மதுரை,

மதுரை அருகே உள்ள பொதும்பு கீழத்தெருவை சேர்ந்தவர் அங்காள ஈஸ்வரி (வயது 19). பிளஸ்-2 படித்துள்ளார். திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் உறவினர் கணேசன் மனைவி நாக லட்சுமி என்பவரின் செருப்பு கடையில் வேலை பார்த்தார்.

அங்காள ஈஸ்வரி சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். இதுகுறித்து நாகலட்சுமி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான அங்காள ஈஸ்வரியை தேடி வந்தனர்.

இதற்கிடையே திண்டுக்கல்லை சேர்ந்த நாகபாண்டி என்பவரை அங்காள ஈஸ்வரி திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. கணவன்-மனைவி இருவரும் ஆலம்பட்டிக்கு வந்தனர்.

அப்போது நாகபாண்டி அங்காள ஈஸ்வரியை உற வினர் வீட்டில் ஒப்படைத்து விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் அங்காள ஈஸ்வரி குடும்பத்தினரை நாகலட்சுமி தொடர்பு கொண்டார். அப்போது அங்காள ஈஸ்வரி குடும்பத்தினர் இன்று இரவு மட்டும் அவள் உங்கள் வீட்டில் இருக்கட்டும். நாளை அழைத்துச் செல்கிறோம் என்று தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அங்காள ஈஸ்வரி, உறவினர் நாகலட்சுமி வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அவருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. அங்காளஈஸ்வரி நேற்று காலை அந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com