என் மலர்tooltip icon

    சேலம்

    • கடந்த 8-ந் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (47). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 8-ந் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்திய போது ராமநாதன் குடும்பப் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்ததும் அதனால் ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை செய்ததும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜங்ஷன் முருகன் கோவில் அருகே கடந்த 6-ந் தேதி சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
    • இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் செவ்வாய்பேட்டை சண்முகா ஜங்ஷன் முருகன் கோவில் அருகே கடந்த 6-ந் தேதி சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்த விவரங்கள் ஏதும் தெரியவில்லை. அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் எருமாபாளையத்தை சேர்ந்தவர் தமிழழகன் (32), இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர்.
    • மகள் காலாண்டு தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்தது தொடர்பாக தமிழழகன் கேட்டதால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருேக உள்ள காக்காவேரி பகுதியை சேர்ந்தவர் ஜெயலெட்சுமி (32), இவருக்கும் தருமபுரியை சேர்ந்த நாகராஜன் என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 14 மற்றும் 11 வயதுகளில் 2 மகள்கள் உள்ளனர். இருவரும் அம்மாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளிகளில் 9 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன்-மனைவி பிரிந்தனர்.

    2-வது திருமணம்

    சேலம் எருமாபாளையத்தை சேர்ந்தவர் தமிழழகன் (32), இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர். தமிழழகனும் மனைவியை பிரிந்து வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்த போது ஜெயலெட்சுமிக்கும், தமிழழ கனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு சேலம் அம்மாப்பேட்டை பூவாத்தாள் தெருவில் மகள்களுடன் வசித்து வந்தனர்.

    நேற்று மாலை குடிபோதையில் வீட்டிற்கு வந்த தமிழழகன், ஜெயலெட்சுமியுடன் தகரா றில் ஈடுபட்டார். அப்போது மகள் காலாண்டு தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்தது தொடர்பாக தமிழழகன் கேட்டதால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஜெயலெட்சுமி குக்கர் மூடியால் தமிழழகனை தாக்கினார். இதையடுத்து ஜெயலெட்சுமியை தமிழழகனும் தாக்கினார்.

    தற்கொலை

    இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயலெட்சுமி சமையல் அறையில் ஏற்கனவே உடைத்து தயாராக வைத்திருந்த பீ ர் பாட்டிலை எடுத்து நான் இருந்தால் தான் பிரச்சினை, நான் செத்து விடுகிறேன் என்ற கூறிய படி கழுத்தில் பீர் பாட்டிலால் தனக்கு தானே குத்தி கொண்டார்.

    இதனை பார்த்த தமிழழகனும், அவரது 2 மகள்களும் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். பின்னர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதிக அளவில் ரத்தம் வெளியேறி அவர் சிறிது நேரத்தில் துடி துடித்து சம்பவ இடத்திேலயே இறந்து விட்டார்.

    தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தமிழழகன் மற்றும் 2 மகள்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது-

    தமிழழகன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து ஜெயலெட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் ஜெயலெட்சுமியின் மூத்த மகள் மதிப்பெண் குறைந்தது குறித்து தமிழழகன் நேற்று கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் தமிழழகனும், ஜெயலெட்மியும் மாறி, மாறி தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் உடைந்த ஜெயலெட்சுமி பீர் பாட்டிலை எடுத்து தனக்கு தானே கழுத்தில் குத்தி தற்கொலை செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து ேபாலீசார் தமிழழகனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் கோட்டையில் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பில் சேலம் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் ஜெயச்சந்திரன், பன்னீர்செல்வம், அழகிரி, மோகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சேலம்:

    சேலம் கோட்டையில் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பில் சேலம் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் ஜெயச்சந்திரன், பன்னீர்செல்வம், அழகிரி, மோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 6-வது ஊதிய குழுவில் கால்நடை ஆய்வாளர் நிலை 1 மற்றும் முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்படாத நியாயமான ஊதியத்தை பெற்றிட சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை சங்க கோரிக்கையின் வழி அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கால்நடை ஆய்வாளர் சங்க நீண்ட நாள் கோரிக்கையான முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு அடுத்த கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும். விடுபட்ட அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    • ஈரடுக்கு பஸ் நிலையத்தை திறந்து வைத்ததையொட்டி வ.உ.சி பூ மார்கெட் கடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு தற்காலிகமாக மாநகராட்சி வணிக வளாகம் முன்பு கடைகள் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
    • இதனால் வணிக வளாகத்தில் கடை எடுத்து தொழில் நடத்தி வரும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் போஸ் மைதானத்தில் தற்காலிக வ.உ.சி. பூ மார்க்கெட் இயங்கி வந்தது. இதற்காக தற்காலிக ஷெட் போடப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தது.

    தற்காலிக கடைகள்

    இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் பழைய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட ஈரடுக்கு பஸ் நிலையத்தை திறந்து வைத்ததையொட்டி வ.உ.சி பூ மார்கெட் கடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு தற்காலிகமாக மாநகராட்சி வணிக வளாகம் முன்பு கடைகள் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

    இதற்கு பூ மார்க்கெட் வியாபாரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வேறு வழி இல்லாமல் அங்கேயே கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் வணிக வளாகத்தில் கடை எடுத்து தொழில் நடத்தி வரும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வியாபாரம் பாதிப்பு

    காலை மற்றும் மாலை நேரங்களில் வளாகத்திற்குள் கடுமையான போக்குவரத்து நெரிசலும், பூக்கடைகளும் இருப்பதால் வாடிக்கையாளர் தங்கள் கடைக்கு வருவது பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் கடை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உடனடியாக பூக்கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    தர்ணா போராட்டம்

    ஆனால் சேலம் மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் வணிக வளாக வியாபாரிகள் கடையை காலி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை கண்டித்து வணிக வளாக வியாபாரிகள் இன்று வணிக வளாகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது சேலம் மாநகராட்சி வணிக வளாகப் பகுதியில் பூக்கடைகள் வைக்க அனுமதி அளித்ததால் தங்கள் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

    வாடிக்கையாளர் குறைவு

    இது குறித்து சேலம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கும் எடுக்கப்படவில்லை. மாநகராட்சி வணிக வளாகமும், பூ மார்க்கெட்டும் ஒரு இடத்தில் செயல்படுவதால் வணிக வளாகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு வணிக வளாகத்தில் உள்ள பூக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் வணிக வளாகத்தை காலி செய்யப் போவதாகவும் அறிவித்தனர்.

    பேச்சுவார்த்தை

    இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கடை உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பூ மார்க்கெடடை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதுவரையில் பொறுத்துக் கொள்ளுமாறு தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் பேச்சில் உடன்படாத வியாபாரிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சங்ககிரி அருகே துளுக்கன் காட்டை சேர்ந்த வாலிபர் தனியார் நூல் மில்லில் கூலி வேலை செய்து வந்தபோது சங்ககிரியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்து.
    • கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதி சங்ககிரி- ஈரோடு பிரிவு சாலையில் உள்ள விநாயகர் கோவில் வைத்து பெற்றோர்க ளுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே துளுக்கன் காட்டை சேர்ந்த வாலிபர் தனியார் நூல் மில்லில் கூலி வேலை செய்து வந்தபோது சங்ககிரியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்து.

    காதல்

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய கொள்ள முடிவு செய்து கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதி சங்ககிரி- ஈரோடு பிரிவு சாலையில் உள்ள விநாயகர் கோவில் வைத்து பெற்றோர்க ளுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.

    நாளடை வில் இது பற்றி இரு வீட்டு பெற்றோர்க ளுக்கும் தெரிந்ததை அடுத்து ஏற்றுக் கொள்ளாத தால் வாலிபர் சிறுமியை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். இந்த நிலையில் கர்ப்பமான சிறுமி கடந்த 9-ந் தேதி பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அங்கு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    போக்சோ பாய்ந்தது

    இது குறித்து அரசு மருத்துவமனை அதிகாரிகள் சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் வளர்மதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி ஆகியோர் குழந்தை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். இரவு 8.30 மணியளவில் கண்ணன் வீட்டிற்கு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
    • பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 பவுன் தங்கம், 200 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மூலப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (32). கார்பென்டராக வேலை செய்து வருகிறார்.

    நேற்று காலை வழக்கம் போல் கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். இரவு 8.30 மணியளவில் கண்ணன் வீட்டிற்கு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

    அதிர்ச்சியடைந்த கண்ணன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 பவுன் தங்கம், 200 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து கண்ணன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      வாழப்பாடி:

      மத்திய அரசின் ஆயுஷ்மான் பவ- சேவா பக்வாடா திட்டத்தின் கீழ், ஆயுஷ் நல வாழ்வு சித்த மருத்துவ முகாம், வாழப்பாடி அருகே மாரியம்மன்புதூரில் நடைபெற்றது.

      இம்முகாமில், வாழப்பாடி அரசு சித்த மருத்துவர் செந்தில்குமார், தொற்றா நோய்கள் சிகிச்சையில் சித்த மருத்துவத்தின் பங்கு, நிலவேம்பு கசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கான ஆயுஷ் மருத்துவ முறைகள் குறித்து விளக்கினார். யோகா பயிற்சியாளர் அருள் மணிகண்டன், பொதுமக்க ளுக்கு எளிய முறை யோகா பயிற்சி அளித்தார்.

      இந்த முகாமில், ஒன்றிய குழு உறுப்பினர் உழவன் முருகன் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு கபசுர குடிநீர், உடல் மற்றும் மன நல விழிப்புணர்வு கையேடுகள், வலி நிவாரணிகள் வழங்கப்பட்டன.

        சேலம்:

        சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. நேற்று ஆய்வு செய்தார்.

        பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

        உதான் -5 திட்டத்தின் கீழ் சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்க 2 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. வருகிற 16-ந்தேதி முதல் அலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெங்களூரு-சேலம் - கொச்சின் வழித்தடத்தில் விமா னம் இயக்கப்பட உள்ளது. அதேபோல் கொச்சின்- சேலம்- பெங்களூரு வழித்தடத்தில் மீண்டும் விமானம் இயக்கப்படும்.

        வாரத்தில் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற 5 நாட்களில் விமான சேவை நடைபெறும்.

        இதே போன்று இன்டிகோ நிறுவனம் சார்பில் வருகிற 29-ந் தேதி முதல் பெங்களூரு-சேலம்-ஐதராபாத் வழித்தடத்திலும், மறுமார்க்கமாக மீண்டும் ஐதராபாத்-சேலம்- பெங்களூரு வழித்தடத்திலும் விமானம் இயக்கப்படும். திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமை என வாரத்தின் 4 நாட்களுக்கு இண்டிகோ விமான சேவை நடைபெறும்.

        அதே சமயம் வாரத்தின் 7 நாட்களிலும் சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை அளிக்க இண்டிகோ நிறுவனம் முன் வந்துள்ளது.

        சேலம்- சென்னை விமான சேவை மீண்டும் 29-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு விமான சேவை தொடங்குவதால் தேவையானஅனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

        சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், வர்த்தகர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். சேலத்திற்கு நாள் ஒன்றுக்கு 5 முறை விமானங்கள் வந்து செல்லும் வாய்ப்பு கடும் முயற்சிக்கு பிறகு உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் இரவு நேர விமான சேவையும், சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் வகையிலான சேவைகளும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

        இவ்வாறு எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. கூறினார்.

        இந்த பேட்டியின் போது விமான நிலைய இயக்குனர் ரமேஷ், வக்கீல்கள் லட்சுமணபெருமாள், அய்யப்பமணி, குட்டி, பனமரத்துபட்டி ராஜா, ஆலோசனை குழு உறுபினர் சிங்கால் உள்பட பலர் உடனிருந்தனர்.

        • சங்ககிரியில் வருவாய்த்துறை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
        • சங்ககிரி தாசில்தார் அறிவுடைநம்பி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

        சங்ககிரி:

        சங்ககிரியில் வருவாய்த்துறை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சங்ககிரி தாசில்தார் அறிவுடைநம்பி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

        இதில் இந்திய குடிமகன் அரசு அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடு அறிக்கை, சுற்றறிக்கை, ஆவணம் ஆகியவற்றின் மூலம் எந்தவிதமான தகவலாக இருப்பினும் அதனை உரிய மனு செய்து சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலரிடம் பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

        பேரணி

        தொடர்ந்து பேரணி சங்ககிரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தொடங்கி பவானி சாலை, புதிய எடப்பாடி சாலை வழியாக சென்று மீண்டும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் செந்தில்குமார், தலைமையிடத்து துணை தாசில்தார் மகேந்திரன், வருவாய் ஆய்வாளர் கீதா, பி.எஸ்.ஜி. கல்லுாரி மாணவிகள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அன்புமலர், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

        • தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
        • ஆர்ப்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் சேலம் மாவட்ட துணை தலைவர் ஜான் பெர்ணான்டஸ் தலைமை வகித்தார்.

        மேட்டூர்:

        மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

        ஆர்ப்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் சேலம் மாவட்ட துணை தலைவர் ஜான் பெர்ணான்டஸ் தலைமை வகித்தார். மேட்டூர் வட்ட தலைவர் அம்மாச்சி கண்டன உரை ஆற்றினார். இதில் 100 நாள் வேலை ஊதிய பாக்கியை உடனே வழங்க வேண்டும், பண்டிகை காலம் நெருங்குவதால் தமிழக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மாதந்தோறும் 2-வது செவ்வாய்க்கிழமைகளில் மகாத்மா தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதி திட்டம் சம்பந்தமாக மாற்றுத்திறனாளிகளுக்காக குறை கூட்டம் நடத்த வேண்டும், வீடு, கழிப்பிடம் போன்ற துறை சார்ந்த பயனுள்ள திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

        ஆர்ப்பாட்டத்தில் சங்க பொறுப்பாளர்கள் கோபால், பவுல்ராஜ், நடராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

        • சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது.
        • இத்தகவலை மின் செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

        சேலம்:

        சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிங்கிபுரம், வாழப்பாடி, பெரியகிருஷ்ணாபுரம், கொட்டவாடி, துக்கியாம்பாளையம், அத்தனூர்பட்டி, பேளூர், முத்தம்பட்டி, மண்நாயக்கன்பட்டி, திம்மநாயக்கன்பட்டி, மேற்குராஜாபாளையம், புதுப்பாளையம், பழனியாபுரம், மன்னார்பாளையம், மங்களபுரம், மத்தூர் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

        ×