தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

கடந்த 8-ந் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
Published on

சேலம்:

சேலம் சூரமங்கலம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (47). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 8-ந் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்திய போது ராமநாதன் குடும்பப் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்ததும் அதனால் ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை செய்ததும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com