சாலையோரம் மயங்கி கிடந்தமுதியவர் சிகிச்சை பலனின்றி சாவு

ஜங்ஷன் முருகன் கோவில் அருகே கடந்த 6-ந் தேதி சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சாலையோரம் மயங்கி கிடந்தமுதியவர் சிகிச்சை பலனின்றி சாவு
Published on

அன்னதானப்பட்டி:

சேலம் செவ்வாய்பேட்டை சண்முகா ஜங்ஷன் முருகன் கோவில் அருகே கடந்த 6-ந் தேதி சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்த விவரங்கள் ஏதும் தெரியவில்லை. அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com