சங்ககிரி அருகே 17 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை

சங்ககிரி அருகே துளுக்கன் காட்டை சேர்ந்த வாலிபர் தனியார் நூல் மில்லில் கூலி வேலை செய்து வந்தபோது சங்ககிரியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்து.கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதி சங்ககிரி- ஈரோடு பிரிவு சாலையில் உள்ள விநாயகர் கோவில் வைத்து பெற்றோர்க ளுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.
சங்ககிரி அருகே 17 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை
Published on: 

சங்ககிரி:

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே துளுக்கன் காட்டை சேர்ந்த வாலிபர் தனியார் நூல் மில்லில் கூலி வேலை செய்து வந்தபோது சங்ககிரியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்து.

காதல்

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய கொள்ள முடிவு செய்து கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதி சங்ககிரி- ஈரோடு பிரிவு சாலையில் உள்ள விநாயகர் கோவில் வைத்து பெற்றோர்க ளுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.

நாளடை வில் இது பற்றி இரு வீட்டு பெற்றோர்க ளுக்கும் தெரிந்ததை அடுத்து ஏற்றுக் கொள்ளாத தால் வாலிபர் சிறுமியை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். இந்த நிலையில் கர்ப்பமான சிறுமி கடந்த 9-ந் தேதி பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அங்கு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

போக்சோ பாய்ந்தது

இது குறித்து அரசு மருத்துவமனை அதிகாரிகள் சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் வளர்மதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி ஆகியோர் குழந்தை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com