என் மலர்
ராமநாதபுரம்
- கடந்த சனிக்கிழமை மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர்.
- படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. இதில் 3,500 மீனவர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். முழுமையாக மீன்பிடி தொழிலை நம்பியே இவர்களின் வாழ்வாதாரம் உள்ளது.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கி இன்றுடன் 5-வது நாளாக நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக ரூ.10 கோடி மதிப்பிலான இறால் மீன்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 1-ந்தேதி ராமேசுவரத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ராமநாதபுரத்தில் ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க சென்ற முதியவரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி நடந்துள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மூலக் கொத்தளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (61). இவர் ராமநாதபுரம் சாலைத் தெருவில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க வந் தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பெயர் முகவரி தெரியாத நபர் பணம் எடுத்து தருவதாக கூறியதையடுத்து கார்டை கொடுத்து பணம் ரூ.20,000 எடுத்து தருமாறு சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
அந்த நபர் கார்டை மெசினில் சொருகி விட்டு பணத்தை டைப் செய்ததாகவும், சுப்பிரமணியன் ரகசிய எண்ணை பதிவு செய்துள்ளார். அப்போது பணம் வரவில்லை எனக் கூறி அந்த நபர் ஏற்கனவே வைத்திருந்த ஒரு போலியான ஏ.டி.எம். கார்டை கொடுத்து விட்டு சென்று விட்டார். பின்பு சுப்பிரமணியன் அரண்மனை பகுதியில் இருந்தபோது அவரது செல் போனிற்கு ரூ.42,000 பணம் எடுத்திருப்பதாக குறுந்தக வல் வந்தது.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன் ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.
- பரமக்குடி நகர் பகுதியில் வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.
- 30-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி.க்கள் மூலம் ஆற்றுப்பகுதியில் உள்ள நாணல்கள், குப்பைகளை அகற்றி வருகின்றனர்.
பரமக்குடி
பரமக்குடி நகர் தெளிச்சாத்தநல்லூர் முதல் காக்காதோப்பு வரை வைகை ஆற்றினை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் தொடங்கி வைத்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன், முருகேசன் எம்.எல்.ஏ., பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது.கருணாநிதி, துணைத்தலைவர் குணா, பொதுப்பணித் துறை வருவாய்த்துறை ஊராட்சித்துறை நகராட்சி நிர்வாகம், தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், பரமக்குடி வியாபாரிகள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டனர். 30-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி.க்கள் மூலம் ஆற்றுப்பகுதியில் உள்ள நாணல்கள், குப்பைகளை அகற்றி வருகின்றனர்.
- பெண்களுக்கான கைப்பந்து போட்டியில் பரமக்குடி அணி முதலிடம் பெற்றது.
- சென்னை முகமது ஏ.ஜே. பொறியியல் கல்லூரியின் இயக்குனர் சதக் தம்பி நன்றி கூறினார்.
ராமநாதபுரம்
கீழக்கரை முகமது சதக் அறக்கட்டளை 50-வது ஆண்டு பொன் விழாவை யொட்டி ராமநாதபுரம் மாவட்ட பெண்களுக்கான கைப்பந்து போட்டி முகமது சதக் விளையாட்டு மைதா னத்தில் நடைபெற்றது. போட்டியில் மாவட்டத்தில் இருந்து 20 அணிகள் நாக் அவுட் முறையில் மோதின.
அதில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் தங்க பதக்கத்தை பரமக்குடி ஆர்.எஸ்.வி.சி. அணியினரும் 2-ம் பரிசு ரூ.8 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை ராமநாதபுரம் வேலு மனோ கரன் கலை மற்றும் அறி வியல் கல்லூரி அணி மாணவிகளும் 3-ம் பரிசு ரூ.6 ஆயிரம் மற்றும் வெண் கல பதக்கத்தை கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி அணி மாணவிகளும் 4-ம் பரிசை ராமநாதபுரம் செய்யது அம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளும் கைப்பற்றினர்.
பரிசளிப்பு விழாவுக்கு முகமது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப் சாகிப் தலைமை தாங்கினார்.அறக்கட்டளை நிர்வாக இயக்குனர்கள் ஹாமிது இபுராகிம், ஹபீப் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நவ்ரா பாத்திமா வரவேற்றார். முடிவில் சென்னை முகமது ஏ.ஜே. பொறியியல் கல்லூரியின் இயக்குனர் சதக்தம்பி நன்றி கூறினார்.
இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முஹைதீன் இப்ராகிம், கவுன்சிலர் முக மது காசிம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உலக மனநல தினத்தை முன்னிட்டு பி.வி.எம் மனநல காப்பகத்தில் கருத்தரங்கம் நடந்தது.
- டாக்டர் அப்துல் ரசாக் விளக்கவுரையாற்றினார்.

காப்பகத்தில் இருப்பவர்களுக்கு ரோட்டரி சங்க தலைவர் சுல்தான் சம்சுல் கபீர் உணவு வழங்கினார்.
ராமநாதபுரம்
உலக மனநல தினத்தை முன்னிட்டு கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் ராமநாதபுரம் பாரதிநகரில் செயல்படும் பி.வி.எம். மனநலக்காப்பகத்தில் மனநலம் குறித்த கருத்த ரங்கம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கட்டடக்கலை நாயகன் விருதாளரும், கீழக்கரை ரோட்டரி சங்க தலைவரும், கீழக்கரை,ராமநாதபுரம், தேவிபட்டினம், தொண்டி, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் செயல்பட்டு பல்வேறு கட்டடங்களை கட்டி வரும் மெரீனா காப்பகத்தில் இருப்பவர்களுக்கு ரோட்டரி சங்க தலைவர் சுல்தான் சம்சுல் கபீர் உணவு வழங்கினார்.
கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளரும், ரோட்டரி செயலாளருமான எபன் பிரவீன் குமார், ரோட்டரி சங்க பொரு ளாளரும், முன்னாள் தலைவருமான சுப்ரம ணியன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், அரசு வட்டார மருத்துவ அலுவலருமான செய்யது ராசிக்தீன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், அப்பா மெடிக்கல்ஸ் உரிமையாளருமான டாக்டர் சுந்தரம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கீழக்கரை நகர் உப தலைவர் சபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி மாஸ்டர் ரெடிமேட்ஸ் உரிமையாளர் செல்வ நாராயணன், மூத்த வழக்க றிஞரும், ராமநாதபுரம் இலவச சட்ட மைய வழக்கறி ஞருமான கேசவன், மதுரா பவர்ஸ் நிறுவனர் சித்ர வேலு, மெரீனா கன்ஸ்ட்ரக்சன் பொறியாளர் செய்யது முக்தா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பி.வி.எம் மனநலக்காப்பக நிறுவனர் தேசிய விருதாளர் டாக்டர் அப்துல் ரசாக் உலக மனநல தினத்தை பற்றி விளக்கவுரையாற்றினார்.பி.வி.எம் மனநலக்காப் பகத்தின் தலைமை பொறுப்பாளர் உம்முல் சல்மா நன்றி கூறினார்.பி.வி.எம் மனநலக்காப் பகத்தில் உள்ள பயனாளிகளுக்கு அன்னதானம், சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பி.வி.எம். மனநலக் காப்பகத்தின் திறப்பு விழா சிறப்பு மலரும், நினைவு கேடயமும் வழங்கப்பட்டது.
- உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.1763 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இந்த விழாவில் கலெக்டர், துணை இயக்குநர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் மாற் றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் திட்டம் தொடர்பாக அரசுத் துறைகள் மாற்றுத்திறனாளி கள் கூட்டமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்ப டுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் 34,215 மாற் றுத்திறனாளிகளுக்கு அடை யாள அட்டை வழங்கப்பட் டுள்ளது. இதில் 16,053 மாற்றுத்திறனாளிகளுக்கு உதித் அட்டை வழங்குவதற்கு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் ஒற்றைச்சாளர முறையில் மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை பெறுவ தற்கும் உதித் கணிணியில் பதிவேற்றம் செய்வதற்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப் பட்டு வருகிறது. மாற்றுத்திற னாளிகளின் கோரிக்கை களை பெறுவதற்கு வாரந் தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கென அரசுத்துறைகள் சார்பாகவும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பாகவும் பல்வேறு பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றைய தினம் நடைபெறும் நிகழ்ச்சியில் உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.1,763 கோடி மதிப்பில் இரண்டாம் கட்ட மாக மாற்றுத்திறனாளிகள் உரிமைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசி னார்.
இக்கூட்டத்தில் மாற்றுத்தி றனாளிகள் நலத்துறை துணை இயக்குநர் சரளா, மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் பாலசுந்த ரம், பயிற்றுநர்கள் தேவ குமார், சங்கர் சகாயராஜ், மாவட்ட துறை அதிகாரிகள் ஜெரோம், ராஜராஜன், அழகு மன்னன், சுஜித்சிங் உள்ளிட்ட அரசு அலுவலர் கள் தன்னார்வ தொண்டு நிறு வனங்களை சேர்ந்த பி.வி.எம் அறக்கட்டளை, ஜஸ்ட் ஏஞ்சல், ஸ்பீடு, அன் பாலயா, விஜய் ஹீயூ மன் சர்வீஸ், சி.எஸ்.ஐ. ராமேஸ்வ ரம், சி.எஸ்.ஐ. நேசக்கரங்கள், ஓரிக்கோட்டை கருணை இல்லம், ஏர்வாடி செல்ல முத்து அறக்கட்டளை, அருள் சான்று பரமக்குடி, செஞ்சோலை மனநலக் காப்பகம், மாற்றுத்தி றனாளி கள் சங்கத்தைச் சேர்ந்த வேலாயுதம், ஆனந்தி உட்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த பலரும் பங்கேற்றனர்.
- நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து ராமேசுவரத்திற்கு ரெயில்கள் இயக்க வேண்டும்.
- வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட வர்த்தகர் சங்க தலைவர் ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் உள்ள ஆன்மிக தலங்களில் காசியும், அதற்கு அடுத்தபடியாக தென் இந்தியாவில் தமிழகத்தில் உள்ள ராமேசுவரமும் உள்ளது. ராமேசுவரத்தில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படாமல் உள்ளது.குறிப்பாக தலைநகர் புது டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து ரெயில்கள் இயக்கப்படாமல் உள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து ராமேசுவரம் வர நினைப்பவர்கள் நேரடி ரெயில் சேவை இல்லாமல் சென்னை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு வந்து வேறு ரெயில்களில் மாறி ராமேசுவரம் வரவேண்டிய நிலை உள்ளது. வட மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ராமேசுவரம் வருகின்றனர். தமிழக பயணிகளும் வட மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ராமேசுவரத்திற்கு நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து நேரடி ரெயில்களை இயக்க வேண்டும். இது குறித்து ரெயில்வே வாரியத்திற்கும், ரெயில்வே அமைச்சருக்கும் பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ராமேசுவரத்திற்கு கூடுதலாக வந்தே பாரத் ரெயில்கள் இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- குழந்தையின் பெயரை பிறப்பு சான்றிதழில் பதிய 2024-ம் ஆண்டுவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று. ஓட்டுநர் உரிமம்) விண்ணப்பிக்கலாம்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் கூறியதாவது:-
பிறப்பு பதிவு குழந்தை யின் முதல் உரிமை, பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு இறப்பு பதிவு சட்டம், 1969 வழிவகை செய்கிறது.
பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றி தழ் ஆகும். பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட், விசா உரிமம், அயல்நாட்டில் குடியுரிமை பெற இன்றியமையாத ஆவணமாக உள்ளது.
ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த குழந்தை யின் பிறப்பு பதிவு செய்யப் பட்ட 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதி மொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாள ரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம்.
12 மாதங்களுக்குப் பின் 15 வருடங்களுக்குள் ரூ.200 தாமத கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரினை பதிவு செய்திடலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது.
இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறி வுரைபடி, 1.1.2000-க்கு முன்னர் பதிவு செய்யப் பட்டுள்ள பிறப்புகளுக்கும், 1.1.2000-க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கட்டுள்ளது.
பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி, மாநகராட்சி அல்லது சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று. ஓட்டுநர் உரிமம்) விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறான கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது என இந்திய பிறப்பு, இறப்பு பதிவா ளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ராமநாதபுரம் அருகே கல்லூரி பஸ் மோதி டிரைவர் பலியானார்.
- இது குறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மங்களேஸ்வரி நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது40), டிரைவர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் கீழக்கரைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் வந்த தனியார் கல்லூரி வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் கணேசன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராமநாதபுரம் அரண்மனை, உப்பூர் பகுதியில் நாளை மின் தடை ஏற்படுகிறது.
- இந்த தகவலை மின்சார உதவி செயற்பொறியாளர்கள் பாலமுருகன், சித்தி விநாயகர் மூர்த்தி ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (19-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆர். எஸ். மடை துணை மின் நிலையத்தில் உள்ள டவுன்-2, டவுன்-3, உயர் மின் அழுத்த பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் இதன் வழியாக மின் விநியோகம் செய்யப்படும் பகுதியான அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றி யுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன்கோயில் சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைகள் வீதி, கே.கே. நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு சிங்கார தோப்பு, பெரியார் நகர், லாந்தை.
அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோ னீயர் சுற்று பகுதிகளில், பெரிய கருப்பன் நகர், கோட்டை மேடு, உப்பூர், கடலூர், ஊரனங்குடி, சித்தூர்வாடி, காவனூர், கலங்காபுளி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இந்த தகவலை மின்சார உதவி செயற்பொ றியாளர்கள் பாலமுருகன், சித்தி விநாயகர் மூர்த்தி ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது.
- பசும்பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத் தத்தப்படும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரின் 116-வது பிறந்தநாள் விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை யொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் தங்கதுரை முன்னிலையில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை யில் ஆேலாசனை கூட்டம் நடந்தது.
இதில் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் விழா வினை முன்னிட்டு மேற்கொள்ளப் பட்டு வரும் பணிகள் தொடர்பாக அலுவலர்க ளுடன் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. ஒவ்வொரு வருடமும் அக்.
30-ந் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்தநாள், குருபூஜை விழா அரசு விழாவாக கொண்டா டப்பட்டு வருகிறது.
அன்றைய தினம் தமிழக அரசின் சார்பில் பசும் பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் நினைவி டத்தில் மரியாதை செலுத் தத்தப்படும். அன்றைய தினம் பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் மரியாதை செலுத்தப் படும். பசும்பொன்னுக்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் சென்று வர ஏதுவாக அப்பகுதியில் வாகன நிறுத்தும் இடம், முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழி, பொதுமக்கள் செல்லும் வழி, சாலைகளை சீர மைத்தல், மின் இணைப்பு வசதி, அன்னதானம் நடை பெறும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உரிய அனுமதிகள் வழங்கப் படுவதை உறுதி செய்தல்.
பசும்பொன் பகுதியில் சுற்றி உள்ள பகுதிகளில் கண்காணிப்பு காமிரா பொருத்துதல், குடிநீர் வசதி போன்றவைகள் தொடர்பு டைய அலுவலர்கள் தங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட பணி களை விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கலெக்டர் விஷ்ணுசந்திரன், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் விழா நடை பெறும் இடங்களை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்ட னர்.
- பா.ம.க அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
- திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம் கான் வரவேற்றார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்டம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர் சந்தானதாஸ், மாவட்ட அமைப்புச் செயலாளர் சதாம் ராஜா, அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம் கான் வரவேற்றார். நிகழ்ச்சியில் புதிய மாவட்ட இளைஞர் சங்க அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நகர் லட்சுமணனுக்கு சந்தான தாஸ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் புதிய கிளைகள் அமைக்க வேண்டும், கிளைகள் அனைத்திலும் கொடி ஏற்ற வேண்டும், இளைஞர் சங்கங்களை பலப்படுத்த வேண்டும், ராமநாதபுரம் மாவட்டம் வைகை நீர் ஒப்பந்தத்தின்படி 12-ல் 7 பங்கு நீரை தமிழக அரசு ராமநாதபுரம் மாவட் டத்திற்கு கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறை வேற்றப் பட்டது.
பசுமை தாயகத்தின் மாநில துணைச் செயலாளர் கர்ண மகா ராஜா, மாவட்ட துணை செயலாளர் ராசிக், ராமநாத புரம் நகர செயலாளர் பாலா, மண்ட பம் ஒன்றிய செய லாளர் வெங்கடேஷ், கீழக்கரை நகர செயலாளர் லோக நாதன், மாவட்ட தொழிற் சங்க செயலாளர் லட்சு மணன், திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், நகர துணை செயலாளர் கார்த்திக், இளைஞர் சங்க செயலாளர் துல்கர், இளைஞர் சங்க அமைப் பாளர் ராம் நகர் லட்சுமணன் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராகிம்,
சிறுபான்மை பிரிவு செயலாளர் வாப் பாசா, மாணவர் சங்க செயலாளர் சந்தோசம், மாவட்ட மாணவர் சங்க அமைப் பாளர் கபில்தேவ், கடலாடி ஒன்றிய செயலாளர் இரு ளாண்டி, கடலாடி ஒன்றிய துணை செயலாளர் முனிய சாமி, மண்டபம் ஒன்றிய துணை செயலாளர் சாகுல், மண்டபம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் முனியசாமி, மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறியாளர் முகமது ஷரீப் நன்றி கூறி னார். புதிய மாவட்ட இளைஞர் சங்க அமைப்பா ளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நகர் லட்சுமணனுக்கு மாவட்ட தலைவர் சந்தானதாஸ் சால்வை அணிவித்து வரவேற்றார்.






