search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.வி.எம் மனநலக்காப்பகத்தில் கருத்தரங்கம்-நலத்திட்ட உதவிகள் வழங்கல்
    X

    சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    பி.வி.எம் மனநலக்காப்பகத்தில் கருத்தரங்கம்-நலத்திட்ட உதவிகள் வழங்கல்

    • உலக மனநல தினத்தை முன்னிட்டு பி.வி.எம் மனநல காப்பகத்தில் கருத்தரங்கம் நடந்தது.
    • டாக்டர் அப்துல் ரசாக் விளக்கவுரையாற்றினார்.



    காப்பகத்தில் இருப்பவர்களுக்கு ரோட்டரி சங்க தலைவர் சுல்தான் சம்சுல் கபீர் உணவு வழங்கினார்.

    ராமநாதபுரம்

    உலக மனநல தினத்தை முன்னிட்டு கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் ராமநாதபுரம் பாரதிநகரில் செயல்படும் பி.வி.எம். மனநலக்காப்பகத்தில் மனநலம் குறித்த கருத்த ரங்கம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு கட்டடக்கலை நாயகன் விருதாளரும், கீழக்கரை ரோட்டரி சங்க தலைவரும், கீழக்கரை,ராமநாதபுரம், தேவிபட்டினம், தொண்டி, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் செயல்பட்டு பல்வேறு கட்டடங்களை கட்டி வரும் மெரீனா காப்பகத்தில் இருப்பவர்களுக்கு ரோட்டரி சங்க தலைவர் சுல்தான் சம்சுல் கபீர் உணவு வழங்கினார்.

    கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளரும், ரோட்டரி செயலாளருமான எபன் பிரவீன் குமார், ரோட்டரி சங்க பொரு ளாளரும், முன்னாள் தலைவருமான சுப்ரம ணியன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், அரசு வட்டார மருத்துவ அலுவலருமான செய்யது ராசிக்தீன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், அப்பா மெடிக்கல்ஸ் உரிமையாளருமான டாக்டர் சுந்தரம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கீழக்கரை நகர் உப தலைவர் சபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தி மாஸ்டர் ரெடிமேட்ஸ் உரிமையாளர் செல்வ நாராயணன், மூத்த வழக்க றிஞரும், ராமநாதபுரம் இலவச சட்ட மைய வழக்கறி ஞருமான கேசவன், மதுரா பவர்ஸ் நிறுவனர் சித்ர வேலு, மெரீனா கன்ஸ்ட்ரக்சன் பொறியாளர் செய்யது முக்தா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    பி.வி.எம் மனநலக்காப்பக நிறுவனர் தேசிய விருதாளர் டாக்டர் அப்துல் ரசாக் உலக மனநல தினத்தை பற்றி விளக்கவுரையாற்றினார்.பி.வி.எம் மனநலக்காப் பகத்தின் தலைமை பொறுப்பாளர் உம்முல் சல்மா நன்றி கூறினார்.பி.வி.எம் மனநலக்காப் பகத்தில் உள்ள பயனாளிகளுக்கு அன்னதானம், சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.

    விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பி.வி.எம். மனநலக் காப்பகத்தின் திறப்பு விழா சிறப்பு மலரும், நினைவு கேடயமும் வழங்கப்பட்டது.


    Next Story
    ×